கேட்ராக்ட் வர எது காரணம்? எப்படி தடுக்கலாம் ? இதப் படிங்க

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

நமது கண்களின் லென்ஸும் கேமராவப்போலத்தான். தூரமாக தெரியும் பொருட்களையும் குவித்து தெளிவாக காண்பிக்கிறது.

40 வயது ஆனபின்னே சிலருக்கு கண்பார்வை மெல்ல குறைய ஆரம்பிக்கும். இந்தியாவில் ஏறக்குறைய 50-80 சதவீத மக்கள் கேடராக்டால் கண் பார்வையை இழக்கிறார்கள். இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாததே. கண்பார்வை இழக்க காரணங்களும் அதன் தடுப்புமுறைகளும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேடராக்ட் என்றால் என்ன?

கேடராக்ட் என்றால் என்ன?

பொதுவாக நமது கண்களிலுள்ள லென்ஸ் புரோட்டின் மற்றும் நீரினால் ஆனது. புரோட்டின் ஒரே மாதிரியான வரிசையில் உருவாகிக் கொண்டிருக்கும். இதனால்தான் நமது பார்வை சீராகவும், தெளிவாகவும் தெரிகிறது.

வயது ஆக ஆக அந்த புரொட்டின் சீராக உருவாகாமல் ஒரே இடத்தில் மாறி மாறி கூட்டமாக உருவாகும்போது அது திசுப்போல் உருவாகிறது. அதுதான் கேடராக்ட். அது புரோட்டின்சேர சேர வளர்ந்து பெரிதாக காண்பிக்கிறது. இதனால் கண்பார்வை தெரியாமல் போய்விடும்.

கேடராக்டின் அறிகுறி :

கேடராக்டின் அறிகுறி :

பார்வை மங்கலாக தெரியும். வெளிச்சத்தை அல்லது சூரியனை பார்க்கும் போது, இரவுகளில் வாகன விளக்குகளை பார்க்கும்போது அதிகப்படியாக கண் கூசும். திடீரென மாறு கண் ஏற்படும்.

கேடராக்டின் வகைகள் :

கேடராக்டின் வகைகள் :

சப்-கேப்ஸுலார் கேடராக்ட் :

இது லென்ஸின் பின்பகுதியில் உண்டாகிறது. அதிகபடியான ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது இந்த வகை கெடராக்ட் வரலாம்.

நியூக்ளியர் கேடராக்ட் :

இது லென்ஸின் மையப்பகுதியிலுள்ள நியூக்ளியஸில் ஏற்படும். வயதாவதால் உண்டாகும்.

கார்டிகல் கேடராக்ட் :

இது லென்ஸை சுற்றியும் இருக்கும் கார்டெக்ஸ் பகுதியில் உண்டாகும்.

 கேடராக் உண்டாக காரணங்கள் :

கேடராக் உண்டாக காரணங்கள் :

சர்க்கரை வியாதி, மரபணுக்கள், சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள், உடல் பருமன், புகைப் பழக்கம், ஸ்டீராய்டு மருந்துகள், கண்களில் அடிபடுவதால், அதிக அளவு மையோபியா (கிட்டப்பார்வை) இவையெல்லாம் கேடராக்ட் உருவாவதற்கான காரணங்கள்.

தடுக்கும் முறைகள் :

தடுக்கும் முறைகள் :

விட்டமின் சி நிறைந்த உணவுகள், நெல்லிக்காய், ஒமேகா-3 அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகள் கேடராக்ட் வராமல் தடுக்கும்.

வெளியே செல்லும் போது கண்களை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க சன் கிளாஸ் அணிவது முக்கியம்.

தடுக்கும் முறைகள் :

தடுக்கும் முறைகள் :

விட்டமின் ஈ நிறைந்த உணவுகள், ல்யூடின், ஜியாஜாந்தைன் போன்ற கரோடினாய்டு நிறைந்த உணவுகள் கேடராக்டை தடுக்கும்.
மீன், சூரிய காந்தி எண்ணெய், பாதாம், எல்லா வித கீரைகள் கேடராக்ட் வராமல் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Causes, Signs, and Symptoms of Cataract

Causes, Signs, and Symptoms of Cataract.
Story first published: Wednesday, August 31, 2016, 14:05 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter