For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதை தடுக்கணுமா? அப்ப இந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்!!

By Karthikeyan Manickam
|

கொழுப்பு என்பது நம் இரத்தத்தில் கலந்திருக்கும் ஒரு விஷயமாகும். அது ஹார்மோன்களின் உற்பத்திக்காகவும், உடலில் உள்ள சில மெல்லிய சவ்வுகள் இயங்குவதற்காகவும் பெரிதும் உதவுகிறது.

ஆகவே உடலில் நல்ல கொழுப்பு இருந்தாலே போதும், உடலானது ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அந்தக் கொழுப்பே அளவுக்கு அதிகமாகப் போனால், ஸ்ட்ரோக் என்னும் பக்கவாதம் மற்றும் பல இதய நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது.

சுவாரஸ்யமான வேறு: கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...

எனவே நாம் அளவுக்கு அதிகமாக விரும்பி சாப்பிடும் சில உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம், தேவையில்லாமல் நம் உடலில் அதிகமான கொழுப்பு தேங்குவதைத் தடுக்க முடியும். இப்போது அந்த உணவுகளைப் பற்றிப் பார்ப்போமா?

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கரு

முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் தான் அதிக அளவு கொழுப்பு உள்ளது. 100 கிராம் முட்டையின் மஞ்சள் கருவில் 1,234 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது. ஒரு முட்டையில் மொத்தமாகவே 212 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது. இதில் மஞ்சள் கருவில் மட்டும் 210 மில்லிகிராம் உள்ளதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! எனவே அளவோடு முட்டை உண்பது நலம்!!

ஈரல்கள்

ஈரல்கள்

மட்டன் மற்றும் மாட்டிறைச்சி சாப்பிடும் போது, சிலர் ஈரல்களையும் சேர்த்து வெளுத்துக் கட்டுவார்கள். ஆனால் அதில் குண்டக்க மண்டக்க கொழுப்பு இருக்கிறது. உஷார்! 100 கிராம் ஆட்டு ஈரலில் 564 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது.

வெண்ணெய்

வெண்ணெய்

இந்தியர்கள் தங்கள் உணவுகளில் அதிகமாக வெண்ணெயைச் சேர்த்துக் கொள்வதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரட், கேக், பரோட்டா உள்பட நிறைய உணவுகளுடன் வெண்ணெயைக் கலந்து சாப்பிடுகிறோம். 100 கிராம் வெண்ணெயில் 215 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது. ஆகவே அதை பார்த்து சேத்துக்கோங்க!

கடல் உணவுகள்

கடல் உணவுகள்

மீன், இறால் உள்ளிட்ட சில கடல் உணவுகளில் கொழுப்புச் சத்து மிகுந்து உள்ளது. இவற்றை நன்றாகக் வேக வைத்து அல்லது நன்றாக வறுத்து சாப்பிடுவது நல்லது. 100 கிராம் இறாலில் 195 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது. ஒரு பெரிய இறாலில் 11 மில்லிகிராம் கொழுப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

சிக்கன்

சிக்கன்

பொதுவாகவே சிக்கன் என்பது கொழுப்பு குறைந்த உணவு தான். ஆனால் அதைச் சமைத்து உண்ணும் போது, அதில் உள்ள கொழுப்புச் சத்து தாறுமாறாக உயர்ந்து விடுகிறது. ஆனால் தோல் நீக்கிய சிக்கன் சாப்பிடுவது நல்லது.

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ்

உருளைக்கிழங்கு சிப்ஸ், முட்டை, சீஸ் பிஸ்கெட் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் வகை உணவுப் பொருட்களால் உடலில் கொழுப்பு அதிகமாகிறது. எனவே இதுப்போன்ற ஸ்நாக்ஸ்களை அளவோடு கொறித்தல் நலம்.

சீஸ்

சீஸ்

சீஸ் எனப்படும் பாலாடைக் கட்டியில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்து இருந்தாலும், 100 கிராம் சீஸில் 123 மில்லிகிராம் கொழுப்பும் உள்ளது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

இதுப்போன்ற இறைச்சிகளைக் வெட்டும் போதும், பதப்படுத்தும் போதும், அவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாகிறது. குறிப்பாக வாத்து இறைச்சியில் மிகவும் அதிகமாகக் கொழுப்பு உள்ளதாம்!

சீஸ் பர்கர்

சீஸ் பர்கர்

ஒரு சீஸ் பர்கரில் ஏறக்குறைய 175 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது. எனவே ப்ளேன் பர்கரை சாப்பிடுவதே நல்லது.

ஐஸ்க்ரீம்

ஐஸ்க்ரீம்

ஐஸ்க்ரீமிலும் நிறையக் கொழுப்புச்சத்து உள்ளதாம். ஒரு கப் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்குப் பதிலாக, அதே அளவுக்கு பழங்களைச் சாப்பிடுவதால் கொழுப்பு குறையும். மேலும் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 High Cholesterol Foods To Avoid

When it comes to good cholesterol, our body makes it with the help of correct diet. But when it comes to high cholesterol, you are at a high risk of heart disease and stroke. We give you a list of high cholesterol foods that you should avoid especially if you care for your health.
Desktop Bottom Promotion