For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கு ஏற்படும் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை தடுக்கும் உணவுகள்!!!

By Maha
|

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பைக் கட்டிகள். இந்த பிரச்சனை பொதுவாக 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குத் தான் ஏற்படும். ஆனால் தற்போது 20 வயதுள்ள பெண்களுக்கே, இந்த பிரச்சனை வருகிறது. இதற்கு பெரும் காரணம் ஹார்மோன் மாற்றங்களே. அதுமட்டுமல்லாமல், ஆரோக்கியமற்ற டயட், போதிய உடற்பயிற்சியின்மை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கெட்ட பழக்கங்களாக புகைப்பிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்றவை ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, இனப்பெருக்க மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறை விளைவிக்கின்றன.

இத்தகைய சினைப்பைக் கட்டிகள் பெண்களுக்கு வந்தால், அதனை உடனே தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒருசில அறிகுறிகளை வைத்து உறுதி செய்து கொண்டு, மருத்துவரை அணுகலாம். அதில் சில அறிகுறிகளான முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல் எடை அதிகரித்தல், கருத்தரிப்பதில் பிரச்சனை போன்றவை. மேலும் சில பி.சி.ஓ.எஸ் அறிகுறிகளைப் பற்றி ஏற்கனவே தெளிவாக பார்த்திருக்கிறோம். ஆனால் அதனை குணப்படுத்துவதற்கான உணவுகளை பார்த்ததில்லை.

பி.சி.ஓ.எஸ் என்னும் சினைப்பைக் கட்டிகள் குணப்படுத்தக்கூடியவையே. அதற்கு ஹார்மோனின் அளவை சீராக வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் சரியான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான சில உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக வைட்டமின் டி, ஒமேகா-3 ஃபோட்டி ஆசிட் மற்றும் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சால்மன்

சால்மன்

இந்த வகையான ஆரோக்கியமான மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளது. இவை இதயத்திற்கு மட்டுமின்றி, பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களின் உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அளவை அதிகரித்து, பிரச்சனையை போக்குகிறது.

லெட்யூஸ்

லெட்யூஸ்

இந்த பச்சை நிற ஊட்டச்சத்துமிக்க காய்கறியில், இன்சுலின் எதிர்ப்பொருள் உள்ளது. பொதுவாக பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்கள் அதிகமான இன்சுலின் சுரப்பினால் பாதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் இந்த காய்கறியை சாப்பிடுவது நல்லது.

பார்லி

பார்லி

பார்லியில் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் கொழுப்புக்கள் உள்ளது. ஆகவே பெண்கள் இதை சாப்பிட்டால், இதில் உள்ள குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ், அதிகப்படியான இன்சுலின் சுரப்பை தடுத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும்.

பட்டை

பட்டை

இந்த நறுமணமிக்க உணவுப் பொருள், இன்சுலின் அளவை குறைத்து, உடலில் தங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்புக்களை கரைத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை தடுக்கும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில், அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் குறைந்த அளவு கலோரி, கிளைசீமிக் இன்டெக்ஸ் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இதில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருளும் உள்ளதால், பெண்கள் நிச்சயம் இதனை சாப்பிட வேண்டும்.

காளான்

காளான்

பி.சி.ஓ.எஸ் பிரச்சனையால் அவஸ்தைப்படும் பெண்கள், காளானை சாப்பிடுவது அவசியம். ஏனெனில் இதில் கலோரி மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது.

சூரை மீன்

சூரை மீன்

ஊட்டச்சத்து அதிகம் நிறைந்துள்ள சூரை மீனில், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின்கள் வளமாக நிறைந்திருப்பதால், பெண்கள் அதிகம் சாப்பிடுவது இன்றியமையாதது.

தக்காளி

தக்காளி

அனைவருக்குமே தக்காளியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும், லைகோபைன் அதிகமாகவும் உள்ளது என்று தெரியும். மேலும் இது முதுமையை தள்ளிப் போடவும், உடல் எடையை குறைக்கவும் பெரிதும் துணையாக உள்ளது.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கு

இனிப்பாக ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால், அதற்கு கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும், மிகுந்த ஆரோக்கியத்தை தரும் சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடலாம். இதுவும் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை குணப்படுத்தும்.

முட்டை

முட்டை

முட்டையை ஒரு சூப்பர் ஃபுட் என்று சொல்லலாம். இதன் எண்ணற்ற நன்மைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஆம் எப்படியெனில், பெண்கள் தினமும் ஒரு முட்டையை வேக வைத்து, அதில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டால் பி.சி.ஓ.எஸ் பிரச்சனைக்கு மிகவும் நல்லது.

பால்

பால்

பி.சி.ஓ.எஸ் பிரச்சனை உள்ள பெண்களுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. இது கருப்பையில் முட்டையின் வளர்ச்சிக்கும், சினைப்பையில் ஃபோலிக்கில்களின் வளர்ச்சிக்கும் மற்றும் எலும்புகளின் வலிமைக்கும் பெரிதும் உதவியாக உள்ளது. எனவே பெண்கள் தினமும் 2 டம்ளர் பால் குடிப்பது மிகவும் இன்றியமையாதது.

தயிர்

தயிர்

தயிர் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகளில் முக்கியமானது. இந்த பால் பொருளில் கால்சியம் இருப்பது மட்டுமின்றி, சிறுநீரக குழாயில் ஏற்படும் தொற்றுகளை தடுக்கவும் துணையாக உள்ளது.

அதிமதுர வேர்கள்

அதிமதுர வேர்கள்

ஆய்வு ஒன்றில், அதிமதுர வேர்களை பெண்கள் சாப்பிட்டால், பிளாஸ்மா டெஸ்டோஸ்டிரோன் குறைந்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையிலிருந்து விடுபடலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பசலைக் கீரை

பசலைக் கீரை

கலோரி குறைவாக உள்ள பசலைக் கீரையையும் பெண்கள் சாப்பிட வேண்டும். ஏனெனில் இதனை சாப்பிடுவதால், அண்டவிடுப்பானது தூண்டப்படுவதோடு, உடல் பருமனால் ஏற்படும் மலட்டுத்தன்மையும் நீங்கிவிடும்.

நட்ஸ்

நட்ஸ்

ஹாசில் நட்ஸ் மற்றும் பாதாமில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் இருப்பதால், அவை உடலில் உள்ள அதிகப்படியான இன்சுலின் சுரப்பை தடுத்து, இதயத்தையும் ஆரோக்கியத்தோடு வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods For Women To Fight PCOS

Polycystic Ovary Syndrome is curable. By balancing the hormonal levels, PCOS can be treated. To prevent PCOS, women as well as teen girls must get involve in physical activities and include healthy foods. Take a look at foods that women with PCOS must include in their diet.
Story first published: Thursday, May 30, 2013, 11:30 [IST]
Desktop Bottom Promotion