For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியம் என்று நினைக்கும் சில ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்கள்!!!

By Maha
|

நாம் உண்ணும் உணவுகள் அனைத்துமே ஆரோக்கியம் என்று நினைக்க வேண்டாம். அதிலும் சில உணவுகள் ஆரோக்கியமானது என்று காண்பிப்பதற்காக லேபிளில் அவற்றை குறிப்பிட்டிருப்பார்கள். அதுவும் கொழுப்பில்லாதது அல்லது சர்க்கரை இல்லாதது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.

10 பயங்கரமான உணவு வகைகள்.. சாப்ட்டீங்க.. செத்துருவீங்க!

உண்மையில் அந்த மாதிரியான உணவுகள் தெருவோரங்களில் விற்கப்படும் பொருட்களை விட மோசமானவை. இந்த உணவுப் பொருட்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அதனால் உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவை தான் ஏற்படும்.

மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

மேலும் இப்படி பாக்கெட்டில் விற்கப்படும் உணவுகள் கெட்டுப்போகாமல் இருக்கவும், சுவைக்காகவும் பல கெமிக்கல்கள் சேர்க்கப்படும். அந்த கெமிக்கல்கள் உடலினுள் நாள் கணக்கில் சென்றால், அதுவே உடல் ஆரோக்கியத்தை கெடுத்து மோசமாக்கிவிடும்.

பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!!

சரி, இப்போது நாம் ஆரோக்கியமாக நினைக்கும் சில ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்பு குறைவான வேர்க்கடலை வெண்ணெய்

கொழுப்பு குறைவான வேர்க்கடலை வெண்ணெய்

பலரும் கொழுப்பு குறைவான வேர்க்கடலை வெண்ணெயை வாங்கி அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் வேர்க்கடலையில் உள்ள நல்ல கொழுப்புக்கள் பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியது. அந்த கொழுப்பை நீக்கிவிட்டால், அதில் வேறு என்ன உள்ளது? ஆரோக்கியமற்றதாகத் தான் இருக்கும்.

கொழுப்பு குறைவான மற்றும் ப்ளேவர்டு தயிர்

கொழுப்பு குறைவான மற்றும் ப்ளேவர்டு தயிர்

அனைத்து கொழுப்பு நீக்கப்பட்ட உணவுகளும் ஆரோக்கியமற்றது இல்லை. மேலும் மக்களும் 'கொழுப்பு நீக்கப்பட்ட' வார்த்தையைக் கேட்டாலே சற்றும் யோசிக்காமல் வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் ப்ளேவர்கள் சேர்க்கிறோம் என்ற பெயரில் சர்க்கரையைத் தான் அதிகம் சேர்க்கிறார்கள். ஆகவே இந்த வகையான தயிரை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியமற்றது.

பழச்சாறுகள்

பழச்சாறுகள்

கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகள், உண்மையான பழச்சாறுகளுக்கான சிறந்த மாற்றாக பலரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது உடலுக்கு தீங்கானது. ஏனெனில் கடைகளில் டப்பாவில் அல்லது பாக்கெட்டில் விற்கப்படும் பழச்சாறுகளில் சர்க்கரை, செயற்கை நிறமூட்டி மற்றும் பதப்படுத்தப்படும் கெமிக்கல்கள் தான் அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் உண்மையான பழங்கள் எதுவும் சேர்க்கப்படுவதில்லை, அனைத்துமே பழங்களின் ப்ளேவர்கள் தான்.

கொழுப்பு நீக்கப்பட்ட வெண்ணெய்

கொழுப்பு நீக்கப்பட்ட வெண்ணெய்

இப்படி வெண்ணெயை விற்றால் கட்டாயம் வாங்காதீர்கள். வெண்ணெய் என்பது கொழுப்புக்களால் ஆனது. அதில் கொழுப்புக்கள் நீக்கப்பட்டது என்று கூறினால் நம்பாதீர்கள். ஏனெனில் அவற்றில் கெமிக்கல்கள் அதிகம் இருப்பதோடு, பலமுறை பதப்படுத்தப்பட்டிருக்கும். அத்தகையது ஆரோக்கியமற்றது மட்டுமின்றி, விலை அதிகமானதும் கூட.

சிக்கன் நக்கட்ஸ்

சிக்கன் நக்கட்ஸ்

சிக்கன் நக்கட்ஸ் சுவையானதாகவும், சாப்பிடுவதற்கு ஆரோக்கியமான உணவாகவும் காணலாம். ஆனால் அவற்றில் தான் தீங்கு விளைவிக்கும் பதப்படுத்தும் பொருட்கள் அதிகம் உள்ளன. மேலும் சிக்கன் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏற்ற இடம் எனலாம். அதிலும் இதனை பதப்படுத்தி வைத்து சாப்பிட்டால் நிலைமை என்ன ஆகும் என்று சற்று யோசியுங்கள்.

உறைய வைக்கப்பட்ட பட்டாணி

உறைய வைக்கப்பட்ட பட்டாணி

பட்டாணி உரிப்பதற்கு சோம்பேறித்தனமாக இருப்பதால், பலரும் கடைகளில் பாக்கெட் போட்டு விற்கப்படும் உறைய வைக்கப்பட்ட பட்டாணியை வாங்கி பயன்படுத்துவோம். இருப்பினும் பிரஷ்ஷான பட்டாணியில் இருக்கும் சத்துக்களைப் போல், உறைய வைக்கப்பட்ட பட்டாணியில் சுத்தமாக இருக்காது. எனவே இதனை உட்கொள்வது வேஸ்ட்.

சாலட் ட்ரஸ்ஸிங்

சாலட் ட்ரஸ்ஸிங்

வெறும் காய்கறிகளை சாப்பிட முடியாது என்பதற்காக அதனை சாலட் போன்று செய்து, அதன் மேல் பல்வேறு சுவையூட்டிகளை தூவி சாப்பிடுவோம். ஆனால் சேர்க்கப்படும் சுவையூட்டிகளில் சர்க்கரை, ட்ரான்ஸ் கொழுப்பு மற்றும் பதப்படுத்தும் கெமிக்கல் இருப்பதால், சாலட் ட்ரஸ்ஸிங்கை சேர்க்காமல் வெறும் காய்கறிகளை சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Seem To Be Healthy But Are Not

There are some foods that seem to be healthy but arent. You need to avoid such unhealthy foods. For example fat free butter in India and chicken nuggets.
Desktop Bottom Promotion