For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமற்றது என்று நினைத்து ஒதுக்கிய சில ஆரோக்கியமான உணவுகள்!!!

By Maha
|

தற்போதைய நோய்களின் தாக்கத்தைப் பார்த்து, மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்புவதோடு, அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். அதற்கு முதல் முயற்சியாக தாங்கள் உண்ணும் உணவுகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர். இந்த மாற்றங்களால் இதுவரை உட்கொண்டு வந்த சில உணவுகளை தவிர்த்துவிட்டனர்.

வாழ்நாளைக் குறைக்கும் ஆபத்தான உணவுகள்!!!

குறிப்பாக நெய், சீஸ், பிட்சா, உருளைக்கிழங்கு மற்றும் இதுப்போன்ற சில உணவுகளை ஆரோக்கியமற்றது என்று எண்ணி தவிர்த்து வருகின்றனர். ஆனால் அப்படி நாம் தவிர்க்கும் சில உணவுகளில் உடலுக்கு வேண்டிய சில அத்தியாவசியமான சத்துக்களும் நிறைந்துள்ளன.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் உணவுகள்!!!

எனவே எப்போதும் எந்த ஒரு உணவையும் முழுமையாக தவிர்க்காமல், அதனை அளவாக உட்கொண்டு வந்தால், அதனால் எவ்வித தீமைகளும் விளையப் போவதில்லை.

மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

சரி, இப்போது நாம் ஆரோக்கியமற்றது என்று நினைத்து ஒதுக்கிய அந்த ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

எடையைக் குறைக்க நினைக்கும் பலர் கண்மூடித்தனமாக தவிர்க்கும் ஓர் உணவுப் பொருள் தான் உருளைக்கிழங்கு. ஆனால் உருளைக்கிழங்கை வேக வைத்தோ அல்லது பேக் செய்தோ அளவாக சாப்பிட்டு வந்தால், அதிலிருந்து உடலுக்கு வேண்யை வைட்டமின் பி6, காப்பர், பொட்டாசியம், மாங்கனீசு, நார்ச்சத்து மற்றும் இதர சத்துக்களைப் பெறலாம். எனவே உருளைக்கிழங்கை முழுமையாக தனவிர்க்காதீர்கள்.

சீஸ்

சீஸ்

சீஸில் சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் இருந்தாலும், கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. கால்சியம் எலும்புகளுக்கு நல்லது. இச்சத்து ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் சீஸில் இணைக்கப்பட்ட லினோலிக் அமிலம் என்னும் நல்ல கொழுப்பு உள்ளது. இது புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவின் தாக்கத்தைக் குறைக்கும். மேலும் இந்த அமிலம் கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைத்து, எடையைக் குறைக்கவும் உதவும். அதற்கு இதனை அளவாக அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது நல்லது.

நெய்

நெய்

பலரும் நெய்யில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளதால், இதனை உணவில் சேர்த்தால், உடல் எடை தான் அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நெய்யை உணவில் சேர்த்து வந்தால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் மைக்ரோ ஊட்டச்சத்துக்களான வைட்டமின் கே, இணைக்கப்பட்ட லினோலிக் அமிலம் உள்ளது. அதற்கு இதனை தினமும் ஒரு டீஸ்பூன் சேர்த்து வந்தாலே போதும்.

சாக்லேட்

சாக்லேட்

சாக்லேட் சாப்பிட்டால் முகப்பரு அல்லது ஒற்றைத் தலைவலி வரும் என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். அவையெல்லாம் கட்டுக்கதைகளே. உண்மையில் சாக்லேட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருப்பது போன்ற இதய நோய் மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. மேலும் சாக்லேட்டில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது தான். ஆனால் அது ஸ்டீரிக் அமிலம். இந்த அமிலம் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காது. அதுமட்டுமின்றி சாக்லேட் மூளையில் செரடோனின் அளவை அதிகரித்து மனநிலையை மேம்படுத்தும். சாக்லேட்டில் உள்ள கொக்கோ மிகவும் ஆரோக்கியமானது. எனவே டார்க் சாக்லேட்டை தினமும் ஒரு துண்டு சாப்பிட்டு மகிழ்வதால் எவ்வித தீமையும் நடைபெறப் போவதில்லை என்பதை உணருங்கள்.

பிட்சா

பிட்சா

பிட்சா ஆரோக்கியமற்றது இல்லை. அதற்காக அதனை கடைகளில் வாங்கி சாப்பிட பரிந்துரைக்கவில்லை. மாறாக வீட்டிலேயே மைதாவிற்கு பதிலாக கோதுமை பயன்படுத்தி செய்து சுவையுங்கள். அதிலும் அதில் சிறிது சீஸ் மற்றும் நிறைய காய்கறிகளை சேர்த்து சுவையுங்கள். உங்களுக்கு பிட்சா எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் இந்த பிட்சா செய்முறையைப் படித்து செய்து சுவையுங்கள்.

மில்க் ஷேக்

மில்க் ஷேக்

பலரும் மில்க் ஷேக் குடிப்பது ஆரோக்கியமற்றது என்று நினைக்கிறார்கள். ஆனால் மில்க் ஷேக் செய்யும் போது அதில் கொழுப்பு நீக்கப்பட்ட பாலைப் பயன்படுத்தி செய்தால், உடலுக்கு வேண்டிய கால்சியம், வைட்டமின் பி12, ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்கள் கிடைத்து, எலும்புகளின் வலிமை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். ஆனால் மில்க் ஷேக் செய்யும் போது அதில் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்து கலந்து குடிப்பதே சிறந்தது.

குறிப்பு

குறிப்பு

எனவே எந்த ஒரு உணவுப் பொருளையும் கண்மூடித்தனமாக தவிர்க்காமல், அதன் முழுமையான நன்மை தீமைகளைத் தெரிந்து கொண்டு, எதையும் அளவாக உட்கொண்டு ஆரோக்கியமாக வாழப் பழகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unhealthy Foods That Are Actually Not Bad For You

Here are some unhealthy foods that are actually not bad for you. Read more to know...
Desktop Bottom Promotion