களாக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சிறுவயதில் நாம் மிகவும் விரும்பி சாப்பிட்ட களாக்காயில் எவ்வளவோ ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. உடலில் பல அற்புத மாற்றங்களை ஏற்படுத்தும் மருத்துவ மகத்துவம் கொண்டுள்ளது களாக்காய்.

Subscribe to Boldsky

"நாளை கிடைக்கும் பலாக்காயை விட, இன்று கிடைக்கும் களாக்காய் பெரியது" என்பது பழமொழி. இந்த பழமொழியை எங்கள் பள்ளிக்கூட கணக்கு வாத்தியார் அடிக்கடி கூறுவார். அளவு என்ற கணக்கில் சிறியதாக இருப்பினும், மருத்துவ குணம் என்ற அளவில் களாக்காய் பெரியது தான்.

Amazing Health Benefits of Carandas

அன்றாடம் நமது உடலில் உண்டாகும் சின்ன, சின்ன கோளாறுகளுக்கு. நல்ல இயற்கை மருந்தாக விளங்குகிறது களாக்காய். இதை நாம் சிறு வயதில் பள்ளிக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே பார்த்திருக்க வாய்ப்பிருந்தது (இன்றும் இருக்கிறதா என தெரியவில்லை).

நாம் மறந்த, நம்மால் (நம்மைவிட்டு) மறைந்துக் கொண்டிருக்கும் மருத்துவ குணம் வாய்ந்த உணவுப் பொருட்களில் இதுவும் ஒன்று....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இரத்த சோகை!

களாக்காய் நிறைய தாது சத்துக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கொண்டிருக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் எ, சி, இரும்புசத்து இரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

பசி, மயக்கம்!

களாக்காய் மந்தமான படி, பிரசவக் காலத்தில் பெண்களுக்கு அதிகம் ஏற்படும் வாந்தி, பித்த எரிச்சல், மயக்கம் போன்றவற்றை தடுக்க கூடியது ஆகும்.

பற்கள், ஈறுகள்!

பற்கள் மற்றும் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவதை களாக்காய் தடுக்க கூடியது. இதிலிருக்கும் வைட்டமின் சி பசியை தூண்டும், ஈரலுக்கு வலிமை சேர்க்கும் மற்றும் மஞ்சள் காமாலை உண்டாகாமல் தடுக்கும்.

தாகம், நாவறட்சி!

களாக்காய் வேர்களை வைத்து அதி தாகம், நாவறட்சிக்கான அருமருந்தை தயார் செய்யலாம். இது தாகத்தையும், நாவறட்சியையும் போக்கக் கூடியது.

களாக்காய் மருந்து செய்முறை!

தேவையான பொருட்கள்:

களாக்காய் செடி வேர் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

செய்முறை!

சம அளவு களாக்காய் வேர் பொடி மற்றும் சர்க்கரை எடுத்துக் கொண்டு நன்கு கலக்கி கொள்ள வேண்டும். இதை காலை, மாலை இருவேளை பால் அல்லது நீரில் கலந்து பருகி வரலாம் அல்லது அபப்டியே சாப்பிடலாம். இது நா வறட்சி, அதி தாகம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்க கூடியது ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Amazing Health Benefits of Carandas

Do you know about the Amazing Health Benefits of Carandas? read here in tamil
Story first published: Thursday, October 20, 2016, 11:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter