For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேகிக்கு அடுத்து பால் பவுடரில் புழு, மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நெஸ்ட்லே - அடிமேல் அடி!!!

By John
|

நெஸ்ட்லே!!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாக திகழ்ந்து வந்தது. கடந்த ஓரிரு வாரங்களாக நெஸ்ட்லேவின் பிரபல உணவுப் பொருளான மேகிக்கு இந்தியா முழுதும் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. மேகியில் இருக்கும் மூலப்பொருட்கள் குழந்தைகளின் உடல்நலத்திற்கு மிகவும் கேடானது என்று உணவு கட்டுப்பாடு வாரியம் கூறியதன் எதிரொலியே இதற்கு காரணம்.

மற்ற வகை மேகியை சாப்பிட போகிறீர்களா? ஒரு நிமிடம் இத படிச்சுட்டு போங்க...

இப்போது, தமிழகத்தின் கோவை மாநகரில் ஓர் சோதனையில் நெஸ்ட்லேவின் பால் பவுடரில் உயிருடன் புழுக்களும், வண்டுகளும் இருந்ததாக புதிய சர்ச்சைக் கிளம்பியுள்ளது. இதனால், நெஸ்ட்லேவின் உணவுப் பொருட்களின் மேல் மக்களுக்கு இருந்து அபிமானம் குறைந்து வருகிறது...

மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதால் சந்திக்கும் சில ஆரோக்கிய குறைபாடுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆட்டோ ஓட்டுனர் புகார்

ஆட்டோ ஓட்டுனர் புகார்

நேற்று (03.06.2015) தான் வாங்கிய நெஸ்ட்லே இன்ஸ்டன்ட் பால் பவுடரில் உயிருடன் புழுக்கள் இருந்ததாக தமிழ்நாடு உணவு மற்றும் சுகாதாரம் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

உணவு மற்றும் சுகாதார துறை சோதனை

உணவு மற்றும் சுகாதார துறை சோதனை

அந்த புகாரை அடுத்து, தமிழ்நாடு உணவு மற்றும் சுகாதார துறையினர் நெஸ்ட்லே பால் பவுடரை பரிசோதனை செய்துள்ளனர். மற்றும் அதில் உயிருடன் புழுக்கள் மற்றும் பூச்சிகள் இருந்ததாக கூறி மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

குழந்தைக்கு தோல் அலர்ஜி

குழந்தைக்கு தோல் அலர்ஜி

மேலும், இந்த பால் பவுடரை குடித்த குழந்தைக்கு சரும பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது

நெஸ்ட்லே என்.எ.என் ப்ரோ3

நெஸ்ட்லே என்.எ.என் ப்ரோ3

புகார் அளித்த ஆட்டோ ஓட்டுனர், நெஸ்ட்லே என்.எ.என் ப்ரோ3 அந்த பால் பவுடரைக் குடித்ததால் தான் தனது 18 மாத குழந்தைக்கு சரும அலர்ஜி ஏற்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பரிசோதனை முடிவுகள்

பரிசோதனை முடிவுகள்

மற்றும் அந்த நெஸ்ட்லே என்.எ.என் ப்ரோ3 எனும் பால் பவுடரை பரிசோதனை செய்த தமிழ்நாடு உணவு மற்றும் சுகாதார துறையினர், 380மி.கி பாக்கெட்டில் 22 புழுக்களும், அரிசி வண்டுகளும் இருந்ததாக பரிசோதனையின் முடிவில் தெரிவித்துள்ளனர்.

உணவு மற்றும் சுகாதார கட்டுபாடின் படி

உணவு மற்றும் சுகாதார கட்டுபாடின் படி

Regulation 2.1.9(5) of the Food Safety and Standards (Food Products Standards and Food Additives) என்ற உணவு மற்றும் சுகாதார கட்டுபாடின் படி உணவில் பூச்சிகள் இருப்பது குற்றம். மற்றும் அந்த ஒரு பாக்கெட்டில் மட்டும் புழுக்கள் இருந்ததற்காக, அதை தடை செய்ய முடியாது என்றும் கூறப்பட்டிருக்கிறது

அடிமேல் அடி

அடிமேல் அடி

நெஸ்ட்லேவின் மேகி உணவு இந்தியா முழுதும் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டு வரும் இந்நிலையில், நெஸ்ட்லேவின் பால் பவுடரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது அந்த நிறுவனத்திற்கு பலத்த அடியாக விழுந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nestle In Bigger Trouble Its Infant Formula Has Larvae

Nestle In Bigger Double Trouble, its Instant Formula Has Larvae, For further info read here.
Story first published: Thursday, June 4, 2015, 15:51 [IST]
Desktop Bottom Promotion