For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் சக்தி வாய்ந்த உணவுகள்!!!

By Maha
|

குளிர் காலத்தில் மற்றும் மழைக்காலத்தில் தான் உடலில் நோய்களின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதில்லை, கோடையிலும் உடலை நோய்கள் தாக்கும். ஆகவே கோடைக்காலத்தில் கூட, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளின் மீது கவனத்தை செலுத்து, அவற்றை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும். அதிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட்டு வர வேண்டும்.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் உணவுகள்!!!

குறிப்பாக அந்தந்த காலத்தில் கிடைக்கும் உணவுப் பொருட்களையும் தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். இங்கு அப்படி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்துப் பார்த்து, தவறாமல் உணவில் சேர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிர்

தயிர்

தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் என்னும் ஆரோக்கியமான பாக்டீரியா, வயிற்றில் ஏதேனும் கிருமிகள் இருந்தால், அவற்றை அழித்துவிடும். குறிப்பாக தயிரை சாப்பிட்டு வந்தால், சரும அரிப்பு, வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று பிடிப்புகள் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.

பூண்டு

பூண்டு

பூண்டில் உள்ள அல்லிசின், நோய்களை எதிர்த்து போராடி, சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நல்ல பாதுகாப்புத் தரும். அதிலும் பூண்டு சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோயின் தாக்கத்தை தடுக்கும்.

முட்டை

முட்டை

முட்டையில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். ஆகவே தினமும் தவறாமல் முட்டை சாப்பிட்டு வாருங்கள்.

சால்மன்

சால்மன்

சால்மன் மீனில் உள்ள வைட்டமின் ஏ, ஈ, ஜிங்க் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் ஆசிட், உடலினுள் செல்லும் போது, மோனோலாரிக் ஆசிட்டாக மாறி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். ஆகவே சமைக்கும் போது இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லது.

காய்கறிகள்

காய்கறிகள்

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகளில் முக்கிய இடத்தைப் பெறுவது காய்கறிகள் தான். அத்தகைய காய்கறிகளை தவறாமல் உணவில் அதிகம் சேர்த்து வந்தாலேயே, அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நொதிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்.

பார்லி

பார்லி

பார்லியில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் மற்றம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மிகவும் தீவிரமான காய்ச்சல் தாக்கதவாறு பாதுகாப்பு அளிக்கும். மேலும் இதனை அன்றாடம் உணவில் சிறிது சேர்த்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையோடு இருக்கும்.

பீச்

பீச்

பீச் பழத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் பொருள் அதிகம் உள்ளது., ஆகவே இந்த பழம் கிடைத்தால், தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரி

ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரி

இந்த பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதோடு, மற்ற பழங்களை விட இதில் ORAC என்னும் பொருள் அதிக அளவில் இருக்கிறது.

காளான்

காளான்

காளானும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இதில் புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இதர கனிம சத்துக்கள் வளமாக உள்ளது. இதனால் இந்த காய்கறிக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்ளும் திறன் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Good Foods For Immune System

Eat healthy foods and keep your immune system good. Here is the list of best foods that you an consume and have a healthy life.
Desktop Bottom Promotion