For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தயிர் உட்கொள்வதில் நீங்கள் செய்யும் இந்த தவறுகளால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும்!!!

By John
|

கொழுப்பு உணவுகள், நொறுக்கு தீனிகள், ஃபாஸ்ட் ஃபுட், வறுத்த உணவுகள் என எத்தனையோ காரணங்களால் உடல் எடை அதிகரிக்கும் என நீங்கள் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். ஆனால், நீங்கள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தயிரை உட்கொள்ளும் முறையில் ஏற்படும் தவறினால் கூட உடல் எடை அதிகரிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

இரவு நேரத்தில் தயிரை சாப்பிடலாமா? கூடாதா?

ஆம், தயிர் சாப்பிடும் போது நாம் செய்யும் சில சின்ன சின்ன தவறுகளால் கூட உடல் எடை தாறுமாறாக ஏற வாய்ப்புகள் இருக்கிறதாம். பொதுவாகவே பால் உணவுகளில் வெண்ணெய், நெய் போன்றவை உடல் எடையை அதிகரிக்கும் தன்மையுடையவை. இதில் தயிரும் அடங்கும் என கூறப்படுகிறது....

அழகை பராமரிக்க தயிரை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரிகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்

கலோரிகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்

முன்பு போல இப்பது நாம் பெரிதாய் உடலுக்கு வேலை கொடுத்து உழைப்பது கிடையாது. முன்பு மாடு போல உழைத்ததால் கிலோ கணக்கில் சாப்பிட்டாலும் அது உடலில் கொழுப்பாக தங்காது கரைந்துவிடும். ஆனால், இப்போது மாட்டின் சாணி போல, ஒரே இடத்தில் அமர்ந்து தான் பெரும்பாலானோர் வேலை செய்து வருகிறோம். ஆதலால், கொஞ்சம் அதிகமாக கலோரிகள் சேர்த்து சாப்பிட்டால் கூட உடல் எடையில் கசட்டு மேனிக்கு மாற்றம் ஏற்படும். ஒரு பாக்கெட்டு தயிரில் 100 கலோரிகளும், ஆறு கிராம் புரதமும் தான் இருக்குமாம். ஆனால், உங்களது மதிய வேளை உணவுக்கு தேவையே 200-350 கலோரிகள் தான். இதில் மொத்தமாக நீங்கள் தயிரை சேர்த்துக் கொள்வது உடல் எடை அதிகரிக்க செய்துவிடும்.

பகுதிகளாக பிரித்து உண்ண பழகுங்கள்

பகுதிகளாக பிரித்து உண்ண பழகுங்கள்

சிலர் மதிய உணவில் சாம்பாறம் ரசம், தயிர், பொரியல் என அனைத்தையும் சேர்ந்து சாப்பிடுவார்கள். இதில் தவறொன்றும் இல்லை. அனைத்து சத்துகளும் கிடைக்கும் எனிலும், ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாய் சாப்பிடுவது உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும். எனவே, சாம்பார், ரசம் மதியம் சாப்பிட்டுவிட்டு, மாலை வேளையில் தயிரை பருகலாம், அல்லது நீரில் கலந்து மோராக குடிக்கலாம். இது, உங்கள் உடலுக்கும் நல்லது.

தயிரோடு மற்ற உணவுகளை கலந்து சாப்பிடுவது

தயிரோடு மற்ற உணவுகளை கலந்து சாப்பிடுவது

சிலர், தயிரை வெறுமென பயன்படுத்தாமல், அதில், பழங்கள், நுட்ஸ், பாதாம், போன்ற மற்ற உணவுகளையும் சேர்த்து ருசியாக சாப்பிடும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இது போல சாப்பிடும் போது நாள் முழுக்கு நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரிகளை ஒரே வேளையில் உடலில் சேர்கிறது. இதனால் செரிமான சிக்கல்களும், உடல் எடை அதிகரிப்பும் தான் ஏற்படும்.

கொழுப்பற்ற தயிர்

கொழுப்பற்ற தயிர்

இப்போது சந்தைகளில் ப்ளேவர்கள் சேர்க்கப்பட்ட தயிர், கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் என நிறைய வகைகளில் தயிர்கள் கிடைக்கின்றன. இவற்றில் ருசிக்காக செயற்கை ப்ளேவர்கள் மற்றும் இனிப்பூட்டிகள் சேர்க்கின்றனர். இது, இவர்கள் நீக்கிய கொழுப்பை விட உடலுக்கு தீங்கானது.

புரோபயாடிக்ஸ்

புரோபயாடிக்ஸ்

பசியை தீர்க்கும் பண்புடையது புரோபயாடிக்ஸ். பல்வேறு ஆராய்சிகளும் கூட புரோபயாடிக்ஸ் மிகவும் நல்லது என்று கூறியிருக்கிறது. தயிர் புரோபயாடிக்ஸ் அதிகமுள்ள உணவாகும். பசியாக இருப்பவர்கள் தயிர் சாப்பிட்டால் உடனடியாக பசி அடங்கிவிடும். இதனால், அதிகம் தயிர் சாப்பிடுபவர்களும், தயிரையே டயட்டாக உட்கொண்டு சாப்பிடுபவர்களும் இருக்கின்றனர். ஆனால், இது அதிகரிக்கும் போது, உடல் எடையும் அதிகரிக்கும் என்பதை நீங்கள் மறந்துவிட கூடாது.

ஃபாஸ்ட்புட்களோடு தயிரின் கலப்பு

ஃபாஸ்ட்புட்களோடு தயிரின் கலப்பு

வட இந்தியர்கள் விற்கும் ஃபாஸ்ட்புட்களோடு தயிரும் கலந்து சில உணவுகள் விற்கப்படும். அதை தாஹி (Dahi - தயிர்) என்று பெயர் சேர்த்து விற்பார்கள். பொதுவாகவே ஃபாஸ்ட்புட், மற்றும் நொறுக்கு தீனிகள் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள், இவற்றோடு தயிரும் சேர்த்து சாப்பிடும் போது, உடல் எடை அதிக அளவில் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Yogurt Mistakes That Can Make You Fat

Do you know about the six yogurt mistakes that can make you fat? read here.
Story first published: Wednesday, July 8, 2015, 12:06 [IST]
Desktop Bottom Promotion