For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த உணவுகளை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் எனத் தெரியுமா?

இங்கு எந்த உணவுகளை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

இடுப்பளவைக் குறைக்க வேண்டுமானால், சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்ற வேண்டியது அவசியம். அதிலும் எடையைக் குறைக்கும் டயட் என்று வரும் போது ஏராளமான டயட்டுகள் உள்ளன. ஆனால் ஒருசில உணவுகளை குறிப்பிட்ட சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால், இடுப்பளவைக் குறைக்கலாம்.

Food Combinations That Help To Lose Weight In A Jiffy!

எப்படியெனில் இந்த உணவுக் கலவை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும். இதன் காரணமாக தேவையில்லாத கெட்ட கொழுப்புக்களும் வேகமாக கரையும். மேலும் ஆய்வுகளும் இதை நிரூபித்துள்ளன. இங்கு எந்த உணவை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை வேகமாக குறையும் என கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோளம் மற்றும் பீன்ஸ்

சோளம் மற்றும் பீன்ஸ்

சமீபத்திய ஆய்வு ஒன்றில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எடையைக் குறைக்க உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும் சோளம் மற்றும் பீன்ஸை ஒன்றாக சாப்பிடும் போது, அது உடல் மெலிவதை மேம்படுத்தும். ஆகவே அடுத்த முறை சோளத்தை வேக வைத்து சாப்பிடும் போது, அத்துடன் பீன்ஸையும் வேக வைத்து ஒன்றாக கலந்து சாப்பிடுங்கள்.

காபி மற்றும் பட்டை

காபி மற்றும் பட்டை

பட்டை கலோரி இல்லாத உணவுப் பொருள். அத்தகைய பட்டையைப் பொடியை காலையில் காபி குடிக்கும் போது சிறிது சேர்த்து கலந்து குடித்தால், கொழுப்புக்களின் தேக்கம் குறைந்து, தொப்பையும் குறையும். எனவே காபி குடிப்பதாக இருந்தால், சிறிது பட்டைத்தூளை சேர்த்து கலந்து குடியுங்கள்.

மிளகாய் மற்றும் சிக்கன்

மிளகாய் மற்றும் சிக்கன்

உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க மிளகாய் பெரிதும் உதவியாக இருக்கும். அத்தகைய மிளகாயை சிக்கன் சமைக்கும் போது சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும்.

உருளைக்கிழங்கு மற்றும் மிளகு

உருளைக்கிழங்கு மற்றும் மிளகு

பொதுவாக குண்டாக நினைப்பவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாகலாம் என்ற கருத்து உள்ளது. ஆனால் அத்தகைய உருளைக்கிழங்குடன் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலில் உள்ள கொழுப்புக்கள் குறையும்.

பூண்டு மற்றும் மீன்

பூண்டு மற்றும் மீன்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கும் மற்றும் உட்காயங்களைச் சரிசெய்யும். அத்தகைய மீனை பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்பு செல்களைக் கரைக்கும்.

டார்க் சாக்லேட் மற்றும் ஆப்பிள்

டார்க் சாக்லேட் மற்றும் ஆப்பிள்

ஆம், எடையைக் குறைக்க டார்க் சாக்லேட் உதவும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். அது தான் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. அத்தகைய டார்க் சாக்லேட்டை ஆப்பிளுடன் சேர்த்து சாப்பிட்டால், இன்னும் வளமான அளவில் கொழுப்புக்கள் கரையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Food Combinations That Help To Lose Weight In A Jiffy!

Healthy combination of foods that helps in losing weight quickly. Corn and beans combination is just one among them.
Story first published: Thursday, January 19, 2017, 18:08 [IST]
Desktop Bottom Promotion