'சரக்கு' அடிக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள்!!!

By:
Subscribe to Boldsky

வார இறுதி வந்தாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். ஏனென்றால் வார இறுதி வந்தால் பலர் காதலியை சந்திக்க செல்கிறார்களோ இல்லையோ, தவறாமல் நண்பர்களுடன் சேர்ந்து 'ஒயின் ஷாப்' சென்று சரக்கு அடிப்பார்கள் அல்லது அதனை வாங்கி வந்து வீட்டிலேயே ஹாயாக அடிப்பார்கள். எவ்வளவு தான் 'மது உடலுக்கு கேடு' என்று சொன்னாலும் யார் தான் அதை கேட்கிறார்கள்.

சரக்கு அடிக்கும் முன் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

இருந்தாலும் மதுவை தொடர்ந்து அளவுக்கு அதிகமாக பருகினால் தான் உடலுக்கு தீங்கு ஏற்படுமே தவிர, அவ்வப்போது அளவாக அடித்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை. தற்போது பலருக்கு உடல்நலத்தின் மீது அக்கறை அதிகம் இருப்பதால், மதுவை பருகினாலும் அதனால் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்று யோசித்து, அதற்கேற்றாற் போல் நடக்கின்றனர்.

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

சரி, உங்களுக்கு சரக்கு அடித்தால் எவ்வித உடல்நல பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை சரக்கும் அடிக்கும் போது எடுத்துக் கொள்ளாதீர்கள். இதனால் போதை அளவுக்கு அதிகம் ஏறி எழுந்து நடக்க முடியாத அளவில் தள்ளாடுவது, வாந்தி எடுப்பது போன்ற ஒருசில பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

எண்ணெயில் பொரித்த உணவுகள்

ஆல்கஹால் பலருக்கு அசிடிட்சியை ஏற்படுத்தும். உங்களுக்கு சரக்கு அடித்த பின் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், சரக்கு அடித்த பின் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சீஸ் நிறைந்த உணவுகள்

சிலருக்கு சரக்கு அடிக்கும் போது சீஸ் நிறைந்த உணவுகளான பிட்சா, பாஸ்தா போன்றவற்றை சாப்பிடும் பழக்கம் இருக்கும். இவை மிகவும் மோசமான மற்றம் எளிதில் செரிமானமாகாத உணவுப் பொருட்களில் ஒன்று. ஆகவே இவற்றை தவிர்க்க வேண்டும்.

நட்ஸ்

சில ஒயின் ஷாப்களில் சரக்கிற்கு இலவசமாக வேர்க்கடலை மற்றும் வறுத்த முந்திரியைக் கொடுப்பார்கள். இவற்றை சரக்கு அடிக்கும் போது உட்கொள்ளவே கூடாது. ஏனெனில் இவற்றில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதுடன், அவை வயிற்றை நிறைத்து, மது அருந்திய பின் உணவருந்த முடியாத நிலையை உண்டாக்கிவிடும்.

சிப்ஸ்

முக்கியமாக உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏற்கனவே சிப்ஸ் உடலுக்கு ஆரோக்கியமற்றது. அதிலும் மது அருந்தும் போது உட்கொண்டால், அது இன்னும் நிலைமையை மோசமாக்கிவிடும். குறிப்பாக உடல் வறட்சியை ஏற்படுத்தும்.

இனிப்புகள்

சரக்கு அடிக்கும் போது, இனிப்புக்களை எடுத்து வந்தால், அவை போதையை அதிகரிப்பதுடன், மேலும் மது அருந்த வேண்டுமென்று தூண்டும். இதனால் அளவுக்கு அதிகமாக மது அருந்தி, மறுநாள் கடுமையான தலைவலிக்கு உள்ளாகக்கூடும்.

சோடா அல்லது குளிர்பானங்கள்

சரக்கு அடிக்கும் போது, அத்துடன் சோடாவையோ அல்லது குளிர்பானங்களையோ மிக்ஸ் செய்து அடிக்க வேண்டாம். ஏனெனில் ஏற்கனவே ஆல்கஹால் உடல் வறட்சியை ஏற்படுத்தும். அத்துடன் சோடாவை மிக்ஸ் செய்தால், அது இன்னும் உடல் வறட்சி ஏற்படுவதை அதிகரிக்கும். எனவே சரக்கு அடிக்கும் போது, அத்துடன் பழச்சாறுகள் அல்லது ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

What Foods Not To Eat With Alcohol?

Some foods you must not eat with alcohol. To know what these foods that don't go with alcohol are, read on...
Story first published: Friday, October 31, 2014, 18:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter