For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிற்றுப் போக்கினால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க...

By Maha
|

அனைவருமே தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது வயிற்றுப் போக்கால் அவஸ்தைப்பட்டிருப்போம். இவ்வாறு வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் பொதுவாக குடலியக்கத்தில் ஏதேனும் காயங்களோ அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகளோ ஏற்பட்டால் வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் பலர் உணவுகளால் வயிற்றுப் போக்கிற்கு ஆளாகியிருப்பார்கள். உதாரணமாக, காரமான உணவுகள், கடலைப் பருப்பு போன்றவற்றால் கூட சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் பானங்களில் பால், காப்ஃபைன் போன்றவையும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். ஏன் மாசுப்படுத்தப்பட்ட உணவுகளில் பாக்டீரியாக்கள், வைரஸ் மற்றும் நச்சுக்கள் அதிகம் இருப்பதாலும், முறையற்ற குடலியக்கம் ஏற்பட்டு, அவை இறுதியில் வயிற்றுப் போக்கினை உண்டாக்குகின்றன. எனவே எந்த ஒரு உணவை சாப்பிடும் முன்னும், நன்கு யோசித்து, சுத்தமாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

ஏனெனில் வயிற்றுப் போக்கு என்பது சாதாரணமானது அல்ல. இதனால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே ஏற்கனவே வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள், வயிற்றுக்கு தொல்லை தரும் எந்த ஒரு உணவையும் சாப்பிடக் கூடாது. இல்லாவிட்டால், அவை வயிற்றில் பிரச்சனைகளை இன்னும் அதிகமாக்குவதோடு, வயிற்றுப் போக்கினையும் ஏற்படுத்திவிடும்.

வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த தீர்வு என்றால், நீரில், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். இப்போது அத்தகைய வயிற்றுப் போக்கை உண்டாக்கும் சில உணவுப் பொருட்களை பட்டிலிட்டுள்ளோம். வயிற்றுப் பிரச்சனை அல்லது வயிற்றுப் போக்கினால், அடிக்கடி பாதிக்கப்படுபவர்கள், இந்த உணவுப் பொருட்களையெல்லாம் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் இயற்கையிலேயே அதிக அமிலத்தன்மை கொண்டவை. எனவே அவை இரைப்பையில் ஒருவித இடர்பாட்டை ஏற்படுத்தி, அதில் உள்ள அமிலம் மலத்தை தளரச் செய்து, வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது. சிட்ரஸ் பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை தான். ஆனால் அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அதனை அதிக அளவில் சாப்பிட்டால், அவை இறுதியில் வயிற்றுப் போக்கிற்கு வழிவகுக்கும். எனவே இதனை அளவாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

முட்டைகோஸ்

முட்டைகோஸ்

முட்டைகோஸில் சல்பர் மற்றும் கரையாத நார்ச்சத்து இருப்பதால், அவை வாயுத் தொல்லையை உண்டாக்கி, வயிற்றுப் போக்கையும் உண்டாக்கும். ஏனெனில் இவை கரையாத நார்ச்சத்து கொண்டிருப்பதால், அவை நேரடியாக குடலை அடைந்து, வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது.

பூண்டு

பூண்டு

பூண்டிலும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இவையும் வாயுத் தொல்லையை உண்டாக்கி, வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும். ஆகவே வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள், பூண்டு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

பருப்புகள்

பருப்புகள்

பருப்பு வகைகளும் வயிற்றுப் போக்கினை உண்டாக்கக்கூடியவை தான். அவை செரிமானப் பிரச்சனையை உண்டாக்குவதோடு, சில நேரங்களில் செரிமானமாகாத உணவுப் பொருட்கள் நேரடியாக பெருங்குடலை அடைந்து, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் போக்கினை உண்டாக்கிவிடும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

காரமான மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் எளிதில் செரிமானமடையாது. எனவே அவை வாயு தொல்லையை ஏற்படுத்தி, குடலியக்கத்திலும் இடையூறை ஏற்படுத்திவிடும்.

குடைமிளகாய்

குடைமிளகாய்

குடைமிளகாயில் கேப்சைசின் என்னும் மலத்தினை தளரச் செய்யும் பொருள் உள்ளது. இந்த உணவுப் பொருள் உடனடியாக வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தாது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், வயிற்றுப் போக்கினை உண்டாக்கிவிடும்.

பால்

பால்

பாலும் வயிற்றுப் போக்கினை உண்டாக்கும். அதுவும் பால் புரத ஒவ்வாமை (lactose intolerance) உள்ளவர்களுக்கு, வயிற்றுப் போக்கு ஏற்படும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள், பால் மற்றும் மற்ற பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

காப்ஃபைன்

காப்ஃபைன்

காப்ஃபைன் செரிமான மண்டலத்திற்கு இடையூறு ஏற்படுத்தி, குடலியக்கத்தில் சுருக்கத்தினை ஏற்படுத்துவதால், வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும். எனவே அளவாக காப்ஃபைன் பருகுவது சிறந்தது.

பழச்சாறு

பழச்சாறு

பழச்சாறுகளில் அதிக அளவில் ஃபுருக்டோஸ் இருப்பதால், அவை வயிற்றில் உப்புசம், வாயுத் தொல்லை மற்றும் வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும். எனவே ஃபுருக்டோஸ் உள்ள பழச்சாறுகளை பருகுவதை தவிர்க்க வேண்டும்.

லிச்சி

லிச்சி

பல நேரங்களில், இந்த சாறு நிறைந்த லிச்சி பழமும் வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும். எனவே வயிற்றுப் போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Cause Diarrhoea | வயிற்றுப் போக்கினால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க...

Here is a list of few foods that causes loose stools. If you frequently suffer from diarrhoea, avoid these foods.
Desktop Bottom Promotion