For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன அழுத்தத்தை நீக்கும் ஆரோக்கியமான உணவுகள்!!!

By Ashok CR
|

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் வேகமாகவும் பரபரப்பாகவும் ஓடுகிறது அனைவரின் வாழ்க்கை. அதன் விளைவையும் தாக்கத்தையும் நம்மில் பல பேர் உணராவிட்டாலும் கூட, நம் உடலில் உண்டாகும் பல உடல்நல கோளாறுகளுக்கு இதுவே முக்கிய காரணமாக விளங்குகிறது. நீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி, மாணவராக இருந்தாலும் சரி அல்லது சும்மா இருந்தாலும் சரி குறிப்பிட்ட அளவிலான மன அழுத்த காரணக்கூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணக்கூறுகள் நாளுக்கு நாள் உங்கள் வாழ்க்கையில் அதிகரித்து கொண்டே தான் போகும். ஒரு கட்டத்தில் அதனை சமாளிக்க முடியாமல் நாம் திண்டாத தொடங்கி விடுவோம். ஆனால் மன அழுத்தத்தை நீக்க ஆரோக்கியமான பல உணவுகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அவைகளை உட்கொண்டால் மன அழுத்தம் நீங்கி உங்கள் மனநிலை சற்று நிம்மதி பெருமூச்சு விடும்.

தேவையில்லாத மன அழுத்தங்கள் உங்கள் உடலில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கி விடும். நீங்கள் எவ்வளவு தான் அமைதியாக இருந்து மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முயற்சித்தாலும் கூட, உங்கள் ஆழ் மனதில் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் ஓடிக் கொண்டே தான் இருக்கும். இது உங்களுக்கு பல உடல்நல கோளாறுகளை உண்டாக்கி விடும். முதலில் எந்த பாதிப்பும் தெரியாவிட்டாலும் கூட நாட்கள் ஓட ஓட உங்கள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் கெட்டு போய் விடும். அதனால் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு மன அழுத்தத்தை வெல்வது அவசியமாக உள்ளது.

மன அழுத்தத்தை நீக்கும் உணவுகளை பற்றி தெரிந்து கொண்டால் உங்கள் மன அழுத்தத்தை சுலபமாக அடக்கி விடலாம். நம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி அமைதியாக வாழ நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி வகையை பின்பற்றுவோம். சிலர் ஜங்க் உணவுகள் உண்ணுவதை நிறுத்துகிறார்கள் என்றால் இன்னும் சிலர் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள். அதனால் அவரவருக்கு எது உகந்ததாக இருக்குமோ அதனை பின்பற்றிக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Superfoods For Stress Relief

Stress factor tends to rise with our day to day life, and we are unable to cope with it. It is good to know that there are superfoods that can take away stress and let you be at ease.
Story first published: Thursday, December 26, 2013, 19:34 [IST]
Desktop Bottom Promotion