For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

By Maha
|

திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என்ற இரண்டு நிறங்களில் உள்ளன. அவற்றில் எதில் அதிக நன்மை உள்ளது என்று பலர் குழப்பத்தில் இருப்பார்கள். ஆனால் எந்த திராட்சையை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் ஒன்றே. அதிலும் திராட்சையில் நிறைய வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

குறிப்பாக வைட்டமின் கே, சி, பி1, பி6 போன்றவையும், மாங்கனீசு மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி திராட்சையில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், பலவகையான பைட்டோ நியூட்ரியன்ட்களும் நிறைந்துள்ளதால், அவை உடலும் நினைக்க முடியாத அளவில் நன்மையை தருகின்றன.

வேறு படிக்க வேண்டுமா? பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

குழந்தைகளுக்கு திராட்சை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அதன் நிறம் குழந்தைகளை ஈர்ப்பதாலேயே. மேலும் திராட்சையை பலவாறு சாப்பிடலாம். அதில் ஜூஸ், ஜாம், ஜெல்லி, ஒயின், வினிகர் போன்றவை. சரி, இப்போது அந்த திராட்சையை சாப்பிட்டால், என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமான இதயம்

ஆரோக்கியமான இதயம்

இதயத்தைப் பற்றி கவலை கொள்பவர்களாக இருந்தால், உடனே அந்த கவலையை விடுங்கள். ஏனெனில் ஒரு டம்ளர் ஒயினை சாப்பிடும் போது எடுத்துக் கொண்டால், இதயத்தில் எந்த பிரச்சனையும் வராமல், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

திராட்சையின் நன்மைகளில் ஒன்று தான், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்வது. ஆம், இதில் உள்ள ஆர்கானிக் ஆசிட், செல்லுலோஸ் மற்றும் சர்க்கரை, மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்தால், குணமாகிவிடும்.

நீரிழிவு

நீரிழிவு

திராட்சையில் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டு வர, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

திராட்சையில் உள்ள ஃப்ளேவோனாய்டுகளுள் ஒன்றான க்யூயர்சிடின் இருப்பதால், அவை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் உடலில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

புற்றுநோய்

புற்றுநோய்

திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சியை தடுக்கும் பொருள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் நாள்பட்ட காயங்களை சரிசெய்யவும், புற்றுநோயை உண்டாக்கும் செல்களையும் அழித்துவிடும். மேலும் இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகளான அந்தோசியனின்கள் மற்றும் புரோஅந்தோசியனின்கள், புற்றுநோய் மேலும் பெரிதாவதைத் தடுக்கும்.

ஒற்றை தலைவலி

ஒற்றை தலைவலி

நன்கு கனிந்த திராட்சையால் செய்யப்பட்ட ஜூஸ் சாப்பிட்டால், ஒற்றைத் தலைவலியைத் தடுக்கலாம். அதிலும் இது நாள்பட்ட வலியாக இருந்தால், தினமும் காலையில் தண்ணீர் சேர்க்காத திராட்சை ஜூஸ் குடித்து வர குணமாகும்.

ஆரோக்கியமான மூளை

ஆரோக்கியமான மூளை

திராட்சையில் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இது நரம்பியல்-சிதைவு வளர்ச்சி நோய் ஏற்படுவதையும் தடுக்கும் திறனுடையது.

எடை குறைவு

எடை குறைவு

திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரால், உடல் எடை குறைய உதவியாக உள்ளது. மேலும் ஆராய்ச்சி ஒன்றிலும், ரெஸ்வெராட்ரால் கொழுப்புக்கள் தங்குவதை குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம்.

இளமை தோற்றம்

இளமை தோற்றம்

திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடும், சுருக்கமின்றியும் வைத்துக் கொள்ளும். மேலும் திராட்சை ஜூஸை தினமும் சாப்பிட்டு வந்தால், முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Juicy Grapes

Grapes are filled with various vitamins like K, C, B1, B6, manganese and potassium. These fruits are very rich in antioxidants and variety of phytonutrients that helps in curing many ailments including constipation, diabetes, asthma, heart diseases etc. So, lets take a look on various health benefits of grapes.
Desktop Bottom Promotion