For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க தலைவலியால அதிகம் அவஸ்தைப்படுறவங்களா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடாதீங்க...

By Maha
|

ஒருவருக்கு உடலில் ஏற்படும் வலிகளிலேயே மிகவும் தொல்லை தரக்கூடிய வலி தான் தலைவலி. தலை வலி வந்தால், அத்துடன் நமக்கு எரிச்சலும் அதிகரிக்கும். இதனால் அப்போது யாராவது நம்மிடம் பேசினால், அவரிடம் மிகவும் கடுமையான முறையில் நடந்து கொள்வோம். அதுமட்டுமின்றி, தலைவலி வந்துவிட்டால், அதன்பின் எந்த ஒரு செயலையும் செய்யவே முடியாது.

இத்தகைய தலைவலியானது அதிக சப்தத்துடன் இசை கேட்டாலோ, அதிகப்படியான வாசனையினாலோ அல்லது மன அழுத்தத்தினாலோ ஏற்படக்கூடும். அத்துடன் ஒருசில உணவுகளை உட்கொண்டாலும், தலைவலியானது அதிகரிக்கும். மேலும் அந்த உணவுகள் அனைத்தும் அனைவருக்கும் தலைவலியை தூண்டும் என்று சொல்ல முடியாது. ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தான் அப்பொருட்கள் தலைவலியை உண்டாக்கும்.

காலம் காலமாக கடைப்பிடித்து வந்த தலைவலிக்கான கை மருத்துவங்கள்!!!

இங்க அப்படி தலை வலியைத் தூண்டும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்தப் பொருட்களை படித்து பார்த்து, உங்களுக்கு அடிக்கடி தலை வலி வருமானால், அவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. சரி, இப்போது அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாக்லெட்

சாக்லெட்

சாக்லெட்டைப் பார்த்தாலே அனைவருக்கும், அதை சாப்பிட வேண்டுமென்று மனமானது குதூகலப்படும். ஆனால் உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருமானால், இதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் சாக்லெட்டானது தலைவலியை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹாலானது நேரடியாக தலைவலியை தூண்டாது. மாறாக அது உடலில் வறட்சியை ஏற்படுத்தி, அதன் காரணமாக தலை பாரத்தை ஏற்படுத்தும். அதனால் தான் ஆல்கஹால் அருந்திய பின்னர் தலையானது கடுமையாக வலிக்கின்றனது.

MSG

MSG

MSG என்பது அடிமைப்படுத்தும் ஒரு பொருள். இந்த பொருளானது சைனீஸ் உணவுகளில் அதிகம் இருக்கும். எனவே சிலருக்கு சைனீஸ் உணவுகளை சாப்பிட்ட பின்னர், கடுமையான தலை வலியுடன், அடிவயிறும் வலிக்க ஆரம்பிக்கும். அத்தகையவர்கள் சைனீஸ் உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

காப்ஃபைன்

காப்ஃபைன்

நிறைய மக்கள் தலை வலிக்கும் போது காபி குடித்தால், தலைவலி குணமாகும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் காபியை அளவாக குடித்தால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஆனால் அதையே அளவுக்கு அதிகமாக குடித்தால், அது கடுமையான தலைவலியை உண்டாக்கும்.

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீம்

பொதுவாக அதிக அளவில் குளிர்ச்சியுடன் இருக்கும் உணவுப் பொருட்கள் தலைவலியை ஏற்படுத்தும். அதில் ஒன்று தான் ஐஸ் க்ரீம். அதிலும் இவற்றில் உள்ள அதிகப்படியான குளிர்ச்சியானது நரம்புகளை பாதித்து, தாங்க முடியாத தலைவலியை ஏற்படுத்தும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

சிலருக்கு தைரமின் என்னும் கெமிக்கல் ஒப்புக் கொள்ளாது. அத்தகையவர்கள் வாழைப்பழத்தை உட்கொண்டால், கடுமையான வலியுடன் கூடிய தலைவலியை சந்திப்பார்கள். எனவே ஒருமுறை வாழைப்பழத்தை உட்கொண்டு தலைவலி வந்தால், வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

ரெட் ஒயின்

ரெட் ஒயின்

நிறைய மக்கள் ரெட் ஒயின் குடிப்பதால் கடுமையான ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுவார்கள். எனவே ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள், ரெட் ஒயின் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

சோயா

சோயா

சோயா பொருட்களிலும் MSG இருப்பதால், அவற்றை உட்கொண்டாலும் சிலருக்கு தலைவலியானது தூண்டப்படும். குறிப்பாக MSG என்னும் பொருள் ஒப்புக் கொள்ளாதவர்கள், இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

உலர் பழங்கள்

உலர் பழங்கள்

உலர் பழங்களான உலர் திராட்சை மற்றும் அத்திப் பழம் போன்றவையும் தலைவலித் தூண்டும். அதிலும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு தான் இந்த உணவுப் பொருளானது தலைவலியை ஏற்படுத்தும்.

ஈஸ்ட்

ஈஸ்ட்

ஈஸ்ட்டிற்கு சென்சிடிவ்வானவர்கள், பிரட், பன் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் இத்தகைய பொருட்களில் ஈஸ்ட் அதிக அளவில் இருக்கக்கூடும். இதனால் இவை சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Foods That Trigger Headaches

Foods that trigger headaches can be easily avoided. If you know about these foods that cause headaches, you can steer clear from them. To know more.. 
Desktop Bottom Promotion