For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீரான மாதவிடாய் சுழற்சி இல்லையா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

By Maha
|

பொதுவாக இறுதி மாதவிடாயானது 45-55 வயதுள்ள பெண்களுக்குத் தான் ஏற்படும். இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம், பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன்களின் உற்பத்தியானது குறைந்து, இனப்பெருக்க மண்டலமானது மாதவிடாய் சுழற்சியை குறைத்துவிடும். இவ்வாறு ஹார்மோன்களில் மாற்றம் உண்டாவதால், மனதில் அழுத்தம், உறவில் ஈடுபாடின்மை, சோர்வு, தூக்கமின்மை, தலைவலி போன்றவை ஏற்படும்.

ஆனால் அத்தகைய மாதவிடாய் சுழற்சியானது இளம் வயதிலயே சரியாகவும், சீராகவும் நடைபெறாவிட்டால், பின் அது பிற்காலத்தில் கருத்தரிக்கும் போது பிரச்சனையை உண்டாக்கும். எனவே இத்தகைய பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரிசெய்து விட வேண்டும். இதற்காக மருந்து மாத்திரைகள் போன்றவற்றை மேற்கொள்வதை விட, இயற்கை முறைகளைப் பின்பற்றி சரிசெய்து விடலாம்.

பொதுவாக இந்த பிரச்சனை இளம் வயதில் ஏற்படுவதற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டால், மாதவிடாய் சுழற்சியை சீராக்கலாம். அதுமட்டுமின்றி வேறு சில போதிய சத்துக்கள் உடலில் இல்லாததும் மற்றொரு காரணம். இப்போது அந்த மாதவிடாய் சுழற்சியை சீராக்குவதற்கு எந்த மாதிரியான உணவுகளை உண்டால், சீராக்கலாம் என்பதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீன்கள்

மீன்கள்

மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. எனவே இதனை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், இதய நோய் ஏற்படுவதை தடுப்பதோடு, மார்பக புற்றுநோய் உண்டாவதையும் தடுக்கலாம். மேலும் இந்த மீனை பெண்கள் உணவில் அதிகம் சேர்த்தால், சீரான மாதவிடாய் சுழற்சியைப் பெறலாம். குறிப்பாக சால்மன், ஹெர்ரிங் மற்றும் சூரை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.

பால்

பால்

பாலில் அதிகப்படியான கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. ஆகவே பெண்கள் தினமும் பால் குடிப்பது நல்லது.

தானியங்கள்

தானியங்கள்

தானியங்களில் நார்ச்சத்து மட்டுமின்றி, செரிமானத்தை மெதுவாக நடைபெற வைக்கவும், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும் தன்மை உடையது. மேலும் செரிமானம் மெதுவாக நடைபெறுவதாலும், குறைவான கலோரிகள் இருப்பதாலும், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸில் ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி6 மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. இத்தகைய சத்துக்கள் மாதவிடாய் சுழற்சியை மட்டும் அதிகரிப்பதோடு, இனப்பெருக்க மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைக்கும்.

தயிர்

தயிர்

எலும்புகளில் நோய்கள் எதுவும் தாக்காமல் ஆரோக்கியமாகவும் வலுவோடும் இருப்பதற்கு, பால் பொருட்களில் ஒன்றான தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மாதவிடாய் சுழற்சியும் சரியாக நடைபெறும்.

ஆளி விதை

ஆளி விதை

ஆளி விதையிலும் கால்சியம் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது மாதவிடாய் சுழற்சியை சீராக்குவதில் முக்கியமானது.

பழங்கள்

பழங்கள்

பழங்கள் சுவையுடன் மட்டும் இருப்பதில்லை, அவற்றில் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. எனவே ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கு பழங்களையும் அதிகம் சாப்பிட வேண்டும்.

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸ்

நட்ஸில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று நன்கு தெரியும். ஆனால் அந்த நட்ஸ் வகைகளில் பிரேசில் நட்ஸ் மாதவிடாய் சுழற்சியை சீராக வைக்கும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.

ஆரோக்கியமான கொழுப்புக்கள்

ஆரோக்கியமான கொழுப்புக்கள்

ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யலாம்.

குருதிநெல்லி (Cranberries)

குருதிநெல்லி (Cranberries)

பெர்ரிப் பழங்களின் சத்துக்களை சொன்னால் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அதிலும் இவற்றை சாப்பிடுவதால் உடல் எடையை குறைவதோடு, புற்றுநோய், மாரடைப்பு மற்றும் மாதவிடாய் சுழற்சி பிரச்சனை போன்றவற்றை சரிசெய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Foods To Ease Menopause | சீரான மாதவிடாய் சுழற்சி இல்லையா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

Menopause "end of monthly cycles", is a natural condition among women between 45-55 years of age. There are many women who suffer from menopause in an early stage. Well, there are few natural ways to delay menopause. Here is a list of healthy and nutritious foods that you must include in your menopause diet.
Story first published: Saturday, February 23, 2013, 20:40 [IST]
Desktop Bottom Promotion