For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இந்த 6 உடற்பயிற்சிகளை செய்தால் தொப்பை மாயமாய் மறையும் எனத் தெரியுமா?

இங்கு தொப்பையை மாயமாய் மறையச் செய்யும் சில உடற்பயிற்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

அசிங்கமாக தொங்கும் தொப்பையைக் குறைக்க பெரிதும் பாடுபடுகிறீர்களா? இதற்காக கடுமையான டயட்டையெல்லாம் பின்பற்றுகிறீர்களா? கவலையை விடுங்கள். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சியை செய்து வந்தாலே தொப்பையை வேகமாக குறைக்கலாம்.

Exercises That Banish Belly Fat

அதிலும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் சில உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், தொப்பை காணாமல் போய்விடும். உங்களுக்கு தொப்பையைக் குறைக்க எந்த மாதிரியான உடற்பயிற்சியை செய்வது என்று தெரியவில்லையா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

ஏனெனில் இங்கு தொப்பையை மாயமாய் மறையச் செய்யும் சில உடற்பயிற்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை அன்றாடம் செய்தால் வேகமாக தொப்பையைக் குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புஷ்-அப்

புஷ்-அப்

தினமும் காலையில் எழுந்ததும் புஷ்-அப் பயிற்சியை செய்வதன் மூலமும் தொப்பையைக் குறைக்கலாம். அதிலும் ஒவ்வொரு நாளும் புஷ்-அப் பயிற்சியின் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும்.

இடைவெளியில்லா தீவிர உடற்பயிற்சி (High-intensity interval training)

இடைவெளியில்லா தீவிர உடற்பயிற்சி (High-intensity interval training)

இந்த பயிற்சியை ஒருவர் தினமும் செய்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் ஊக்குவிக்கப்பட்டு, கலோரிகள் மற்றும் கொழுப்புச் செல்கள் வேகமாக கரையும். அதற்கு இந்த பயிற்சியை 20 நிமிடம் பின்பற்ற வேண்டும். அதுவும் 5 நிமிடம் ஜாக்கிங் செய்தால், 45 நொடிகள் மிகவும் வேகமாக ஓட வேண்டும். இப்படி இடைவெளியின்றி இரண்டு பயிற்சிகளை தொடர்ந்து 20 நிமிடம் செய்ய வேண்டும்.

பூனை-ஒட்டகப் பயிற்சி

பூனை-ஒட்டகப் பயிற்சி

இந்த பயிற்சியை ஒருவர் தினமும் செய்து வருவதன் மூலம் தொப்பையை வேகமாக குறைக்கலாம். அதற்கு படத்தில் காட்டப்பட்டவாறு குழந்தைப் போன்ற நிலையில் இருந்து, வயிற்றுப் பகுதியை கீழ் நோக்கி தள்ளி, தலையை மேலே தூக்க வேண்டும். இந்நிலையில் 3-5 நொடிகள் இருக்க வேண்டும். பின் மெதுவாக வயிற்றுப் பகுதியை மேல் நோக்கி தள்ளி, தலையை கீழே குனிய வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நிமிடம் செய்ய வேண்டும்.

கால்களை தூக்கும் பயிற்சி

கால்களை தூக்கும் பயிற்சி

தரையில் படுத்துக் கொண்டு, கைகளை பக்கவாட்டில் உடலை ஒட்டியவாறு வைத்து, முதலில் ஒரு காலை மேலே நேராக தூக்க வேண்டும். பின் அந்த காலை இறக்கி, மற்றொரு காலை மேலே தூக்க வேண்டும். இப்படி 10 முறை செய்ய வேண்டும். பின் இரண்டு கால்களையும் இணைத்து ஒன்றாக தூக்க வேண்டும். இப்படி 10 முறை செய்ய வேண்டும்.

பை-சைக்கிள் க்ரஞ்ச்

பை-சைக்கிள் க்ரஞ்ச்

இந்த பை-சைக்கிள் பயிற்சி சிக்ஸ் பேக் தசைகளுக்கு நல்ல வடிவமைப்பைத் தரும். அதற்கு தரையில் படுத்துக் கொண்டு, படத்தில் காட்டியவாறு இரண்டு கைகளையும் தலைக்கு பின் வைத்து, வலது காலை மடக்கி மார்பு அருகே கொண்டு வரும் போது, இடது முழங்கையை முன்னோக்கி கொண்டு வர வேண்டும். இப்படி இடது காலை தூக்கும் போது, வலது முழங்கையை முன்னோக்கி கொண்டு வர வேண்டும். இப்படி தொடர்ந்து 15 முறை என 3 செட் செய்ய வேண்டும்.

ப்ளான்க் பயிற்சி

ப்ளான்க் பயிற்சி

தினமும் குப்புறப்படுத்து, படத்தில் காட்டியவாறு முழங்கையை தோள்பட்டைக்கு நேராக வைத்து, உடலை தாங்கி இருக்க வேண்டும். இப்படி ஒரு நிமிடம் இருக்க வேண்டும். இதேப் போன்று 3 முறை செய்து வந்தால், வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை வேகமாக குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Exercises That Banish Belly Fat

Here are some exercises that banish belly fat. Read on to know more...
Story first published: Monday, April 3, 2017, 11:11 [IST]
Desktop Bottom Promotion