For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று தெரியாதா?

By Maha
|

தற்போதைய நவீன சமுதாயத்தில் ஜங்க் உணவுகளின் மீதுள்ள மோகத்தால், உணவுப் பழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய உணவுகள், உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. அதிலும் எவ்வளவு முறை ஜங்க் உணவுகள் ஆரோக்கியமற்றது என்று கூறினாலும், அதை நாம் உட்கொள்ளாமல் இருப்பதில்லை.

ஜங்க் உணவுகளால் மட்டுமின்றி, தவறான உணவுச் சேர்க்கையாலும் நாம் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். ஆனால் நமக்கு எந்த உணவுடன் எதை சேர்க்கக்கூடாது என்பது தெரியாததால், இத்தனை நாட்கள் நம்மை அறியாமல் பின்பற்றி வந்துள்ளோம். இக்கட்டுரையைப் படித்த பின், இனிமேலாவது தவறான உணவுச் சேர்க்கைகளைத் தவிர்த்து, ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவின் போது பழங்கள் அல்லது உணவுக்கு பின் பழங்கள்

உணவின் போது பழங்கள் அல்லது உணவுக்கு பின் பழங்கள்

ஏன்? பழங்களில் உள்ள சத்துக்கள் எளிதில் உடலால் உறிஞ்சப்பட்டு வேகமாக செரிக்கப்படும். ஆனால் இந்த பழங்களை தானியங்களுடனோ அல்லது இறைச்சியுடனோ உட்கொள்ளும் போது, இவை செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதோடு நொதிக்க ஆரம்பித்துவிடுகின்றன. இதனால் இந்த உணவுச் சேர்க்கையை உண்ட பின் குடல் சுவர் பாதிப்பிற்குள்ளாகி, வேறு சில பிரச்சனைகளை உருவாக்குகிறது.

இறைச்சிகளின் புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்

இறைச்சிகளின் புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்

ஏன்? தாரா அல்டர் என்னும் நிபுணர், இறைச்சிகளின் புரோட்டீனுடன், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சேர்த்து உட்கொள்ளும் போது, இவ்விரண்டு உணவுப் பொருட்களிலும் உள்ள உணவுகளில் இருந்து சத்துக்களைப் பெற முடியாமல் போகிறது என்று சொல்கிறார். மேலும் இவைகளை செரிக்க உதவும் இருவேறு செரிமான நொதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு, அதன் காரணமாக வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. எனவே அடுத்த முறை இறைச்சிகளுடன், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளான உருளைக்கிழங்கு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

எலுமிச்சை மற்றும் சளி மருந்து

எலுமிச்சை மற்றும் சளி மருந்து

ஏன்? எலுமிச்சையானது கொழுப்புக்களை குறைக்கும் ஸ்டாட்டின்களை உடைத்தெறியும் நொதிகளைத் தடுக்கும். ஆனால் அப்போது சளி மருந்தான டெக்ஸ்ரோம்த்ரோபனை எடுக்கும் போது, அது இச்செயலில் இடையூறை ஏற்படுத்தி, பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதுவும் மன பிரம்மை மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை உருவாக்கும். எனவே அடுத்த முறை சளி பிடித்துள்ளது என்றால், இந்த உணவுச் சேர்க்கையைத் தவிர்த்திடுங்கள்.

கார்போஹைட்ரேட் மற்றும் தக்காளி

கார்போஹைட்ரேட் மற்றும் தக்காளி

ஏன்? தக்காளியில் அசிட்டிக் ஆசிட் உள்ளது. அத்தகைய தக்காளியை கார்போஹைட்ரேட்டுடன் உட்கொள்ளும் போது, செரிமான பிரச்சனைகள், இரையக உண்குழலிய எதிர்வினை நோய் மற்றும் இதர செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். சிலருக்கு தக்காளியையும், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவையும் ஒன்றாக சாப்பிட்ட பின் மிகுந்த சோர்வை உணரக்கூடுமாம்.

பழங்கள் மற்றும் தயிர்

பழங்கள் மற்றும் தயிர்

ஏன்? தயிருடன் பழங்களை சேர்த்து சாப்பிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுமாம். ஏனெனில் பால் பொருட்கள் இரத்த சேர்க்கை, சளியை ஊக்குவித்தல் மற்றும் அலர்ஜியை மேலும் மோசமாக்கக்கூடியவை. அத்தகைய உணவுப் பொருளுடன் பழங்களை சேர்த்து சாப்பிட்டால், நிலைமை இன்னும் மோசமாகும். எனவே இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீர்கள்.

செரில் மற்றும் பால்

செரில் மற்றும் பால்

ஏன்? பலருக்கும் இந்த விஷயம் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஏனெனில் உலகில் பெரும்பாலானோர் இப்படித் தானே தங்களின் காலை உண்கிறார்கள். இருப்பினும் ஆய்வு ஒன்றில், இவ்விரண்டு உணவுப் பொருட்களிலும் வேகமாக கரையக்கூடிய கார்போஹைட்ரேட் உள்ளதால், செரிமான மண்டலம் அழுத்தத்திற்கு உள்ளாவதோடு, இரத்த சர்க்கரையின் அளவும் ஒரே நேரத்தில் அதிகரிக்கக்கூடுமாம். எனவே காலை உணவாக இவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்து, இட்லி, தோசை என்று நம் பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுங்கள்.

பர்கர் மற்றும் ப்ரைஸ்

பர்கர் மற்றும் ப்ரைஸ்

ஏன்? பொதுவாகவே இவைகள் மிகவும் ஆரோக்கியமற்றவையாக கருதப்படுகிறது. அதிலும் பர்கருடன், பிரெஞ்சு ப்ரைஸை உட்கொள்ளும் போது, உருளைக்கிழங்கு ப்ரைஸில் உள்ள சர்க்கரை, சைட்டோகீன்களை உருவாக்கி, உடலினுள் காயங்களை ஏற்படுத்தி, முதுமைத் தோற்றத்தை வேகமாக்கும். எனவே இந்த உணவுச் சேர்க்கையை மட்டுமின்றி, இவைகளை முழுமையாகத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Harmful Food Combinations You Should Avoid

There are food combinations that can cause health risks in us. Our list is here to point out the top 7 harmful food combinations that you should be avoiding in your diet.
Desktop Bottom Promotion