For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!!!

By Maha
|

ஆஸ்துமா ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனை. இன்றைய காலத்தில் நிறைய பேர் இந்த சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நாள்பட்ட சுவாக மற்றும் நுரையீரல் கோளாறு, பரம்பரையினாலும் ஏற்படும். அதுமட்டுமல்லாமல், தூசிகள் நிறைந்த சுற்றுப்புறத்தில் இருந்தாலும் ஆஸ்துமா வரும். இந்த ஆஸ்துமாவிற்கு எந்த ஒரு நிரந்தர தீர்வும் இல்லை. இருப்பினும், அவற்றை முறையான மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். மேலும் தற்போது திடீரென்று வரும் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த ஆஸ்துமா பம்ப் மார்கெட்டில் வந்துள்ளது.

ஆனால் ஒருசில இயற்கை வைத்தியத்தின் மூலம் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, சூடான நீரில் தேன் ஊற்றி, நுகர்ந்தால் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தலாம். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து குடித்து வந்தாலும், கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து சாப்பிட்டால், ஆஸ்துமா குணமாகும்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்துமா நோயாளிகள் நாள்பட்ட சுவாசக் கோளாறை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும். அதிலும் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா-கரோட்டீன் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது, ஆஸ்துமாவை கட்டுப்பாட்டுடன் வைக்கும். இப்போது அந்த உணவுகளைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேரட்

கேரட்

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இது ஆஸ்துமாவிற்கு மட்டுமின்றி, சருமம் மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லது.

மீன் எண்ணெய்

மீன் எண்ணெய்

மீன் எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நல்ல அளவில் உள்ளதால், அது சுவாசக் கோளாறை குணப்படுத்தி, சரியான செயல்பட வைக்கும். எனவே ஆஸ்துமாவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான மீன் மற்றும் மீன் எண்ணெயை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

சிவப்பு குடைமிளகாய்

சிவப்பு குடைமிளகாய்

இதில் நுரையீரலை நன்கு செயல்பட வைக்கும், வைட்டமின் சி வளமான அளவில் நிறைந்துள்ளது.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கும். எனவே அத்தகையவர்கள் அதிகமான அளவில் பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாகற்காய்

பாகற்காய்

பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, ஆஸ்துமா நோயாளிகளுக்கும் தான் நல்லது. எனவே தினமும் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, ஆஸ்துமா கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

காலிஃப்ளவர்

காலிஃப்ளவர்

இந்த பச்சை இலை காய்கறியில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் கனிமங்கள் நல்ல அளவில் நிறைந்துள்ளன.

கிவி

கிவி

கிவியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், நுரையீரலில் இருக்கும் வீக்கம், அலர்ஜி போன்றவற்றை சரிசெய்யும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

நுரையீரலில் வீக்கங்கள் அதிகரித்தால், அது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும். எனவே வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது வீக்கத்தை குறைக்கும்.

பசலைக் கீரை

பசலைக் கீரை

ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், பசலைக் கீரையை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது ஆரோக்கியமானதும், ஊட்டச்சத்து நிறைந்ததும் கூட.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் அழற்சி எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளதால், ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவுப் பொருள்.

கேல்

கேல்

கேல் கீரையில் வைட்டமின் சி மற்றும் ஏ அதிகம் உள்ளதால், ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த கேல் கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

களைக்கோசு (Brussels sprouts)

களைக்கோசு (Brussels sprouts)

ஆஸ்துமாவின் நிலைமை மோசமாக இருந்தால், களைக்கோசுவை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மிளகாய்

மிளகாய்

மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் சுவாசக் கோளாறில் சளி இருந்தால், அதனை நீக்குவதற்கு மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இதிலிருந்து நல்ல நிவாரணத்தை தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Control Asthma

Asthmatics should follow a proper diet in order to keep the chronic disorder under check. Healthy vitamins like A, E, C and beta-carotene can be of great help. If you suffer from asthma, here are few foods that you must include in your diet. Take a look.
Story first published: Saturday, June 1, 2013, 12:40 [IST]
Desktop Bottom Promotion