For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

By Ashok CR
|

சிறுநீரகம் என்பது நம் உடலில் உள்ள மிக முக்கியமான அங்கமாகும். மேலும் நம் உடலில் நடக்கும் முக்கியமான செயல்பாடுகளுக்கும் அது பொறுப்பாகும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த பல வழிகள் உள்ளது. நல்ல ஆரோக்கியமான உணவுகளும் கூட அதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக விளங்கும். சிறுநீரகத்திற்கு நல்லதை ஏற்படுத்தும் உணவுகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!!

சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தி, நோய்கள் அண்டாமல் இருக்க நமக்கு உதவிடும் சில உணவுகளைப் பற்றி தான் பார்க்க போகிறோம். அதன் ஊட்டச்சத்துக்களின் அடிப்படையில் பார்க்கையில், அது சிறுநீரகத்திற்கு பலனை அளிப்பதோடு நிற்காமல், உடலில் உள்ள பிற உறுப்புகளுக்கும் நன்மையை தேடி தரும். சிறுநீரக பிரச்சனைகளால் நம் உடலுக்கு ஏற்படும் சீரழிவைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இதனை மனதில் கொண்டு, சிறுநீரக செயல்பாடுகளுக்கு நன்மையை அளித்திடும் உணவுகளை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேறு சில எளிமையான வழிகள்!!!

இரத்தத்தை சுத்தரிப்பது சிறுநீரகத்தின் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாகும். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இல்லாமல், மற்ற உறுப்புகள் ஒழுங்காக செயல்படுவதற்கான சாத்தியம் இல்லை. சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் கோளாறு ஏற்பட தொடங்கினால், நாளடைவில் பிற உறுப்புகளின் செயல்பாடும் சீர்குலைந்துவிடும். இப்போது சிறுநீரகத்திற்கு நன்மையை அளித்திடும் அவ்வகை உணவுகளைப் பற்றி சற்று பார்க்கலாம். இவ்வகை உணவுகளை இரண்டாக வகைப்படுத்தலாம் - சிறுநீரக நோய்களுக்கு தீர்வை அளித்திடும் உணவுகள், சிறுநீரகங்களின் செயல்பாடுகளுக்கு நன்மையை அளித்திடும் உணவுகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கான சிறந்த உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது முட்டைக்கோஸ். அதிலுள்ள வளமையான ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல், பிற உறுப்புகளுக்கும் நன்மையை ஏற்படுத்தும். புற்றுநோய் அணுக்களை எதிர்த்து போராட உதவும் ஃபோலேட் மற்றும் ஃபைடோகெமிக்கல்கள் இதில் வளமையாக உள்ளது. இதுப்போக முட்டைக்கோஸில் வைட்டமின் கே, பி12, பி6, ஃபோலிக் அமிலம் மற்றும் டையட்டரி நார்ச்சத்து ஆகியவைகளும் இருப்பதால் ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு இது ஒரு சக்தி வாய்ந்த உணவாக திகழ்கிறது.

காலிஃப்ளவர்

காலிஃப்ளவர்

வளமையான ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து உள்ள காலிஃப்ளவரும் கூட உலகத்தில் உள்ள ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். அதில் வைட்டமின் சி வளமையாக உள்ளதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். மேலும் சிறுநீரக அமைப்பு ஆரோக்கியமான முறையில் செயல்படவும் இது உதவிடும்.

பூண்டு

பூண்டு

பூண்டில் சோடியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற ஆரோக்கியமான பொருட்கள் அடங்கியுள்ளது. இது ஒரு சிறந்த அழற்சி நீக்கி உணவாகும். இது கொலஸ்ட்ராலை குறைத்து, உடலில் இரத்த ஓட்டம் சீராக நடந்திட உதவிடும்.

ஆப்பிள்

ஆப்பிள்

உலகத்தில் உள்ள ஆரோக்கியமான உணவுகளில் ஆப்பிளும் ஒன்று என்பதை சுலபமாக சொல்லி விடலாம். சக்தி வாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பி குணங்களும் இதில் அடங்கியுள்ளது. சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சிறுநீரக அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் அளித்திடவும் கூட ஆப்பிள் உதவுகிறது.

 வெங்காயம்

வெங்காயம்

வெங்காயமும் கூட புற்றுநோய் எதிர்ப்பி உணவாகும். மேலும் நுரையீரலின் ஆரோக்கியத்திற்கும் இது சிறந்த உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது. வெங்காயத்தில் குவெர்செடின் என்றழைக்கப்படும் ஃப்ளேவோனாய்டு என்ற சக்தி வாய்ந்த பொருள் இருப்பதால், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக இது போராடும். அதேப்போல் ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாடுகளுக்கும் கூட வெங்காயம் சிறந்த உணவுகளாக விளங்குகிறது.

பீட்ரூட்

பீட்ரூட்

உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தின் அளவுகளை பராமரிக்கும் திறனை பீட்ரூட் கொண்டுள்ளது என்பது தெரிந்த விஷயமே. பீட்ரூட்டில் வைட்டமின் பி6 மற்றும் கே அடங்கியுள்ளதால், சிறுநீரக செயல்பாடுகளுக்கு அது சிறந்த உணவாக விளங்குகிறது.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ஆந்தோசையனிடின்ஸ் எனப்படும் ஃபைடோகெமிக்கல்ஸ் ப்ளூபெர்ரிகளில் வளமையாக உள்ளது. ப்ளூபெர்ரியில் மெக்னீசியம் மற்றும் ஜிங்க் கனிமங்களின் அளவும் போதிய அளவில் உள்ளது. இவையிரண்டுமே ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமான கூறுகளாகும்.

ராஸ்பெர்ரி

ராஸ்பெர்ரி

உடலில் உள்ள ப்ரீ ராடிக்கல்களை நடுநிலைப்படுத்துவதின் மூலமாக அணுக்கள் பாதிப்படைவதை தடுக்கும் எல்லாஜிக் அமிலம் என்ற முக்கியமான கூறு ராஸ்பெர்ரியில் உள்ளது. மேலும் ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் ஆந்தோசையனிடின்ஸ் கூட இதில் வளமையாக உள்ளது.

திராட்சை

திராட்சை

திராட்சையில் வைட்டமின் சி வளமையாக உள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உதவும் முக்கியமான வைட்டமின் இது. ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு தேவையான முக்கியமான கூறுகளில் இதுவும் ஒன்றாகும்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் புரதம் அதிகமாக உள்ளது. மேலும் ஆரோக்கியமான சிறுநீரகங்களின் செயல்பாடுகளுக்கு தேவையான அதிமுக்கிய அமினோ அமிலங்களும் இதில் அடங்கியுள்ளது. சொல்லப்போனால் இது ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு தேவையான அசைவ உணவாகும்.

குருதிநெல்லி

குருதிநெல்லி

புற்றுநோய் எதிர்ப்பி குணங்களுக்காக குறிப்பாக அறியப்படுவது தான் குருதிநெல்லி என்னும் கிரான்பெர்ரி. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளதால், ப்ரீ ராடிக்கல்களின் அளவை குறைக்க அது உதவிடும். ப்ரீ ராடிக்கல்கள் அதிகரிக்கும் போது பல உடல் ரீதியான கோளாறுகள் ஏற்படும்.

முட்டைகள்

முட்டைகள்

முட்டையில் புரதம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் டி வளமையாக உள்ளது. முட்டையின் வெள்ளை கருவில் புரதம் வளமையாக உள்ளது. கூடுதலாக அதிமுக்கிய அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளது.

பால்

பால்

பாலில் வைட்டமின் டி வளமையாக உள்ளது. நம் உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கு தேவைப்படும் முக்கியமான வைட்டமின் இதுவாகும். சிறுநீரகங்களுக்கு மட்டுமல்லாமல் சீரான இரத்த ஓட்டத்திற்கும் பால் உதவிடும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் ஒலீயிக் அமிலம் வளமையாக உள்ளது. சிறுநீரகங்களின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவிடும் முக்கிய கூறாக இது விளங்குகிறது. ஆலிவ் எண்ணெயில் மோனோ-சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளதால் அது விஷத்தன்மையை தடுக்கும். மேலும் மற்ற எண்ணெய்களுக்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான இடர்பாடுகள் குறைவாக இருக்கும்.

தண்ணீர்

தண்ணீர்

கடைசியாக, மிகவும் அத்தியாவசியமான ஒரு உணவுப்பொருள் தான் தண்ணீர். எந்த ஒரு உறுப்புக்கும் சிறந்த கூறாக இருப்பது தண்ணீரே. அதனால் சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை. ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டிற்கு தினமும் குறைந்தது 3 லிட்டர் அளவிலாவது தண்ணீர் குடியுங்கள்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Brilliant Foods You Must Eat For Healthy Kidneys

Kidneys are a crucial organ in the body and are tasked with performing some crucial body functions. There are various ways to boost functioning of the kidneys and eating healthy foods is one of the best ways to do so. Here are 15 foods that are good for your kidneys.
Desktop Bottom Promotion