For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தைராய்டை சரிசெய்யும் 13 ஆரோக்கிய உணவுகள்!!!

By Maha
|

தைராய்டில் இரண்டு வகைகள் உள்ளன. அவை ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம். இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் நமது உடலில் உள்ள தைராய்டு சுரப்பியானது அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்கு குறைவாகவோ ஹார்மோன்களை சுரப்பதனால் ஏற்படுவது தான். இந்த தைராய்டு சுரப்பியானது தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது. இரண்டு இன்ச் நீளமுள்ள இந்த சுரப்பியானது, உடலில் உள்ள மெட்டபாலிசம், கால்சியம் போன்றவற்றை சீராக வைக்க உதவுகிறது.

இத்தகைய தைராய்டு சுரப்பியில் ஏதேனும் கோளாறு இருந்தால், அவற்றை ஒருசில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம். நிறைய மக்கள் இத்தகைய அறிகுறிகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அவற்றை சாதாரணமாக நினைத்து விடுகின்றனர். அந்த அறிகுறிகளாவன: மன அழுத்தம், பசியின்மை, மலச்சிக்கல், மயக்கம், அதிகப்படியான சோர்வு, உடல் எடையை அடிக்கடி மாற்றம் போன்றவை. எனவே இத்தகைய அறிகுறிகள் அடிக்கடி உடலில் தென்பட்டால், சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று, அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்.

இந்த தைராய்டு குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் தான். ஆகவே சிகிக்கை மேற்கொண்டும் சரிசெய்யலாம். இதே சமயம் ஒரு சில உணவுகளை உட்கொண்டும், சரிசெய்துவிடலாம். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் இருந்து குணமாகலாம். ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது.

காளான்

காளான்

செலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

பூண்டு

பூண்டு

செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்தது.

பசலைக் கீரை

பசலைக் கீரை

பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. எனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால், நல்லது.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை சாப்பிடுவது சிறந்தது.

முட்டை

முட்டை

முட்டை மற்றும் பால் பொருட்கள் தைராய்டு சுரப்பிக்கு மிகவும் ஆரோக்கியமானது. இத்தகைய உணவுகளல் கால்சியம் மட்டுமின்றி, அதிகப்படியான அளவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது.

தானியங்கள்

தானியங்கள்

தானியங்களில் ப்ரௌன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.

மாட்டின் கல்லீரல்

மாட்டின் கல்லீரல்

மாட்டிறைச்சி என்றாலே சிலர் அறவெறுப்பாக நினைப்பார்கள். ஆனால் அத்தகைய மாட்டின் ஈரலில் வைட்டமின் பி12 மற்றும் செலினியம் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், செலினியம் குறைபாடு இருந்தால் குணமாக்கலாம்.

தக்காளி

தக்காளி

தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. முக்கியமாக இந்த உணவை தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. அத்தகைய ஃபேட்டி ஆசிட்கள் தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.

கடல் சிப்பி

கடல் சிப்பி

தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், காப்பர் அதிகம் உள்ள உணவுகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய காப்பர் கடல் சிப்பியில் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், தைராய்டு சுரப்பி சீராக இயங்குவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால், வாயுத் தொல்லை ஏற்படும் என்று பலர் தவிர்க்கின்றனர். ஆனால் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால், இதிலுள்ள அயோடின் தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

13 Healthy Foods For A Thyroid Diet | தைராய்டை சரிசெய்யும் 13 ஆரோக்கிய உணவுகள்!!!

Thyroid is a common health disorder. Many people suffer from a condition(Hyperthyroidism or Hypothyroidism). This disorder is curable through medical treatments. However, you can also treat hyperthyroidism and hypothyroidism naturally by including some thyroid healthy foods in your diet. If you want to include some healthy foods for thyroid, check out the list.
Story first published: Thursday, February 21, 2013, 12:00 [IST]
Desktop Bottom Promotion