Just In
- 29 min ago வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. ரொம்பவும் ஈஸியா கேக் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
- 1 hr ago பனை நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க!
- 4 hrs ago சூடான நீரில் குளிப்பதால் இத்தனை நன்மைகளா..?
- 6 hrs ago 1/2 கப் பாசிப்பருப்பு வெச்சு.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்..
Don't Miss
- News ஐசியூவில் நடிகர் மன்சூர் அலிகான்.. சென்னை மருத்துவமனையில் சிகிச்சை.. உடல்நல பிரச்சனைக்கு என்ன காரணம்
- Finance சத்ய நாடெல்லா கைக்கு வரும் G42.. அபுதாபி முக்கியப்புள்ளி உடன் டீல்.. இது வேறலெவல் சமாச்சாரம்..!
- Sports டி20 உலகக்கோப்பை உத்தேசப் பட்டியல்.. இஷான் கிஷனுக்கு ஆப்பு வைத்த ரோகித் சர்மா.. எவ்ளோ ஆட்டம் போட்ட!
- Automobiles சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!!!
முகத்தில் திடீரென்று பிம்பிள் வர ஆரம்பித்தால், அனைவரும் முதலில் சொல்வது உடலில் வெப்பம் அதிகம் உள்ளது என்று தான். நிறைய மக்கள் இந்த உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுகின்றனர். பொதுவாக ஒருவரின் சாதாரண உடல் வெப்பநிலையானது 98.6 டிகிரி இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் சிறு வித்தியாசத்தில் மாறுபடும். மேலும் இந்த வெப்பநிலையானது காலநிலைக்கு ஏற்றவாறு உடலில் இருக்கும்.
ஆனால் இந்த உடல் வெப்பநிலையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இந்த அதிகப்படியான உடல் வெப்பத்தை வெப்ப அழுத்தம் என்றும் சொல்வார்கள். இத்தகைய உடல் வெப்பமானது அதிகம் இருந்தால், அது தானாக குறையாமல், வயிற்று வலி, உள்ளுறுப்புகளில் பாதிப்பு, பிம்பிள், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சோர்வு, மயக்கம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக உடல் வெப்பமானது அதிகமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில், அதிகப்படியான வெப்ப காலநிலை, அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இருப்பினும் இத்தகைய உடல் வெப்பத்தை இயற்கை முறையில் தணிக்க முடியும். அதில் முக்கியமாக உடலில் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தண்ணீரை அதிகம் பருக வேண்டும். இதனால் உடலின் வெப்பத்தை சீரான முறையில் பராமரிக்க முடியும். அதிலும் தண்ணீரை மட்டும் தான் பருக வேண்டும் என்பதில்லை, குளிர்ச்சி தன்மை அதிகம் நிறைந்த பானங்களை பருகுவதன் மூலமும், உடல் வெப்பத்தை தணிக்க முடியும்.
சரி, இப்போது உடல் வெப்பத்தை தணிக்கக்கூடிய சில ஜூஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை தினமும் குடித்து வந்தால், உடல் வெப்பத்தை எளிதில் குறைக்க முடியும்.