For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகை அதிகரிக்க உதவும் 9 சிறந்த உணவுப் பொருட்கள்!!!

By SATEESH KUMAR S
|

நமது தோற்றத்தை மேம்படுத்தும் பொருட்டு நாம் அடிக்கடி அழகு நிலையங்களுக்கோ அல்லது மருந்து நிலையங்களுக்கோ சென்று சரும அழகிற்கான பல பொருட்களை வாங்குகிறோம். நாம் வாங்கும் அதிகமான மருந்து பொருட்களை விட நம்மை அழகுபடுத்தும் உணவு பொருட்கள் பல உள்ளன என்பதை நாம் அறிந்துள்ளோமா?

அழகு நமக்குள்ளிருந்து வெளிப்பட வேண்டும். இது பழமொழி என்பதை விட நிஜமாகவே உண்மை ஆகும். இந்த பழமொழி நமது மனோநிலை மற்றும் குணநலன்களை பற்றி மட்டும் கூறவில்லை. நமது உடலின் உள்ளமைப்பு எந்த அளவிற்கு ஆரோக்கியமாக உள்ளதோ, அதே அளவிற்கு அது நமது வெளித்தோற்றத்திலும் ஆரோக்கியத்தையும், அழகையும் பிரதிபலிக்கும். எனவே தான் நமது தோற்றத்திற்கு அழகூட்டுவதில் நாம் உண்ணும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறுகிறோம்.

அழகிற்கும் உணவிற்கும் இதையே வலுவான பிணைப்பு உள்ளது. உணவின் மூலம் ஏற்படும் மாற்றத்தை நம்மை உணர செய்வதை தவிர்த்து, உணவு நமது தோற்றத்திலும் நேரடியான விளைவை ஏற்படுத்தும். உடல் மற்றும் அழகு சம்பந்தப்பட்ட பரவலான பிரச்சனைகளான கறைகள், முகப்பரு, பிரகாசமற்ற முகம், வறண்ட முடி மற்றும் தேவையற்ற கொழுப்பு ஆகியவற்றிற்கு ஆரோக்கியமற்ற உணவே காரணமாக விளங்குகிறது. இந்த பிரச்சனைகளை நாம் மேலோட்டமாக எடுத்து கொள்ளலாம். ஆனால் நாம் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவினை எடுத்து கொள்வது இல்லை என்று இவை நமக்கு தெளிவாக கூறுகின்றன. மேலும் இவை நமது அடிப்படை உடல் தகுதிக்கும் கூட காரணமாக விளங்கலாம்.

எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவின் மூலம் அழகான தோற்றம் பெறுவதற்கு, நமது அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் நமது சமயலறையில் எப்போதும் இருக்கிற 9 உணவு பொருட்களின் பட்டியல் இதோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

பச்சை நிற இலைகளுடன் சிறந்த பழைய முட்டைக்கோஸ் பார்வைக்கு கவர்ச்சி குறைவானதாக தோன்றலாம். ஆனால் இலைகளுடன் கூடிய இந்த காய்கறியில், நமது கேசத்திற்கும், சருமத்திற்கும், ஊட்டச்சத்தை வழங்க கூடிய வைட்டமின்கள் ஏ ,சி, ஈ, ஆகியன அடங்கியுள்ளன. முட்டைக்கோஸில் ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட 11% அதிக வைட்டமின் சி காணப்படுகிறது. இதனை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சேதமடைந்த செல்களையும், திசுக்களையும் சரி செய்யவும் மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் நாம் உடலுக்கு தேவைப்படும் அதிகப்படியான வைட்டமின் சி-யை நாம் முட்டைக்கோஸ் மூலமாக பெறலாம். உடலை சுத்திகரிக்க தேவையான நார்ச்சத்தும் இதில் நிறைந்துள்ளது.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை கல்லீரலில் பித்த நீர் சுரப்பை அதிகரிப்பதன் மூலம், செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மேலும் பித்தநீர் கல்லீரலின் செயல்பாட்டையும், கல்லீரலுக்கு உறுதுணையான வலிமைப்படுத்தும் முகவராக செயல்பட்டு நச்சுகளை வெளியேற்றும் முதன்மை உறுப்பை சரியாக வேலை செய்வதை உறுதி செய்கிறது. எலுமிச்சையை உணவாக கொள்ளும் போது, அது சருமத்தினை மென்மையாக வைத்து கொள்ள உதவுகிறது. சுருக்கங்களை எதிர்த்து போரிடுகிறது. பருக்கள் உருவாவதை குறைகிறது.

தண்ணீர்

தண்ணீர்

H2O எனப்படும் நீரை அதிகப்படியாக அருந்துவதே தங்கள் அழகின் ரகசியம் என பல பிரபலங்கள் உறுதி பட கூறுகின்றனர். நம்மில் பலர் அதனை நம்ப மறுக்கிறோம். பிரபலங்கள் தங்கள் தோற்ற எழிலை மெருகூட்ட பல வழிமுறைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்கின்றனர் என்பது உண்மை தான். ஆனால் முறையாக நீர் அருந்துதல் எந்த ஒரு நல்ல விளைவையும் வலுவிழக்க செய்வது இல்லை. சிறந்த தோற்றத்தை பெற நீர் அருந்துதல் அவசியமான ஒன்றாகும்.ந மது வளர்ச்சிதை மாற்றத்தை சீராக பராமரிக்கவும், சிறப்பான சரும பொலிவிற்கும், நேர்த்தியாக நம்மை காட்டி கொள்ளவும் நீர் அருந்துவது மிக்க அவசியமாகிறது.

கேரட்

கேரட்

அதிகப்படியான சூரிய ஒளியின் தாக்கம் நமது சருமத்திற்க்கு அவ்வளவு நல்லதல்ல. ஆனால் இருந்த வானத்தின் கீழே நாம் நடை பயிற்சி மேற்கொள்ளும் அந்த குறைவான நேரத்திலேயே நாம் புறஊதா கதிர்களால் தாக்க பெறுகிறோம். கேரட்டில் நிறைந்துள்ள கரோட்டினாய்டு காரணமாக தீங்கு விளைவிக்கும் புறஊதா கதிர்களிடமிருந்து நம்மை காக்கிறது. நமது சருமத்தில் சூரிய கதிர்களை ஏற்படுத்தும் தடைகளுக்கு காரணமான தீங்கு விளைவிக்கும் கதிர்களை நமது சருமத்தை குறைவாகவே உணர செய்கிறது.

சாக்லெட்

சாக்லெட்

நமக்கு குறிப்பாக பதின்பருவத்தினருக்கு தோன்றுகின்ற முக்கிய சரும பிரச்சனையான பருக்கள் உண்டாவதற்கு சாக்லெட் காரணம் என்று கருதப்படுகிறது. எனினும் சருமத்தில் தோன்றுகின்ற இந்த வகையான கறை களங்கங்களுக்கு சாக்லேட் காரணம் என்று நிரூபிக்கப்படவில்லை. உண்மையில், சாக்லெட் நமது சருமத்தின் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, சருமத்திற்கு பொலிவையும் போஷாக்கையும் வழங்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான ஃப்ளேவோனாய்டுகளை உயர்ந்த அளவில் தன் வசம் கொண்டுள்ளது.

ப்ளூபெர்ரிகள்

ப்ளூபெர்ரிகள்

ப்ளூபெர்ரிகள் குறித்து குறைந்த அளவிலான விபரங்களே நாம் பெற்றிருந்தாலும், மற்ற காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது சிறந்த ஆக்சிஜனேற்ற பண்பினை தன் வசம் கொண்டுள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நமது சருமம் முன்னதாகவே முதிர்ச்சி அடைவதை எதிர்க்கிறது மற்றும் கொலாஜன் உருவாக்கத்தையும் மற்ற சரும வியாதிகள் குணமாக்குதலையும் ஊக்குவிக்கிறது.

கடல் உணவு

கடல் உணவு

மீன் மற்றும் பிற கடல் உணவுகளும் நமது ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும். மேலும் இவை நமது சருமத்திலும் அற்புதத்தை நிகழ்த்துகின்றன. சால்மன் போன்ற கொழுத்த பருமனான மீன் இதற்கு சிறந்த உதாரணமாகும். சிப்பி மீன்களும் அதிசயத்தை நிகழ்த்துகின்றன. ஏனெனில் பெரும்பாலான கடல் உணவுகள், துத்தநாகம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை அதிக அளவில் பெற்று காணப்படுகின்றன. இவை சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்துகின்றன. வீக்கம் மற்றும் வறட்சியை குறைக்கிறது. நமது சருமத்தின் இளமையை மீட்டெடுக்கிறது. மேலும் துத்தநாகம் பருக்களை எதிர்த்து போரிடுகிறது. சரும செல்களின் மறுசுழற்சிக்கு துணை புரிந்து, நமக்கு இளமையான பொலிவை வழங்குகிறது.

குறிப்பு

குறிப்பு

இந்த 9 பொருட்களையும் தவிர்த்து நமது அழகினை மெருகூட்டும் வேறு பல உணவு பொருட்களும் உள்ளன. எனினும் பெரும்பாலான நேரங்களில் இவற்றின் பலன்கள் மேலோட்டமாகவே அறியப்படுகின்றன. நமது சருமத்தையும் கேசத்தையும் பராமரிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், நமது இதயத்தை வலிமைப்படுத்துவதற்கும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் துணை செய்யும் இந்த சிறப்பான உணவு பொருட்கள், நமது எடை குறைப்பிற்கும் அல்லது அதிகரிப்பிற்கும் மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

எனவே க்ரீம்களும் மருந்து பொருட்களும் வாங்குவதில் நூற்றுக்கணக்கான பணம் செலவழிப்பதை விடுத்து, நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து தரும் உணவுப் பொருட்களை சேர்த்து நமது உணவு முறையை மாற்றி அமைத்திடுவோம் இன்றே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty Boosting Foods

How do you stay beautiful with your diet? Make the right choices! Here are 8 things you should have in your kitchen for beauty and health’s sake:
Story first published: Saturday, March 1, 2014, 16:55 [IST]
Desktop Bottom Promotion