For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எவ்வளவு அடிச்சாலும் ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்ப இத சாப்பிடுங்க...

By Maha
|

இன்றைய நவீன உலகில் மார்டன் கலாச்சாரம் என்று ஆண்கள் முதல் பெண்கள் வரை மது அருந்துவது சாதாரணமாகிவிட்டது. அதிலும் வார விடுமுறை வந்தால் போதும், பெரும்பாலானோர் நண்பர்களுடன் சேர்ந்து பார் சென்று நன்கு மூக்கு முட்ட குடித்துவிடுகிறார்கள்.

அப்படி குடிப்பதால் பலரால் நடக்கக்கூட முடியாத அளவில் சென்று, பின் வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே எவ்வளவு குடித்தாலும், போதை தலைக்கு ஏறாமல் இருப்பதுடன், உடலுக்கு கேடு ஏற்படாமல் இருக்க, ஆல்கஹால் குடிக்கும் போதோ அல்லது குடித்த பின்னரோ ஒருசில உணவுகளை ஆர்டர் செய்து உட்கொண்டால், அதிகம் போதை ஏறாமல் இருப்பதுடன், அதிக போதையினால் மறுநாள் தலை பாரம் ஏற்படுவதையும் தடுக்கலாம்.

இதுப்போன்று வேறு: மதுபானம் பருகுவதற்கு முன்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

இங்கு அப்படி ஆல்கஹால் குடித்த பின்னர் சாப்பிட வேண்டிய சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை சாப்பிட்டால், நிச்சயம் உங்கள் மனைவியிடம் மது அருந்திவிட்டு அடி வாங்குவதைத் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

மது அருந்திய பின்னர் அஸ்பாரகஸ் சாப்பிட்டால், அது உடலில் உள்ள நொதிகளின் அளவை அதிகரித்து, ஆல்கஹாலின் அதிகப்படியான தாக்கத்தில் இருந்து குறைக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

பொதுவாக ஆல்கஹால் பருகினால் உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறையும். எனவே உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்க வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ்

மதுபானம் அருந்திய பின்னர் தக்காளி சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இவை போதையை குறைப்பதுடன், உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும்.

முட்டை

முட்டை

அதிகம் போதையில் இருக்கும் போது, முட்டை சாப்பிடுவது மிகவும் அவசியம். ஏனெனில் இதில் உள்ள அமினோ ஆசிட், உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, போதையில் இருந்து தெளிவைக் கொடுக்கும்.

சிக்கன் நூடுல்ஸ் சூப்

சிக்கன் நூடுல்ஸ் சூப்

இல்லாவிட்டால் சிக்கன் நூடுல்ஸ் சூப் வாங்கி குடியுங்கள். இதனால் உடலுக்கு சோடியம் மற்றும் நீர்ச்சத்து கிடைப்பதுடன், கல்லீரலையும் பாதுகாக்கும்.

மிசோ சூப்

மிசோ சூப்

இது ஒரு ஜப்பானிய ரெசிபி. இதனாலும் சோடியம் மற்றும் நீர்ச்சத்து கிடைக்கும். மேலும் செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

டோஸ்ட் மற்றம் தேன்

டோஸ்ட் மற்றம் தேன்

இது மிகவும் சிறுபிள்ளைத் தனமாக இருந்தாலும், இதனை உட்கொண்டால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, ஆல்கஹால் அதிகரித்த போதையை குறைத்துவிடும்.

இளநீர்

இளநீர்

அதிகமாக குடிக்கும் போது உடலில் உள்ள நீர்ச்சத்தானது குறையும். இதனால் மயக்கம் ஏற்பட ஆரம்பிக்கும். எனவே அப்போது நீர்ச்சத்து அதிகம் நிறைந்த இளநீரைக் குடித்தால், உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

காபி

காபி

போதை தலைக்கு ஏறும் போது, ஒரு கப் காபி குடிப்பதும் நல்லது. குறிப்பாக காபியும் உடலில் வறட்சியை ஏற்படுத்தும் என்பதால், அதை குடித்த பின்னர் தண்ணீரையும் குடியுங்கள்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் சாப்பிட்டால், உடலில் உள்ள எத்தகைய ஆசிட்டும் கரைந்து, உடலுக்கு எனர்ஜியைக் கொடுக்கும்.

கிவி

கிவி

கிவி பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே அப்பழத்தை உட்கொண்டு, தலைக்கு ஏறிய போதையை தணித்துக் கொள்ளுங்கள்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையிலும் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால், இதனை எடுத்துக் கொள்வதும் நல்லது.

இஞ்சி

இஞ்சி

ஆல்கஹால் அருந்திய பின்னர், சிறிது இஞ்சியை சாறு எடுத்தோ அல்லது ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தால், போதை சட்டென்று இறங்கிவிடுவதுடன், செரிமான பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

13 Foods To Eat When You Are High

There are certain items you can order that are best foods after drinking. Here we shall list 13 different foods to eat when high.
Desktop Bottom Promotion