For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கான 10 சூப்பர் உணவுகள்!!!

By Super
|

உடலுக்கு மிகவும் அவசியமானது சத்துக்கள். எவ்வளவு தான் நாக்குக்கு சுவை முக்கியமாக இருந்தாலும், உடலுக்கு சத்து தான் தேவை. நாக்குக்கு சுவை வேண்டுமென்று கண்ட கண்ட உணவை உண்டால், உடலானது ஆரோக்கியத்தை இழந்துவிடும். நல்ல சத்தான உணவை சுவையுடன் சமைத்து சாப்பிட்டால், சுவை, சத்து என இரண்டும் கிடைக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதுமட்டுமின்றி இக்காலத்தில் அவசர வேலை என்று உணவில் பலர் கவனம் செலுத்துவதில்லை. இதனால் குழந்தைகள் பெரும்பான்மையாக பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்களும், போதிய சத்து இல்லாததால், இதய நோய்க்கு ஆளாகின்றனர். ஆகவே இதனை போக்குவது அனைவருடைய கடமையாகும். அதற்கு காலை வேளைகளில் அவசரமாக சமைத்தாலும், சத்தான உணவை சமைப்பது மிகவும் முக்கியமாகும்.

கொழுப்பு கலந்த உணவு சுவையை கொடுக்குமே தவிர, அதில் ஆரோக்கியம் என்பது துளியும் இருக்காது. இதனால் பலவித நோய்களுக்கு ஆளாகி அவதி கொள்வதை தவிர்த்து, எண்ண செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து செய்தல் மிகவும் நல்லது. அதற்கு சத்துமிக்க உணவை சாலட், சூப் போன்ற வகையில் சமைத்து சாப்பிட வேண்டும். ஒவ்வொன்றையும் தயாரிக்கும் பக்குவத்தில் தயாரித்து உண்டால் மிகவும் நல்லது.

இதோ இங்கே நோயெதிர்ப்பு சக்தி, ஆரோக்கியம், நல்ல கொழுப்பு போன்ற நல்ல உணவுகளை காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவகேடா

அவகேடா

அவகேடாவில் MuFAs அமிலத்தின் சத்து மட்டும் தான் உள்ளது என்று நினைக்கின்றோம். ஆனால் அதில் பலவித மற்ற வைட்டமின்களும், இதயத்திற்கு நன்மை சேர்க்கும் சத்துக்களும் உள்ளன. மேலும் இதில் கரையக்கூடிய நார்சத்து, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

எப்படி சாப்பிடுவது?

இதனை சாலட், சல்சாஸ் போன்ற விதங்களில் உணவில் சேர்த்து கொள்ளலாம். குறிப்பாக அப்போது இதனுடன் சீஸ் அல்லது மாயோனைஸ் போன்றவற்றை சேர்க்க வேண்டாம்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

உயிர் கொல்லி நோய்கள் பலவற்றிலிருந்து ப்ராக்கோலி நம்மை காக்கும் என அறிவியல் மேதைகள் கூறுகின்றனர். அதிலும் இந்த பச்சை நிறக் காய்கறி புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து காக்கும்.

இதை எப்படி சாப்பிடுவது?

இதன் இலைகளை வேக வைத்து வதக்கிய உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.

முட்டை

முட்டை

முட்டை, கேடு என்று யார் கூறியது? முட்டையில் அரிய சத்துக்கள் உள்ளன. இதன் மஞ்சள் கருவில் இதயத்தை பாதிக்கும் கொழுப்பு தன்மை இருப்பதால், வாரத்தில் மூன்று முட்டைக்கு மேல் எடுத்து கொள்ள வேண்டாம். ஆனால் வெள்ளை கருவை தினமும் எடுத்து கொள்ளலாம். சொல்லப்போனால் உணவுகளிலேயே மிகவும் நல்ல ஆகாரம் முட்டை.

இதை எப்படி சாப்பிடுவது?

முட்டையை பொரித்தோ, ஆம்லெட் செய்தோ சாப்பிடுங்கள். அதுவும் ஒரு மஞ்சள் கருவுடன், இரண்டு வெள்ளை கருவை சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.

பால்

பால்

கொழுப்பு இல்லாத ஒரு கப் பாலை தினமும் எடுத்து கொண்டால் மிகவும் நல்லது. இதில் உள்ள கால்சியம், எலும்புகளுக்கு மட்டும் சத்து கொடுக்காமல், கொழுப்பை நீக்கவும் உதவுகின்றது.

இதை எப்படி சாப்பிடுவது?

ஓட்ஸ் செய்யும் போது, கொழுப்பு நீக்கப்பட்ட பாலை சேர்த்து உண்ண வேண்டும். இரவு தூங்க செல்லும் முன், மிதமான சூட்டுடன் இருக்கும் பாலை சிறிது சாக்லெட் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

பருப்பு

பருப்பு

பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. இவை ஆரோக்கியத்துக்கு மட்டும் இல்லாமல் கூந்தலுக்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் பல சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், உடலுக்கு பலம் சேர்க்க முடியும். மேலும் இவற்றில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஆரோக்கியமான எண்ணெய் உள்ளது.

இதை எப்படி சாப்பிடுவது?

பாதாம், முந்திரி போன்ற பருப்பை சிறிதாக நறுக்கி, காலை உணவுடன் சேர்த்து உண்டால் ஆரோக்கியம் பெற முடியும். இடைப்பட்ட நேரத்திலும், இதை ஸ்நாக்காக உண்ணலாம்.

சால்மன்

சால்மன்

மீன் உணவையையும், எண்ணெயையும் எடுத்து கொண்டால், ஆரோக்கியமான உடல், கூந்தல் மற்றும் சருமம் போன்றவற்றை அடைய முடியும் என்று தோல் நிபுணர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆம், கடல் உணவான சால்மனில் வைட்டமின் டி, ஒமேகா- 3 ஃபேட்டி ஆசிட் போன்ற சத்து அதிகம் இருப்பதால், இதை அதிக அளவில் உணவில் சேர்த்தால் மிகவும் நல்லது.

இதை எப்படி சாப்பிடுவது?

சால்மனை சுத்தம் செய்து, அதில் உப்பு, எலுமிச்சை சாறு, சிறிது நறுக்கிய பூண்டு, மிளகு தூள் போட்டு சிறிது நேரம் கழித்து சமைத்து, அதனை வேக வைத்த காயுடன் சேர்த்து உண்ண வேண்டும்.

டோஃபு

டோஃபு

கொழுப்பு மிகுந்த உணவுக்கு பதிலாக டோஃபுவை எடுத்து கொண்டால், உடலுக்கு மிகவும் நல்லது. சோயா உணவில் இதயத்திற்கு பலம் சேர்க்கும் நல்ல கொழுப்பு உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்தும், பல முக்கியமான வைட்டமின்களும் உள்ளன. அதிலும் இது மார்பக புற்றுநோயை குணப்படுத்தும்.

இதை எப்படி சாப்பிடுவது?

சாலட்டுடன் இதை சேர்த்து சாப்பிடலாம். சோயா பீன்ஸ், கொண்டைக்கடலை, ராஜ்மா போன்றவற்றை சமைப்பது போன்றும் சமைத்து சாப்பிடலாம்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸை அன்றாட உணவில் சேர்த்து கொண்டால், பலன் அடைவது நிச்சயம். ஏனெனில் இதில் இருக்கும் நார்ச்சத்து இதய நோயை போக்குவதுடன் கெட்ட கொழுப்பை நீக்கும். மேலும் இரண்டாம் ரக சர்க்கரை நோயை எதிர்க்கும் ஓட்ஸை தினமும் உண்டால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் கிடைக்கும்.

இதை எப்படி சாப்பிடுவது?

ஓட்ஸை பால் அல்லது தயிருடன் சேர்த்து உண்ணலாம். சால்மனை பொரிக்கும் முன்பு, சிறிது நேரம் ஓட்ஸில் ஊர வைத்து பொரிக்கலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் கெட்ட கொழுப்பை நீக்கி, நல்ல கொழுப்பை கொடுக்கும் குணம் கொண்டது. இதய நோய், புற்றுநோய் போன்றவற்றை எதிர்க்கும் வல்லமை கொண்ட ஆலிவ் எண்ணெயில் MUFA உள்ளது.

இதை எப்படி சாப்பிடுவது?

பொரித்த மற்றும் சாலட்களில் ஆலிவ் எண்ணெயை சேர்த்து உண்டால், ஆரோக்கிய வாழ்வை பெற முடியும்.

தயிர்

தயிர்

உலகத்தில் உள்ள எல்லா இடங்களிலும் தயிரை பிராதான உணவாக எடுத்து கொள்வதை பார்த்திருப்போம். அதிலும் கொழுப்பு குறைவாக இருக்கும் தயிரை உணவில் சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் பாக்டீரியா மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது.

இதை எப்படி சாப்பிடுவது?

தயிருடன் சுவைமிக்க பழங்களால் செய்யப்படும் ஸ்மூத்தி செய்து உண்ணலாம். அதிலும் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை தயிருடன் சேர்த்து உண்டால் நல்லது. அதுவும் தயிரும் மாம்பழமும் சுவையோ சுவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 superfoods for a healthy life

Here is a list of the superfoods that you need to include in your daily meals. These foods packed with nutrients and are considered great not only at fending off serious diseases but are also known to fortify your immune system and take care of your skin and hair.
Desktop Bottom Promotion