For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!

By Maha
|

உடலில் சிறுநீரகம் ஒரு முக்கிய உறுப்பாகும். எனவே அத்தகைய சிறுநீரகத்தை சுத்தமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். அதிலும் தற்போது நிறைய பேருக்கு சிறுநீரகக் கற்கள் அதிகம் ஏற்படுகிறது. ஆகவே சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால், அத்தகைய சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். மேலும் சிறுநீரகம் தான் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அவ்வாறு நச்சுக்களை வடிகட்டும் போது, அந்த நச்சுக்களானது சிறுநீரகத்திலேயே தங்கிவிடுவதால், அவற்றை உடலில் இருந்து வெளியேற்ற சரியான உணவுகளை சாப்பிட வேண்டும்.

மேலும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவதற்கு பல உணவுப் பொருட்கள் உள்ளன. இத்தகைய உணவுப் பொருட்கள் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை மட்டுமின்றி, ஆபத்தான பல கெமிக்கல்களை முற்றிலும் வெளியேற்றிவிடும். அதிலும் பூண்டு, வெங்காயம் மற்றும் மீன் போன்றவை சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது. ஆனால் பலர் இத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டார்கள். குறிப்பாக சைவ உணவாளர்கள், இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பார்கள். ஆகவே தான், அத்தகையவர்களுக்காக மிகவும் சிறந்த சைவ உணவுப் பொருட்களை பட்டியலிட்டுள்ளோம்.

அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது தண்ணீரையும் அதிகம் பருக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டைகோஸ்

முட்டைகோஸ்

இந்த பச்சை இலைக்காய்கறியானது சிறுநீரகத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின் கே அதிகமாகவும் நிறைந்துள்ளது.

சிவப்பு திராட்சை

சிவப்பு திராட்சை

சிவப்பு நிற திராட்சையில் ஒருசில ஃப்ளேவோனாய்டுகள் நிறைந்துள்ளன. அதிலும் ரெஸ்வெராட்ரால் என்னும் இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் ஃப்ளேவோனாய்டு அதிகம் நிறைந்துள்ளது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மக்னீசியம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்ற சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

பார்ஸ்லி

பார்ஸ்லி

சைவ உணவாளர்கள், இந்த கீரையை அதிகம் உணவில் சேர்த்தால், சிறுநீரகம் மற்றும் உடல் முழுவதுக்கும் நல்லது. அதிலும் இதனை சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிட்டால், சிறுநீரக கற்களானது கரைந்துவிடும்.

காலிஃப்ளவர்

காலிஃப்ளவர்

இது சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் மற்றொரு உணவுப் பொருளாகும். ஏனெனில் காலிஃப்ளவரில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சிறுநீரகங்கள் சுத்தமாக இருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக வைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி அதிகம் நிறைந்திருப்பதால், அது உடல் முழுவதுக்கும் மிகவும் நல்லது.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும் அந்தோசையனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது.

இஞ்சி

இஞ்சி

சைவ உணவாளர்கள் உணவில் இஞ்சியை சேர்த்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருளானது, சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, இரத்தத்தையும் சுத்திகரிக்கும்.

ராஸ்ப்பெர்ரி

ராஸ்ப்பெர்ரி

ராஸ்ப்பெர்ரியில் எலாஜிக் ஆசிட் என்னும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதனை உணவில் சேர்த்தால், சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

குருதிநெல்லி (Cranberry)

குருதிநெல்லி (Cranberry)

சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை குணப்படுத்துவதில் குருதிநெல்லி பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் இதனை சாப்பிட்டால், சிறுநீரில் உள்ள அமிலத்தன்மையை அதிகரித்து, சிறுநீரகப் பாதையில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சிறுநீருடன் வெளியேற்றிவிடும்.

சிவப்பு குடைமிளகாய்

சிவப்பு குடைமிளகாய்

சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் சிவப்பு குடைமிளகாய் பெரிதும் உதவியாக உள்ளன. ஏனென்றால் அதில் வைட்டமின் சி, ஏ, பி6, போலிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக இதில் பொட்டாசியம் குறைவாக உள்ளது. எனவே தான் இது சிறுநீரகத்திற்கு மிகவும் நல்ல உணவாக உள்ளது.

தயிர்

தயிர்

தயிரும் செரிமானத்தை அதிரிக்கும் மற்றும் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. தயிரில் உள்ள ப்ரோபயோடிக் பாக்டீரியா இருப்பதால், அது சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. முக்கியமாக இந்த உணவை சைவ உணவாளர்கள் அதிகம் சாப்பிட வேண்டும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் நிறைந்துள்ள நன்மைக்கு அளவே இல்லை. ஏனெனில் அத்தகைய எண்ணெயை உணவில் சேர்த்தாலும், சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Veg Foods Good For Kidneys

Here are the best vegetarians foods that are good for the kidneys. Cleanse the kidneys and detox them naturally. Apart from including these good foods, drink lots of water to have healthy and clean kidneys.
Story first published: Wednesday, July 10, 2013, 11:49 [IST]
Desktop Bottom Promotion