For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள்

By Mayura Akilan
|

Apricot
பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய ஆப்ரிகாட் பழங்கள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிற பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது.

தோல்நோய்களை நீக்கும்

இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள விட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

நரம்புகளை வலுப்படுத்தும்

பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி

மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய், சிலவகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சத்துக்கள் அடங்கிய பழம் இது. ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசிக்கவோ செய்யலாம். பின்னர் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும் தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கண்பார்வை தெளிவாகும்

வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப் படுத்துகிறது. தினமும் 1 அல்லது 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும் கட்டுப்படுத்தப்படும். மலைவாழைப்பழம்-1, ஆப்ரிகாட்-4 ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தயிர்-அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, இரவில் படுக்கும்பொழுது சாப்பிட்டுவர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.

English summary

Health benefits of Apricots | அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள்

Cool, delicious and golden-orange colored apricot fruits are must during summer months to beat the heat. Botanically, they belonged to the family of Rosaceae of Genus, Prunus and scientifically named as Prunus armeniaca. Apricots are excellent sources of vitamin-A and carotenes. Both of these compounds are known to have antioxidant properties and are essential for vision. Vitamin-A is also required for maintaining healthy mucus membranes and skin.
Story first published: Wednesday, December 28, 2011, 16:51 [IST]
Desktop Bottom Promotion