For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோயைத் தடுக்கும் உணவுகள்!!!

By Maha
|

அல்சைமர் என்பது ஒரு மூளை நோயாகும். இதனால் நினைவாற்றல், சிந்திக்கும் திறன் போன்றவை அழிக்கப்படும். இதனால் அன்றாட பழக்கவழக்கங்களைக் கூட மறக்க நேரிடும். இத்தகைய அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோயானது முதுமையில் தான் தாக்கும். இந்நோய் எதனால் ஏற்படுகிறது என்று காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அல்சைமர் நோய்க்கான அறிகுறிகள் மற்றும் தடுப்பு வழிகள்!!!

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். மேலும் இந்நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் ஒருசில உணவுகளை உட்கொள்வதன் மூலம், மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அல்சைமர் வருவதைத் தடுக்கலாம்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை ஆதரிக்க சில வழிகள்!!!

இந்த அல்சைமர் என்னும் ஞாபக மறதி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி அல்சைமர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளான இன்று நாம் அல்சைமர் நோயின் தாக்கத்தைத் தடுக்கும் உணவுகள் என்னவென்று படித்து அவற்றை அன்றாட உணவில் சேர்த்து பயன் பெறுவோமாக...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீன்ஸ்

பீன்ஸ்

ஆய்வு ஒன்றில், பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, கேல், முள்ளங்கி, பீன்ஸ் போன்றவற்றில் வைட்டமின் ஏ, சி, புரோட்டீன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளதால், இதனை உட்கொண்டு வந்தால், மூளை ஆரோக்கியமாக செயல்படுவதோடு, அல்சைமர் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம் என்று சொல்கிறது.

செர்ரி மற்றும் பெர்ரிப் பழங்கள்

செர்ரி மற்றும் பெர்ரிப் பழங்கள்

செர்ரி மற்றும் பெர்ரிப் பழங்கள் மூளையின் சீரான செயல்பாட்டிற்கு ஏற்றது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக நிறைந்திருப்பதால், இவை அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு நல்லது மற்றும் இது அல்சைமரின் தாக்கத்தைக் குறைக்கும். எனவே இப்பழங்களை அவ்வப்போது உட்கொண்டு வாருங்கள்.

பாதாம் மற்றும் வால்நட்ஸ்

பாதாம் மற்றும் வால்நட்ஸ்

பாதாம் மற்றும் வால்நட்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை ஸ்நாக்ஸ் நேரத்தில் எடுத்து வந்தால், அல்சைமர் தாக்கத்தைத் தடுக்கலாம்.

சால்மன்

சால்மன்

மீனை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவை மூளையின் செயல்பாட்டை பாதுகாப்பதோடு, அல்சைமரின் தாக்கத்தைக் குறைக்கும். மேலும் சால்மன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளதால், இவை அல்சைமரைத் தூண்டும் பீட்டா ஏமிலாய்டைக் குறைக்கும்.

காபி

காபி

காபியை தினமும் ஒரு கப் குடித்து வந்தால், அதில் உள்ள காப்ஃபைன், அல்சைமர் வளர்ச்சியைத் தடுத்து, ஞாபக சக்தியைத் தடுக்கும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் உள்ள ஓலியோகேந்தால் என்னும் பொருள், ஏமிலாய்டை உடைத்து, அல்சைமர் நோயின் தாக்கத்தைத் தடுக்கும்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரை மூளையின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஏனெனில் இதில் மூளையின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் கே போன்றவை அதிகம் உள்ளது. எனவே இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், முதுமையில் அல்சைமர் நோய் தாக்குவதைத் தடுக்கலாம்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் பொருள், அல்சைமரைத் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள், இதய நோய் மற்றும் அல்சைமர் நோயின் தாக்கத்தை எதிர்த்துப் போராடும். எனவே முடிந்தால் தினமும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் உட்கொண்டு வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Prevent Alzheimer's

In todays article we at Boldsky, will share some of the foods that prevents Alzheimers. Read on to know more about it.
Desktop Bottom Promotion