For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூக்கமின்மையை ஏற்படுத்தும் 10 உணவுகள்!!!

By Maha
|

இன்றைய காலத்தில் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக சாக்லெட், இனிப்புகள் மற்றும் ஐஸ் க்ரீம் போன்றவற்றை சாப்பிட்டால், மனம் சந்தோஷம் அடைகிறதே தவிர, சரியான தூக்கம் மட்டும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? ஏனெனில் அவற்றில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், அவை தூக்கமின்மையை ஏற்படுத்தும். எனவே தான் இரவில் தூங்கச் செல்லும் முன், இந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று கூறுகின்றனர்.

மேலும் தூக்கமின்மை அதிக வேலைப் பளு மற்றும் குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படும் மனக்கஷ்டம் காரணமாகவும் தடைபடும். எனவே என்னதான் கஷ்டம் இருந்தாலும், உடலைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை தான். எனவே அதனை உணர்ந்து, பிரச்சனையைக் கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தது 8 மணிநேர தூக்கம் மிகவும் இன்றியமையாதது. இல்லையெனில் மறுநாள் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாமல், ஒருவித வருத்தத்துடனேயே மனம் மற்றும் உடல் இருக்கும்.

ஆகவே தூக்கமின்மை எதற்கு வருகின்றது என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு, அதனை சரிசெய்ய முயல வேண்டும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகளால் கூட தூக்கமின்மை ஏற்படும். அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை தவிர்த்து வந்தால், சரியான தூக்கத்தைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர்

தண்ணீர்

அதிகமான தண்ணீர் குடிப்பது நல்லது தான். ஆனால் அது காலை மற்றும் மதிய வேளையில் தான். அதுவே மாலை மற்றும் இரவு வந்தால், அதன் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி டாய்லெட் செல்ல வேண்டி வரும். பின் எப்படி தூக்கம் வரும், சிறுநீர் மட்டும் தான் அடிக்கடி வரும்.

காஃப்பைன் உணவுகள்

காஃப்பைன் உணவுகள்

ஒவ்வொருவரும் தினமும் ஏதாவது ஒரு வடிவில் காஃப்பைன் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வோம். அதிலும் டீ, காப்பி, சாக்லேட் மற்றும் எனர்ஜி பானங்கள் போன்றவற்றை நிச்சயம் சேர்ப்போம். இத்தகைய உணவுப் பொருட்களில் தான் காஃப்பைன் அதிகம் உள்ளது.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹால் குடித்தால், உடலில் வறட்சி ஏற்பட்டு, தூக்கத்தை ஏற்படுத்தும் செரோட்டின் அளவு குறையும். அதனால் சரியான தூக்கம் இல்லாமல், அடிக்கடி நடு இரவில் எழுவது போன்றவை ஏற்படும்.

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளான மாட்டிறைச்சியை, இரவில் படுக்கும் போது சாப்பிட்டால், அவை செரிமானம் ஆவது கடினமாகிவிடும். அதனால், செரிமான செயல்பாடுகளால், செரோட்டின் உற்பத்தியானது தடைபட்டு, தூக்கம் தடைபடும்.

வாயுவை ஏற்படுத்தும் உணவுகள்

வாயுவை ஏற்படுத்தும் உணவுகள்

வாயு மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிட்டு தூங்கினால், வயிறு உப்புசத்துடன் இருப்பதோடு, நல்ல தூக்கம் வருவது நின்றுவிடும். எனவே தூக்கம் தூக்கம் நன்கு கரவேண்டுமெனில் கார உணவுகள் மற்றும் வாயுவை ஏற்படுத்தும் உணவுகளான பட்டாணி, பீன்ஸ் மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இனிப்பு அதிகம் உள்ள உணவுகள்

இனிப்பு அதிகம் உள்ள உணவுகள்

இனிப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், உடலில் எனர்ஜி அதிகரித்து, தூக்கமின்மை தடைபடும். எனவே இனிப்புள்ள உணவுகளான கேக், சாக்லெட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த உணவுகள், இரவில் தூக்கத்தில் நடுக்கும் பழக்கத்தையும் உண்டாக்கிவிடும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

கொழுப்புகள் அதிகம் உள்ள பால் பொருட்களான தயிர், சீஸ், பால் மற்றும் வெண்ணெய் போன்றவை செரிமானமடைய தாமதமாகும். இவை தாமதமாவதால், சில சமயங்களில் நெஞ்செரிச்சலும் ஏற்படும்.

ஃபாஸ்ட் புட்

ஃபாஸ்ட் புட்

இந்த ஃபாஸ்ட் புட் உணவுகளால் தூக்கமின்மை வரும் என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இத்தகைய உணவுகளில் கொழுப்புகள் அதிகம் இருப்பதோடு, காரமும் அதிகம் இருக்கும். எனவே இத்தகயை உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, எப்போதும் சாப்பிட்டாமல் இருப்பதே நல்லது.

சிகரெட்

சிகரெட்

புகையிலை மற்றும் நிக்கோட்டின் பொருட்கள் மனநிலையை தற்காலிகமாக ரிலாக்ஸ் செய்ய வைக்குமே தவிர, தூக்கத்தை கெடுத்து, உடலுக்கு மிகுந்த கெடுதலை விளைவிக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் கொழுப்புகள் அதிகம் இருக்கும். எனவே இவற்றை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உடல் எடை அதிகம் உள்ளவர்கள், இத்தகைய உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது. அதுமட்டுமல்லாமல், இந்த உணவுகள் நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Foods That Triggers Insomnia | தூக்கமின்மையை ஏற்படுத்தும் 10 உணவுகள்!!!

Here are some foods that is said to be the major cause to trigger insomnia. Find out what are you allergic to and avoid it so that you will have a good night sleep and not end up being a victim of insomnia.
Story first published: Monday, February 4, 2013, 11:15 [IST]
Desktop Bottom Promotion