For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரசாரமான உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

|

காரமான உணவு யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் இளம் காளை இளைஞர்களுக்கு காரம் தான் பெரும்பாலும் பிடிக்கும். பாசமான தாய்மார்கள் எப்போதும் காரமாக உணவை சாப்பிட வேண்டாம் என கூறுவது வழக்கம். இது பாசத்தின் பிரதிபலிப்பு.

உடல் எடையை குறைக்க உணவுகளை இப்படி தான் சமைத்து சாப்பிட வேண்டும்!!!

ஆனால், காரமான உணவு சாப்பிடுவதால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. இதய நலனில் இருந்து புற்றுநோய் கட்டி வளராமல் பாதுகாக்கும் வரை பல நன்மைகளை தருகிறது காரமான உணவுகள்.

இரத்த நாளங்களில் தேங்கியிருக்கும் தீயக் கொழுப்பை நீக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

இனி, காரசாரமான உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடை குறையும்

உடல் எடை குறையும்

காரமான உணவினை சாப்பிடுவதால் உடல் எடை குறையுமாம். இதற்கு மிளகாய் தூள் பயன்படுத்தக் கூடாது, பச்சை மிளகாய், மிளகு, மஞ்சள் தான் பயன்படுத்த வேண்டும். காரமான உணவு உடலில் உள்ள கலோரிகளை வேகமாக கரைக்க உதவுகிறது என்பதே இதற்கான காரணம்.

இதய நலன்

இதய நலன்

காரமான உணவு சாப்பிடுவதால் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை விரைவாக குறைக்க முடியும். உடலில் கொழுப்புச்சத்து குறைவதால் மாரடைப்பு போன்ற இதய கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க முடியும். முக்கியமாக இதய குழாய்களில் கொழுப்பு சேர முடியாது காக்க முடியும்.

புற்றுநோயை தடுக்கும்

புற்றுநோயை தடுக்கும்

சில கார உணவுகளில் புற்றுநோய் கட்டிகளை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. மஞ்சள், மிளகு போன்ற இந்திய மசாலா உணவுகள் இந்த வகையில் சிறந்த பலன் தருகிறது. புரோஸ்டேட் புற்றுக் கட்டி வளராமல் தடுக்க இந்த உணவுகள் சிறந்த முறையில் பலன் தருகிறது.

குறைந்த இரத்த அழுத்தம்

குறைந்த இரத்த அழுத்தம்

வைட்டமின் ஏ மற்றும் சி இதய தசை வால்களை வலிவாக்க உதவுகிறது. மிளகு போன்ற கார உணவின் சூடு, இரத்த ஓட்டம் உடல் முழுதும் சீரான முறையில் இயங்க உதவுகிறது. இவையெல்லாம் இதய வலுவினை அதிகரிப்பதோடு, குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

சத்துகள்

சத்துகள்

கார உணவுகளில் வைட்டமின் ஏ, சி, பி 6, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற நிறைய சத்துகள் இருக்கின்றன.

சமீபத்திய ஆய்வு

சமீபத்திய ஆய்வு

சமீபத்திய ஆய்வு ஒன்றில், காரமான உணவை சாப்பிடுபவர்கள் தான் அதிக நாள் உயிர் வாழ்கின்றனர் என கண்டறிந்துள்ளனர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அமிர்தமாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான். அளவுக்கு அதிகமாக காரத்தை உணவில் சேர்த்துக் கொள்வது வாய்ப்புண், அல்சர் போன்றவை ஏற்பட காரணமாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of Spicy Food

Do you know about the health benefits of spicy foods? read here.
Desktop Bottom Promotion