உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 20 வண்ணமயமான உணவுகள்!!!

Updated: Friday, August 23, 2013, 12:04 [IST]
 

நோய் இல்லாத உடலையே அனைவரும் விரும்புவோம். மேலும் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று நம் முன்னோர் கூறுவர். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், நோயில்லாமல் வாழவே அனைவரும் விரும்புவோம். நம் அன்றாட உணவிலிருந்து வெளி இடங்களில் எடுத்து கொள்ளும் உணவு வரை, அனைத்தும் பார்த்து பார்த்து செய்வது எதற்கு என்றால், நோய் இல்லாமல் வாழ்வதற்கே.

இத்தகைய உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பலரும் பலவித பொருட்களை உட்கொள்கின்றனர். ஆனால் ஒழுங்கான முறையில் முறையான உணவை உட்கொண்டாலே, ஆரோக்கியமாக வாழ முடியும். பலவித மருந்து மாத்திரைகள் உட்கொள்வதை காட்டிலும், வீட்டிலேயே சத்தான உணவை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

அவ்வாறு அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவில் பலவித நிறங்கள் இருக்கும். பச்சை, மஞ்சள், கருப்பு போன்ற பல நிறங்களில் உணவுப் பொருட்கள் உள்ளன. இவை உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது நிறத்துடன், சத்துக்களை அதிகம் உள்ளடக்கிய சில உணவுப் பொருட்களின் பட்டியலைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்.

எலுமிச்சை

அன்றாடம் எலுமிச்சை பழத்தை எடுத்து கொண்டால், உடலுக்கு தேவையான 100% வைட்டமின் சி சத்தானது கிடைக்கும். மேலும் இது எளிமையாக கிடைக்கக்கூடிய பழமாதலால், இதை அனைவராலும் வாங்க முடியும். அதிலும் இது உடலில் உள்ள கொழுப்புத் தன்மையைக் குறைக்க கூடிய பழம் மட்டுமின்றி, புற்றுநோய்க்கு காரணமான செல்களை அழித்து எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கின்றது.

பச்சை பட்டாணி

இந்த சிறிய பட்டாணிக்கு அதிக அளவில் சத்துக்கள் இல்லையென்றாலும், இதில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. அதிலும் இதில் கனிமம், வைட்டமின் மற்றும் இரும்பு போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.

முட்டையின் மஞ்சள் கரு

கோலைன் போன்ற சத்துக்கள் முட்டையின் மஞ்சள் கருவில் அதிகம் உள்ளது. இந்த கோலைன் மார்பக புற்றுநோயைத் தடுக்கின்றது. மேலும் கண் சம்பந்தப்பட்ட நோயையும் இது தடுக்கின்றது. பலர் இதனால் இதய நோய் வரும் என்று அஞ்சுகின்றனர். ஆனால் இதை அளவுடன் எடுத்துக் கொண்டால் எல்லா வித நோயிலிருந்தும் தப்பிக்க முடியும்.

கருப்பு பீன்ஸ்

பொதுவாக பீன்ஸில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கும். குறிப்பாக புரோட்டீன்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்றவை அதிகம் நிறைந்திருக்கும். எனவே இதனை வேக வைத்து சாப்பிட்டால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசியெடுக்காமலும் இருக்கும். இதனால் உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் சேர்வது தடைபடுவதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆப்பிள்

சிவப்பு ஆப்பிள்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் உள்ளது. இதை சாப்பிட்டால், விரைவில் வயதான தோற்றத்தை அடையாமலும், ஆரோக்கியமாக வாழவும் உதவுகின்றன. அதிலும் இதில் பாலிஃபீனால் என்ற ஆக்ஸிடன்ட்டு அதிகம் இருப்பதால், இப்பழம் ஆயுளை அதிகரிக்க உதவுகின்றது. மேலும் பல்வேறு நோய்களில் இருந்து இவை நம்மை காக்கின்றது.

தண்ணீர்

இது நிறமற்றது தான். ஆனால் அது கூட உணவில் நிச்சயம் இருக்க வேண்டும். ஏனெனில் அது உடலில் இருந்து நச்சுகளை நீக்க உதவுகின்றது. மேலும் உடல் வெப்பநிலையை பராமரித்து, சிறுநீரக கற்களை தடுக்கும். மூட்டுகளை மிருதுவாக வைத்திருக்கும். அதுமட்டுமின்றி உடலுக்கு தேவையான முக்கிய தாதுக்களை வழங்குகிறது. அதிக அளவில் நீர் அருந்துவது, உடல் வறட்சியை போக்கி ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்கின்றது.

அவகேடோ

இந்த கருமையான பச்சை உணவில் அமினோ அமிலம் உள்ளது. இது பல்வேறு இதயம் மற்றும் புற்றுநோய் வியாதிகளுக்கு எதிராக போராடுவதற்கு ஏதுவானது. மேலும் இதில் வைட்டமின் ஈ உள்ளதால், சருமம் பொலிவோடு இருக்கும்.

ஆப்ரிக்காட்

இந்த ஆரஞ்சு நிற உணவில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபைன் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உணவு கல்லீரல் நோய், புற்றுநோய் போன்ற நோய்களை குணப்படுத்துகின்றது.

பாதாம்

இந்த பாதாமை பழங்களுடனும், மாலை சிற்றுண்டியாகவும் எடுத்து கொள்ளலாம். ஏனெனில் இந்த பருப்பில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. அது உடலின் கெட்ட கொழுப்பை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ராஸ்ப்பெர்ரி

ராஸ்ப்பெர்ரி புற்றுநோய்க்கு காரணமான எலாஜிக் அமிலங்களை தடுக்கின்றது. மேலும் உயர் கொழுப்பு மற்றும் இதய நோய்கள் போன்ற பலவற்றை குறைக்கும் சக்தி கொண்ட இந்த ராஸ்பெர்ரி, நார்ச்சத்து அதிகம் உள்ள பழமும் கூட.

மாதுளை

மாதுளை புத்துணர்ச்சி அளிக்கும் சிவப்பு நிற பழம். இவை மூளை ஆரோக்கியமாக இயங்க உதவுகின்றது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலுக்கு ஏற்றது. இந்த பழத்தின் மூலம் ஆரோக்கியமான மூளை மற்றும் மன அழுத்தம் இல்லா வாழ்க்கையைப் பெற முடியும்.

சோளம்

இந்த மஞ்சள் உணவு, குறிப்பாக மழைக் காலத்தில் அனைவருக்கும் பிடித்த உணவாக உள்ளது. இவற்றில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகமாக இருக்கின்றது. கலோரி மிக குறைவாக இருக்கும் இது, உடலுக்கு மிகவும் நல்லது.

ப்ராக்கோலி

இந்த பச்சை உணவு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க உதவுகின்றது. மேலும் இதில் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது.

ஆளி விதை

இந்த சிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும் விதைகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்ததாகும். இவை இரத்த குழாய்களில் ஏற்படும் இரத்த அணுக்கள் கட்டிகளுடன் இருந்தால் அவற்றை குணமாக்கி, அடைப்பு ஏற்படாமல் காக்கின்றது. மேலும் பல்வேறு வகையான நோய்களிலிருந்தும், புற்றுநோயிலிருந்தும் காக்கும்.

பூசணிக்காய்

இந்த ஆரஞ்சு நிற காய், இதய நோயை தடுக்கும். இதில் பீட்டா-கரோட்டின் அதிக அளவில் உள்ளது. மேலும் கலோரி குறைந்த மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக இருக்கும் காயாகும்.

ப்ளூபெர்ரி

இந்த கருஞ்சிவப்பு நிறமுடைய பழம் ஆக்ஸிஜனேற்ற பண்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. ப்ளூபெர்ரிகளை அன்றாடம் எடுத்துக் கொள்வதால், மூளையை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். இது உடல் பருமனை தடுக்க உதவுவதோடு, உயர் இரத்த அழுத்தத்தைப் போக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் நல்ல அளவில் உள்ளது. மேலும் இதில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதை அன்றாடம் உணவில் சேர்த்து கொண்டால், செல் பாதிப்பை கட்டுபடுத்தி, திசுக்களை பலப்படுத்தலாம்.

கேரட்

இந்த ஆரஞ்சு நிற கேரட்டில் சிறந்த பண்புகள் உள்ளன. இவை மாலைக்கண் நோயை தடுப்பதோடு, கெட்ட கொழுப்பை குறைக்கிறது, மேலும் இது மாகுலர் திசு செயலிழப்பிற்கு எதிராக போராடும். முக்கியமாக புற்றுநோயை தடுக்க உதவும். கேரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால், சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

கிவி

கிவி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் உள்ளது. மேலும் இந்த பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், செல்லுலார் பாதிப்படைந்து மாகுலர் திசு செயலிழப்பு அடைவதைத் தடுக்கும்.

தக்காளி

இந்த சிவப்பு உணவில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இது சிறுநீர்ப்பை, வயிறு மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது.

Story first published:  Friday, August 23, 2013, 11:45 [IST]
English summary

20 Best Healthy Colourful Foods

If your main is goal to stay healthy and to prevent various chronic diseases, then it's time to stock up on different foods with different colours. In case, you still aren't sure as to why you eat add more colour to your diet, we give you solid reasons as by listing down top 20 best colourful foods and its benefits.
Write Comments

Subscribe Newsletter
Boldsky இ-ஸ்டோர்