For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு டெங்கு காய்ச்சலா? அப்படின்னா இந்த 10 உணவுகளை சாப்பிடுங்க...

By Karthikeyan Manickam
|

கடந்த சில ஆண்டுகளாக டெங்கு காய்ச்சல் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் கிளப்பி வருகிறது. இந்தக் காய்ச்சல் காரணமாக பலர் இறந்து போயுள்ளனர். கொசுக்கள் கடிப்பதால் பரவும் ஒரு வகை வைரஸ் காரணமாக டெங்கு காய்ச்சல் வருகிறது. இது எலும்புகளை மோசமாகத் தாக்கி வலி ஏற்படுத்துவதால் 'எலும்பு உடைக்கும் காய்ச்சல்' என்றும் அழைக்கப்படுகிறது.

தெருக்களிலும், வீடுகளின் பின்னும் ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரில் தான் கொசுக்கள் நிறைய உற்பத்தியாகின்றன. எத்தனையோ அரசு அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் முயற்சித்த போதிலும் கொசுக்களை மட்டும் ஒழிக்கவே முடியவில்லை. இருப்பினும், கொசுக்களிலிருந்து விலகி இருந்தால் மட்டுமே, டெங்கு காய்ச்சலிலிருந்து தப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

டெங்குவுக்கு சூப்பர் மருந்து கிடைச்சாச்சே!!!

டெங்கு காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் நல்ல உணவுகளை சாப்பிட்டால் தான் அந்த வைரஸிலிருந்து தப்பிக்க முடியும். அந்தக் காய்ச்சலிலிருந்து விரைவில் விடுபடவும் முடியும். டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடும் தேவையில்லை. ஆனாலும் டெங்கு காய்ச்சல் இருக்கும் போது, இந்த 10 உணவுகளைச் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

டெங்கு காய்ச்சலா வீட்டு மருத்துவம் கை கொடுக்கும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சுப் பழத்தில் நிறைய வைட்டமின்களும், இதர சத்துக்களும் காணப்படுகின்றன. செரிமானத்திற்கும், நன்றாக சிறுநீர் போவதற்கும் ஆரஞ்சு உதவுவதால் டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவில் விடுபட முடியும்.

பப்பாளி

பப்பாளி

கனிகளைக் கொடுத்த பப்பாளி மரத்தின் இலைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு 2 பப்பாளி இலைகளை நன்றாக நசுக்கிப் பிழிந்து சாறெடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையிலும் இரவிலும் இந்தச் சாற்றை 2 ஸ்பூன் குடித்து வந்தால் டெங்கு காய்ச்சல் விரைவில் ஓடிப் போகும்.

கஞ்சி

கஞ்சி

டெங்கு காய்ச்சலால் உயிருக்கே போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு கஞ்சி தான் மிகமிகச் சிறந்த உணவாகும். கஞ்சி குடிப்பதால் உடலுக்கு நிறைய சக்தி கிடைக்கும். அதைக் குடிப்பதும் மிகவும் எளிது.

மூலிகை டீ

மூலிகை டீ

டெங்கு காய்ச்சலைக் குறைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது மூலிகை டீ. அதிலுல், இஞ்சி டீ அல்லது ஏலக்காய் டீ குடிப்பது மிகவும் நல்லது.

இளநீர்

இளநீர்

இளநீரை நிறையக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும். கனிமச்சத்துக்கள், எலெக்ட்ரோலைட்டுகள் உள்ளிட்ட நீர்ச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.

காய்கறி ஜூஸ்

காய்கறி ஜூஸ்

கேரட், வெள்ளரி உள்ளிட்ட பசுமை நிறைந்த காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சுத்தமான ஜூஸ்களைக் குடிப்பதால் டெங்கு காய்ச்சல் குணமாகும்.

பழச்சாறு

பழச்சாறு

நிறையப் பழச்சாறுகளைக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சலிலிருந்து தப்பிக்கலாம். அதிலும் வைட்டமின் சி அதிகமுள்ள ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, கிவி, பப்பாளி உள்ளிட்ட பழங்களின் சாற்றைக் குடிக்கலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும் டெங்கு காய்ச்சலை விரட்டலாம். பால், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடுவது நலம்.

சூப்புகள்

சூப்புகள்

பல வகையான சூப்புகளைச் சாப்பிடுவது டெங்கு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடம்பிற்குத் தெம்பு கிடைக்கவும், எலும்புகள் வலுப் பெறவும் சூப்புகள் உதவுகின்றன. அவை பசியைப் போக்குவதோடு, நாவிற்குச் சுவையையும் தருகின்றன.

எலுமிச்சைச் சாறு

எலுமிச்சைச் சாறு

சிட்ரிக் அமிலம் நிறைந்து இருப்பதால், எலுமிச்சையும் டெங்கு காய்ச்சலை விரட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தேவையில்லாத விஷத்தை முறிக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. ஆரஞ்சுப் பழத்தைப் போலவே, எலுமிச்சையும் செரிமானத்திற்கும் நிறைய சிறுநீர் வெளியேறுவதற்கும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods For Dengue Fever

Here are some of the best foods for dengue fever. With the help of these foods a dengue patient can recover fast from the flu.
Desktop Bottom Promotion