For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் ஆரோக்கியமா இருக்க, ஜூஸை ட்ரை பண்ணலாமே!!!

By Maha
|

Healthy Green Vegetable Juice To Try
உடல் ஆரோக்கியத்தில் பானங்களும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய ஜூஸில் பழங்களானாலும் சரி, காய்கறிகளானாலும் சரி, இரண்டிலுமே நிறைய புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அதனால் தான், திரையுலகினர், ஆரோக்கிய நிபுணர்கள் மற்றும் டயட்டில் இருப்போர் தினமும் ஒரு டம்ளர் பழம் அல்லது காய்கறி ஜூஸை குடிக்கிறார்கள்.

ஆனால் காய்கறி மற்றும் பழங்களால் செய்யப்படும் பானங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன. எப்படியெனில் பழங்களை ஜூஸரைப் பயன்படுத்தி செய்கின்றோம். காய்கறிகளை மிக்ஸரைப் பயன்படுத்தி தயாரிக்கின்றோம். அதிலும் சாதாரண காய்கறிகளால் தயாரிக்கப்படும் ஜூ1ல் நார்ச்சத்துக்கள் மட்டும் தான் நிறைந்திருக்கும். எனவே அவற்றை குடிப்பதற்கு பதிலாக, பச்சை இலைக் கீரைகளால் செய்யப்படும் ஜூஸில் நிறைய சத்துக்கள் உள்ளன. குறிப்பாக கலோரிகள் குறைவாகவும், வைட்டமின்கள் அதிகமாகவும் இருக்கும்.

ஜூஸ் தயாரிக்க பல கீரைகளைப் பயன்படுத்தலாம். அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி, பரட்டை கீரை (kale), பார்ஸ்லி (parsley) மற்றும் பழங்களில் கிவி மற்றும் மாங்காய் போன்றவற்றால் செய்யப்படும் ஜூஸில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. இதனை தினமும் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியத்துடன், எடையும் குறையும். இந்த மாதிரியான கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் குளோரோபில்லை தயாரிப்பதால், அவற்றை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, இரத்த ஓட்டம் அதிகரித்து, உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலில் செரிமான மண்டலம் சீராக இயங்கி, புற்றுநோய் வராமல் தடுக்கும்.

மேலும் இந்த ஜூஸில் மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இவற்றை தினமும் குடிக்க, ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்களை எளிதில் பெறலாம். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின்களான வைட்டமின் ஏ, சி மற்றும் டி உள்ளது. இப்போது எந்த காய்கறி, கீரை மற்றும் பழங்களை வீட்டில் செய்து குடிக்கலாம் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Green Vegetable Juice To Try | உடல் ஆரோக்கியமா இருக்க, ஜூஸை ட்ரை பண்ணலாமே!!!

There are many vegetable juices that can be prepared using fresh green vegetables. So, instead of opting for just vegetable juice, go for green juices. They are healthy, low in calories and stuffed with vitamins. Check out some healthy green juices that you can prepare at home and enjoy its nutritional benefits.
Desktop Bottom Promotion