For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஜீரண கோளாறை குணபடுத்தும் அதோ முக ஸ்வனாசனா !!

|

வயிறு அடைத்தாற்போலிருந்தால் அல்லது வயிறு அசௌகரியமாக உணர்ந்தால் அது அஜீரணத்தின் அறிகுறியாகும். அதனை அப்படியே கவனிக்காமல் விட்டால் அது அசிடிட்டி, வாந்தி என உருவாக்கி கடைசியில் அல்சர் வரை கொண்டு போய் விடும்.

ஏனெனில் அஜீரணம் என்பது சாதரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு நாள் ஏற்பட்டால் தவறில்லை. ஆனால் அடிக்கடி ஏற்பட்டால் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் அல்லது மருத்துவரை உடனடியாக சென்று கவனிக்க வேண்டும்.

Adho mukha Swanasana to Improve Digestion

உங்களுக்கு அடிக்கடி அஜீரணம் எற்படும்போது என்ன சாப்பிடுகிறீர்கள். காலம் தாழ்த்தி சாப்பிடுகிறீர்களா என பார்த்து சரிசெய்யுங்கள். அது தவிர யோகாவினால் உங்கள் அஜீரணப் பிரச்சனையை சரிப்படுத்தலாம். யோகா உங்கள் உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். என்சைம்களின் சுரப்பை தூண்டும். இதனால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

அதோ முக ஸ்வனாசனா :

அதோ என்றால் முன்னோக்கி, முக என்றால் முகம், ஸ்வன என்றால் நாய். அதாவது நாயைப் போன்ற வடிவத்தில் இந்த ஆசனத்தை செய்யப்படுவதால் சமஸ்கிருதத்தில் இப்பெயர் பெற்றுள்ளது.

செய்முறை :

முதலில் நேராக நிமிர்ந்து நில்லுங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டபின், கால் மற்றும் முட்டிகளை வளைக்காமல் குனியுங்கள்.

நேராக குனியாமல் சற்று முன்னோக்கி படத்தில் உள்ளவாறு குனிந்து உள்ளங்கைகளால் தரையை தொடுங்கள். கைகள் காதை மூடியவாறு வைக்க வேண்டும். உங்கள் கண்கள் வயிறை பார்த்தவாறு அமைய வேண்டும். நன்றாக ஆழ்ந்து மூச்சை வாங்கி விடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வாருங்கள். இது போல் மூன்று முறை செய்யலாம்.

பலன்கள் :

தலைவலியை குணப்படுத்தும். தோள்பட்டை, கால்கள் வலிமை பெறும். ஜீரணம் அதிகரிக்கும். முதுகுத் தண்டு பலம் பெறும்.

குறிப்பு :

இரத்தக் கொதிப்பு, தோள்பட்டை காயம் உள்ளவரகள் இந்த யோகாவை தவிர்க்கவும்.

English summary

Adho mukha Swanasana to Improve Digestion

Adho mukha Swanasana to Improve Digestion
Story first published: Monday, August 22, 2016, 13:03 [IST]
Desktop Bottom Promotion