For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெப்பத்தை தணிக்கும் காய்கறிகள்!!!

By Maha
|

சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் கூல்ட்ரிங்க்ஸ், பழச்சாறுகள், மோர் போன்றவை இருந்தாலும், காய்கறிகளையும் சாப்பிட வேண்டியது அவசியம். இதனால் உடல் குளிர்ச்சியுடனும், வறட்சியடையாமலும் இருக்கும்.

மேலும் காய்கறிகள் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, உடலில் எனர்ஜி குறையாமல், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

சரி, இப்போது கோடை வெயிலைத் தணிக்கும் காய்கறிகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து அவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், கோடையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புடலங்காய்

புடலங்காய்

புடலங்காய் கோடையில் ஏற்படும் உடல் வறட்சியைத் தடுத்து, உடலில் நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கும். மேலும் கோடையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் குணமாக்க உதவும். குறிப்பாக இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறப்பான கோடைக்கால காய்கறி.

மஞ்சள் பூசணிக்காய்

மஞ்சள் பூசணிக்காய்

மஞ்சள் பூசணி இனிப்பாக இருந்தாலும், இது கோடையில் நல்ல குளிர்ச்சியைத் தரும். மேலும் மஞ்ச பூசயி செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்றில் புழுக்கள் சேராமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.

பாகற்காய்

பாகற்காய்

பாகற்காய் கசப்பாக இருந்தாலும், இது கோடையில் சருமத்தில் வரும் கொப்புளங்கள் மற்றும் எரிச்சலைத் தடுக்கும். மேலும் கோடையில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகளை தடுக்கும். கோடையில் உடல் புத்துணர்ச்சியுடனும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவி புரியும். இந்த காய்கறி இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்லது. முக்கியமாக கோடையில் உடல் வெப்பமடைவதைத் தடுக்கும்.

சுரைக்காய்

சுரைக்காய்

சுரைக்காயில் தண்ணீர் அதிகம் இருப்பதால், இதனை கோடையில் வாங்கி அதிகம் சாப்பிட்டால், உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். மேலும் சுரைக்காய் வயிற்று பிரச்சனைகளாக அல்சர் மற்றும் அசிடிட்டி போன்றவற்றைத் தடுக்கும்.

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய் இரத்தத்தை சுத்தப்படுத்தவும், கோடையில் உடலில் சேரும் கிருமிகளை அழிக்கவும் பெரிதும் உதவி புரியும். மேலும் செரிமானத்தை மேம்படுத்தவும், உயர் சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும்.

வெள்ளை பூசணிக்காய்

வெள்ளை பூசணிக்காய்

வெள்ளை பூசணியில் நீர்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இதனைக் கொண்டு வாரம் 2 முறை சாம்பார் செய்து சாப்பிட்டால், உடல் வறட்சியடையாமல் இருக்கும். மேலும் வெள்ளை பூசணியில் உள்ள நீர்ச்சத்தால், உயர் ரத்த அழுத்தம் குறைவதோடு, சிறுநீரக கற்கள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

கோடையில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதைப் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமல்லாமல், வெள்ளரிக்காய் மிகவும் விலைக் குறைவில் கிடைப்பதால், தவறாமல் வாங்கி சாப்பிட்டால், எண்ணற்ற நன்மையைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Vegetables To Beat The Heat In Summer

Best vegetables to eat in summer are healthy foods during summer. Vegetables & foods to eat during summer also prevent dehydration.
Story first published: Saturday, May 9, 2015, 16:26 [IST]
Desktop Bottom Promotion