மெனோபாஸ் அல்லாமல் பெண்களுக்கு திடீரென நடு ராத்திரியில் வியர்த்து கொட்டுவது எதனால்?

பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஹாட் ஃப்ளாஷ் எனப்படும் பாதிப்பு ஊண்டாவது இயல்பானது. இது முழுக்க ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனை. அது தவிர வேறு காரணங்களும் உண்டு.

Subscribe to Boldsky

பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் ஆயுள் முழுவதும் பலவித பாதிப்பிற்குள்ளாகிறார்கள். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்பவர்கள்.

Causes for hot flash other than menopause

பருவ வயதினில் தொடங்கி மாதவிடாய் முடியும் வரை அவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும். அதுவும் 50 வயதிற்கு பின் மெனோபாஸ் நிற்கும் சமயத்தில் ஹாட் ஃப்ளாஷ் வருவதுண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஹாட் ஃப்ளாஷ் :

மாதவிடாய் நிற்கும் சமயத்தில் உண்டாகும் அறிகுறியே ஹாட் ஃப்ளாஷ். படபடப்பு, தோல் வறட்சி, மன உளைச்சல், உடலில் திடீர் வெப்பம் உருவாதல்.

தொடர்ந்து சில்லிடும் நிலை உருவாதல். இதனால் காரணம் தெரியாத பயம், திடீரன அதிக வியர்த்து கொட்டுதல் இதனால் பாதிக்கப்பட்டு தூக்கம் தடைபடும்.

 

மெனோபாஸ் மட்டுமா காரணம்

இது மெனோபாஸ் நிற்கும் சமயத்தில் வரும் அறிகுறிகள். அதனை தடுக்க நல்ல மகிழ்ச்சியான மன நிலை மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் போதும்.

ஆனால் மெனோபாஸ் தவிர வேறு காரனங்களாலும் இந்த பிரச்சனை உண்டாகும் . எவையென பார்ப்போம் .

 

அதிக மாத்திரைகளின் பக்க விளைவு :

மன அழுத்தம் மற்றும் உளைச்சலுக்காக மாத்திரை எடுத்துக் கொள்பீர்களென்றால் இதன் பக்க விளைவாலும் ஹார் ஃப்ளாஷ் வருவதுண்டு.

உடல் பருமன் :

உடலிலுள்ள அளவுக்கதிகமான கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை பாதிக்கின்றது. இது ஹார் ஃப்ளாஷை உண்டு பண்ணும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உணவு அலர்ஜி :

பால், வேக்கடலை போன்ற உணவு அலர்ஜி இருப்பவர்களுக்கு ஹாட் ஃப்ளாஷ் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதுபோல் அதிக மது, காஃபியும் ஹாட்ஃப்ளாஷை உண்டாக்கும்.

ஹார்மோன் பாதிப்பு :

உடலில் ஏதாவது ஹார்மோன் ஒழுங்காக செயல்படாமல் பிரச்சனை உண்டானால் ஹாட் ஃப்ளாஷ் வர வாய்ப்புண்டு. குறிப்பாக தைராய்டு ஹார்மோன் பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Causes for hot flash other than menopause

Here are the causes for Hot flashes that are not due to menopause
Please Wait while comments are loading...
Subscribe Newsletter