For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!

இங்கு நீங்கள் தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

உடல் ஆரோக்கியமாகவும், திடமாகவும் இருக்க வேண்டுமானால், அன்றாடம் போதிய அளவில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். உடற்பயிற்சியை தினமும் செய்வதன் மூலம், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதிலும் சாதாரண உடற்பயிற்சியை விட கடுமையான உடற்பயிற்சியை செய்வது மிகவும் நல்லது.

அதாவது வாரத்திற்கு ஏழு நாட்களும் 60 நிமிடம் சாதாரண உடற்பயிற்சியை செய்வதை விட, வாரத்திற்கு மூன்று நாட்கள் கடுமையான உடற்பயிற்சியை 20 நிமிடம் செய்வது எவ்வளவோ சிறந்தது.

சரி, இப்போது நீங்கள் தினமும் போதிய அளவில் தான் உடற்பயிற்சியை செய்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசி

பசி

உடற்பயிற்சி செய்து முடித்த பின், எதைக் கொடுத்தாலும் மிக விரைவில் சாப்பிடுகிறீர்களா? அப்படியெனில் நீங்கள் சரியான அளவில் உடற்பயிற்சி செய்துள்ளீர்கள் என்று அர்த்தம். அதிலும் 20-25 நிமிடத்திற்குள் சாப்பிட்டு முடித்தால், உடல் உணவை வேகமாக ஆற்றலா மாற்றி பயன்படுத்துகிறது என்று அர்த்தம். மேலும் இதனால் தசைகளுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைத்து, விரைவில் புதுப்பிக்கப்படவும் செய்யும்.

தூக்கம்

தூக்கம்

படுக்கையில் விழுந்ததும், தூங்கிவிடுகிறீர்களா? மற்றும் மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சியை செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

தசைகள்

தசைகள்

தசைகள் வீக்கமடைகிறதா? கடுமையான எடையைத் தூக்கி உடற்பயிற்சியை செய்யும் போது, அதிகளவு இரத்தம் அழுத்தப்பட்டு, தசைகளுக்கு ஊட்டச்சத்துக்களும், ஆக்ஸிஜனும் கிடைத்து, தசைகள் வளர்ச்சி பெறுகின்றன என்று அர்த்தம்.

நல்ல உணர்வு

நல்ல உணர்வு

எப்போதும் மனம் ரிலாக்ஸாக, எவ்வித அழுத்தமுமின்றி உள்ளதா? அப்படியெனில் நீங்கள் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சியை செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

கடைசி முறை

கடைசி முறை

உடற்பயிற்சி செய்யும் போது, ஒவ்வொரு உடற்பயிற்சியையும் முடிக்கும் தருணம் மிகவும் கடினமாக உள்ளதா? அப்படியெனில் நீங்கள் சரியாக உடற்பயிற்சியை செய்து வருகிறீர்கள் என்று அர்த்தம்.

தசை காயங்கள்

தசை காயங்கள்

கடுமையான உடற்பயிற்சியை செய்து, 1 நாளைக்கு மேல் தசைகளில் கடுமையான வலியை உணர்ந்தால், அதுவும் சரியாக உடற்பயிற்சியை செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs You Had A Good Workout

How to know if you had a good workout? Here are some signs that indicate that you have really done well...
Desktop Bottom Promotion