For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிச்சயம் தவிர்க்க வேண்டிய 12 ஆரோக்கியமான உணவுகள்!!!

By Super
|

எல்லாம் வேக மையமாய் ஆகிவிட்ட இந்த காலத்தில் ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து பேசிக் கொள்ள கூட நேரம் போதவில்லை. இதில் இயந்திரமாய் யாரும் உட்கார்ந்து உண்ணவும் பொழுதில்லை. பின்னே எங்கே சமைப்பது! வீட்டில் சமைத்து உண்பதைக் காட்டிலும், நடந்து கொண்டே பேக் செய்யப்பட்ட உணவுகளை வாங்கி நடந்து கொண்டே உண்ணும் அளவிற்கு காலம் மாறி விட்டது. பேக் செய்யப்பட்ட உணவுகளை பார்க்கவும், விளம்பரத்தின் தந்திரங்களினாலும், அவை ஆரோக்கியமானதாக தெரிந்தாலும், அது உடலுக்கு பல தீங்குகளை விளைவிப்பதாகவே உள்ளன.

ஃபாஸ்ட் ஃபுட் மையமாய் மாறிவிட்ட, இந்நாட்களில் நாம் பதப்படுத்தப்பட்ட, பேக் செய்த உணவுகளையே பெரிதும் சார்ந்து இருக்கிறோம். அத்தகைய உணவுகளின் சுகாதார நலன்களினால் திருப்தி்ப்படும் நாம், அதன் போஷாக்கு மதிப்பை கணக்கிட தவறிவிடுகிறோம். இத்தகைய உணவுகளை வேண்டாம் என்று சொல்லி, நாம் தள்ளி வைக்க அதிக காலம் பிடிக்கும். இதோ பலசரக்கு சீட்டில் இருந்து நீக்க வேண்டிய 12 ஆரோக்கியமான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து, அதன் தீமைகளை அறிந்து, அதனை சாப்பிடுவதை அறவே தவிர்த்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பலதானிய மாவு (Multi Grain Atta)

பலதானிய மாவு (Multi Grain Atta)

சந்தையில் பேக் செய்து விற்கப்படும் பலதானிய மாவு (MultiGrain Atta) விற்பனையாளர்கள் சொல்வது போல், உண்மையில் அது பல தானியங்களால் செய்யப்படும் மாவு அல்ல. பேக்கில் இருக்கும் மூலப்பொருட்கள் (Ingredients) பட்டியலில் முக்கிய மூலப்பொருளாக முழு கோதுமை உள்ளதா என்று கவனிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த பேக்கில் சில வகை தானியங்களை சாதாரண கோதுமை மாவுடன் கலந்து அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று பொருள். எனவே இம்மாதிரியான மாவை வீட்டிலே எளிதாகவும், மலிவாகவும் செய்து விட முடியும்.

சோயா பால்

சோயா பால்

பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட சோயா பொருட்கள் மரபணு மாற்றப்பட்டது என்பதனை யாரும் அறிவது இல்லை. மேலும் பல சோயா பொருட்கள் இனப்பெருக்க பிரச்சனைகள் மற்றும் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுத்தும் இரசாயன நச்சான ஹெக்ஷேன் (hexane) மூலமாக தான் பதப்படுத்தப்படுகின்றது. எனவே ஆரோக்கியமான, பால் அல்லாத பொருட்கள் வேண்டுமானால், ஆடை நீக்கப்பட்ட பாலான ஸ்கிம் மில்க்கை பயன்படுத்தலாம்.

செயற்கை இனிப்புகள்

செயற்கை இனிப்புகள்

செயற்கை இனிப்புகளை விளம்பரப்படுத்தும் ஒரு நிறுவனம் பெரிய மோசடி நிறுவனம் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல். சர்க்கரைக்கு பதிலாக அஸ்பார்டேம் (Aspartame) மற்றும் சுக்ரலோஸ் (Sucralose) என்னும் செயற்கை இனிப்புகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, சர்க்கரை உட்கொள்வதை அறவே தவிர்த்தல் மிகவும் நல்லது. ஏனெனில் இம்மாதிரியான செயற்கை இனிப்புகள் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தி, இரைப்பை மற்றும் நாளமில்லா சுரப்பிகளை (Endocrine Glands) செயலிழக்க செய்கின்றன.

ஐஸ் டீ கலவைகள்

ஐஸ் டீ கலவைகள்

தூளாக்கப்பட்ட ஐஸ் டீ கலவைகள் ஒரு ஆரோக்கியமற்ற சந்தைப்படுத்தபடும் (Marketing) வித்தை. அதில் சர்க்கரை கலவையே அதிக அளவில் இருக்கும். இந்த கலவைகளில் உடலுக்கு கேடு விளைவிக்கும் பிரக்டோஸ் கார்ன் சிரப், பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் செயற்கை சுவைகளே அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே உடல் நலம் மற்றும் பொருளாதாரம் பொருட்டு, இம்மாதிரி பேக் செய்யப்பட்ட ஐஸ் டீ கலவைகளை காட்டிலும், வீட்டிலே ஐஸ் டீ கலவைகள் தயார் செய்து ஃபிரிட்ஜில் வைத்து கொள்வதே சிறந்தது.

செயற்கை வெண்ணெய் (Margaraine)

செயற்கை வெண்ணெய் (Margaraine)

பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய்க்கு பதிலாக மார்க்ரைன் (Margaraine) ஆரோக்கியம் நிறைந்த மாற்று பொருளாக கருதி உபயோகிப்பவர் மீண்டும் சிந்திக்க வேண்டும். பொதுவாக மார்க்ரைன் ஹைட்ரஜனேற்றப்பட்ட டிரான்ஸ் கொழுப்பு நிறைந்தது ஆகும். இது ஆரோக்கியமானதாக இருந்தாலும், உடலில் கொழுப்பு அளவுகளை கணிசமாக அதிகப்படுத்தி, நோய் எதிர்ப்பு திறனை மட்டுப்படுத்துகிறது. ஆகவே பதப்படுத்தப்பட்ட இவ்வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பருவ காலம் அல்லாமல் கிடைக்கப்பெறும் பழம் மற்றும் காய்கறிகள்

பருவ காலம் அல்லாமல் கிடைக்கப்பெறும் பழம் மற்றும் காய்கறிகள்

பருவ காலம் அல்லாமல் ஆண்டு முழுவதும் கிடைக்கப்பெறும் பழங்கள் ஆரோக்கியமானதாக இருப்பது மிகவும் ஆச்சரியப்பட தக்கதாகும். ஏனெனில் அவை செயற்கையாக பழுத்த அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பழங்களாக இருக்கக்கூடும். ஆகவே பருவ வாரியாக கிடைக்கும் பழங்களையே தேர்வு செய்தல் புத்திசாலி தனமாகும்.

டின் உணவுகள் (Canned Foods)

டின் உணவுகள் (Canned Foods)

டின்னில் அடைக்கப்பட்ட உணவுகளில் பிஸ்பினால் ஏ (Bisphenol A) என்னும் இரசாயனம் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த இரசாயனம் உடலில் ஹார்மோன்களை பாதிப்படைய செய்து விடும். அதிலும் உடலில் அதிக அளவில் பிஸ்பினால் ஏ சேர்வது இனப்பெருக்க பிரச்சனைகள் மற்றும் மார்பக நோய் உட்பட பலவகை உடல் கோளாறுகளை ஏற்படுத்தும். ஆகவே டின்னில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.

பாப் கார்ன்

பாப் கார்ன்

திரைப்படம் பார்க்கும் போது பாப் கார்னை கொறித்தல் ஒரு நல்ல யோசனை தான். இருப்பினும் அதற்கு மறுபக்கம் உள்ளது. நாம் உண்ணும் பாப் கார்ன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளத்தில் இருந்து தயார் செய்யப்பட்டவை மற்றும் பதப்படுத்தப்பட்ட உப்பு, பதப்பொருட்கள் போன்றவை பாப் கார்னின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கப்படுகின்றன. மேலும் அதிக அளவில் சோடியம் மற்றும் இன்ன பிற இரசாயனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. இதுபோக இன்னும் வெண்ணெய் சேர்த்த சுவையூட்டப்பட்ட பாப் காரன்கள் இன்னும் மோசமான விளைவுகளை தருபவை.

பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள்

பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள்

பேக் செய்யப்பட்ட பழச்சாறுகளில் சர்க்கரை மற்றும் பதப்பொருட்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டு இருக்கும். இதற்கு காரணம் அந்த பானத்திற்கு சுவையூட்டவும் மற்றும் நீண்ட காலம் கெடாமல் இருக்கவும் தான். பதப்படுத்தப்பட்டு பேக்குகளில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளைக் காட்டிலும், புத்துணர்வான பழங்களை உண்பதே சிறந்தது. இப்படி பழமாக உண்பதன் மூலம் சாற்றுடன் சதைப்பற்றில் உள்ள சத்துகளும் கிடைக்கும்.

உறைந்த இறைச்சி

உறைந்த இறைச்சி

உறைந்த இறைச்சியால் செய்யப்பட்ட பர்க்கர் போன்ற உணவுப் பொருட்களை வாங்குவது, கிச்சனில் சமையல் வேலையை இல்லாமல் செய்யலாம். ஆனால் அத்தகைய உணவு, உடலில் பதப்பொருட்களை அதிகரித்துவிடும். இம்மாதிரி சந்தைகளில் கிடைக்கும் உறைந்த இறைச்சியில் ஏகப்பட்ட பதப்பொருட்கள், ஹைட்ரஜன் ஏற்றிய எண்ணெய்கள் மற்றும் பல செயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். எனவே கடைகளில் புதிதாக இறைச்சி வாங்கி, அவற்றை பதனப்படுத்துதலே (Refridgerated) நல்ல யோசனை ஆகும்.

ஆற்றல் பானங்கள்/எனர்ஜி டிரிங்க்ஸ்

ஆற்றல் பானங்கள்/எனர்ஜி டிரிங்க்ஸ்

ஆற்றல் பானங்கள் காப்ஃபைனேற்றப்பட்டது மற்றும் சர்க்கரை அதிக அளவில் உள்ளது. இவை உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடியது. ஆகவே காலையில் வேண்டுமானால் 'கிக்குகாக' காபி பருகலாம். இது மற்ற ஆற்றல் பானங்களில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுபடுத்தும்.

பேக் செய்யப்பட்ட குடிநீர்

பேக் செய்யப்பட்ட குடிநீர்

பேக் செய்யப்பட்ட குடிநீர் வாங்கும் போது நீரின் தரத்தை மட்டும் ஆராயாமல், அந்த பாட்டில் எதனால் செய்யப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த பாட்டில் செய்ய பயன்படும் இரசாயனங்கள் (BPA and Phthalates) உடலுக்கு கேடு விளைவிப்பது. சிறிய அளவிலான இந்த இரசாயனம் கூட உடல் பருமன், மூளைச் சேதம் மற்றும் இனப்பெருக்க பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். அந்த மாதிரியான பாட்டில்கள் உடலுக்கு மட்டுமல்ல சுற்றுச் சூழலையும் பாதிக்கக்கூடியவை.

ஆரோக்கியமான உணவுகள் என்று நாம் எண்ணிய உணவுகள் உடலுக்கு இம்மாதிரி பல கேடுகள் விளைவிக்கக்கூடும். ஆகவே மேலே கூறப்பட்ட உணவுகளை தவிர்த்தல் மிகவும் சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Health Foods that You Should Never Eat Again

In the age of quick fix meals, we have become increasingly dependent on pre-packaged and processed foods. While you may feel settled with the convenience and health benefits such foods offer, what you fail to evaluate is their overall nutritive value. It is high time you say no to these foods and stay safe, both physically and financially. So, here are 12 such foods, which you should instantly strike-off from your grocery list.
Desktop Bottom Promotion