ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கியம் அளிக்கும் உணவுகள்!!

Subscribe to Boldsky

எல்லா உணவுகளும் எல்லா உடல் பாகங்களுக்கும் நன்மை விளைவிப்பவை அல்ல. ஒவ்வொரு உடல் பாகத்திற்கு வலு சேர்க்கவும், ஆரோக்கியம் அளிக்கவும் தனித்தனி உணவுகளை நாம் நமது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.

இந்த வகையில், கண்ணுக்கு கேரட், எலும்புக்கு பால் உணவுகள், சிறுநீரகத்திற்கு நார்ச்சத்து உணவுகள் என பொதுவாக சில உணவுகளை நாம் அறிந்திருப்போம். ஆனால், உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்பட எந்தெந்த உணவுகளை நாம் நமது உணவு வழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என இனிக் காண்போம்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கருப்பைக்கு ஆலிவ்

காண கருப்பை போலவே இருக்கும் உணவுப் பொருள் ஆலிவ். இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஈ, ஏ மற்றும் செறிவூட்டப்படாத (Unsaturated) கொழுப்பு அமிலங்கள் இனப்பெருக்க மண்டலத்திற்குக் வலுவளிக்கிறது.

விரைகளுக்கு அத்திப்பழம்

ஆண்களின் இனப்பெருக்க உறுப்பான விரைகளுக்கு அத்திப்பழம் சிறந்த உணவு. அத்திப்பழத்தில், ஜின்க் அதிகம் உள்ளது, இது ஆண்களின் உடலுறவு வலிமை அதிகரிக்க உதவுகிறது.

மூளைக்கு வால்நட்ஸ்

பார்க்க மூளையை போலவே தோற்றமளிக்க கூடியது வால்நட். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமில சத்து அதிகம். இது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளையில் எந்த சேதமும் ஏற்படாமல் காக்க செய்கிறது. மேலும், இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது.

சிறுநீரகத்திற்கு மொச்சைக் கொட்டை

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு மொச்சை ஓர் சிறந்த உணவாக திகழ்கிறது. பகல் வேளையில் மொச்சை உட்கொள்வது சிறுநீரகத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.

சர்க்கரைவள்ளி

சர்க்கரைவள்ளி கிழங்கு கணையத்திற்கு மிகவும் நல்ல உணவு. இது உடலில் சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவு.

நுரையீரலுக்கு திராட்சை

நுரையீரலில் ஏற்படும் அழற்சியை போக்க திராட்சை உதவுகிறது. மேலும் நுரையீரலின் வலிமையை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

இதயத்திற்கு தக்காளி

தினமும் தக்காளி ஜூஸ் குடிப்பதால் இதய பாதிப்புகள் மற்றும் நீரிழிவு அபாயம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது .

மார்பகங்களுக்கு ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் மார்பக புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மேலும் சிட்ரஸ் பழங்கள் அனைத்தும் புற்றுநோய் ஏற்படாமல் காக்க உதவுகின்றன.

காதுகளுக்கு காளான்

காளானில் இருக்கும் உயர்தர வைட்டமின் டி காதுகளுக்கு வலு சேர்க்கிறது. வைட்டமின் டி எலும்பின் வலுமையை அதிகரிக்கவும் உதவுகிறது மேலும் காது கேட்கும் திறன் மேம்படவும் இது உதவுகிறது.

வயிற்றுக்கு இஞ்சி

இஞ்சி, வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது. வயிறு கடினமாக உணர்வது, அசிடிட்டி, குமட்டல், வாந்தி என அனைத்து பிரச்சனைகளுக்கும் இஞ்சி நல்ல தீர்வளிக்க கூடிய உணவாகும். மேலும் இது செரிமான மண்டலம் சீராக இயங்கவும் உதவுகிறது.

கண்களுக்கு கேரட்

கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் அவசியமான சத்து. இது கண் பார்வை அதிகரிக்க உதவுகிறது.

எலும்புக்கு கீரை

கீரை உணவுகள் எலும்புக்கு மிகவும் வலிமை தரவல்லது. மேலும் கால்சியம் சத்துக் கொண்ட பால் மற்றும் நட்ஸ் உணவுகளும் எலும்பின் வலுவை அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Various Foods And Its Benefits For Separate Body Organs

Various Foods And Its Benefits For Separate Body Organs . These foods heal and treat many diseases such as avocados for uterus, kidney beans for kidneys etc.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter