ஆண்களே! பாடி பில்டர் போன்ற உடல் வேண்டுமா? அப்ப இந்த உணவுகளுக்கு 'குட்-பை' சொல்லுங்க...

இங்கு பாடி பில்டர் போன்று உடலைப் பெற நினைக்கும் ஆண்கள் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களுக்கு நல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக ஜிம் சென்று பாடி பில்டர் போன்று உடலைப் பெற பல உடற்பயிற்சிகளை செய்வார்கள். பாடி பில்டர் போன்ற உடல் வேண்டுமானால், உடற்பயிற்சியுடன் தசைகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் அவசியம்.

Body Builders, “Give Up On These 7 Foods”

அதே சமயம் குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர்க்கவும் வேண்டும். தற்போது எங்கும் ஃபாஸ்ட் புட் உணவுகள் கிடைப்பதால், பாடி பில்டர் போன்ற உடலைப் பெற வேண்டுமானால், வாயைக் கட்டுப்படுத்த வேண்டும். மொத்தத்தில் தசைகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு கடுமையான டயட்டை மேற்கொள்ள வேண்டும்.

இங்கு பாடி பில்டர் போன்று உடலைப் பெற நினைக்கும் ஆண்கள் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோதுமை

கோதுமை

கோதுமையில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இதனை உட்கொண்டால், உடல் மெலியத் தான் செய்யும். ஆகவே பாடி பில்டர் போன்று கட்டுமஸ்தான உடலைப் பெற நினைத்தால், கோதுமையை உணவில் சேர்க்கக்கூடாது.

காய்கறி எண்ணெய்

காய்கறி எண்ணெய்

காய்கறி எண்ணெய்கள் அதிகம் பதப்படுத்தப்படுவதோடு, அதில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் ஏராளமான அளவில் உள்ளது. இதனை பாடி பில்டர் போன்ற உடலைப் பெற நினைக்கும் ஆண்கள் உணவில் சேர்த்தால், உடலினுள் உட்காயங்களை ஏற்படுத்துவதோடு, க்ளைசீமிக் இன்டெக்ஸ் அளவிலும் இடையூறை ஏற்படுத்தும்.

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்த்தாலே, உடல் எடை குறைய ஆரம்பிக்கும். குறிப்பாக பாடி பில்டர் போன்ற உடலைப் பெற நினைத்தால், சர்க்கரையைப் பற்றி நினைக்கவே கூடாது. ஏனெனில் இதில் ஃபுருக்டோஸ் ஏராளமான அளவில் உள்ளதால், உடல் ஆரோக்கியத்திற்கு மோசமாக தீங்கு விளைவிக்கும்.

பால்

பால்

பாடி பில்டர் உடலைப் பெற நினைக்கும் ஆண்கள், பாலை உணவில் அறவே சேர்க்கக்கூடாது. ஏனென்றால் 2% பாலில் 38% கலோரிகள் உள்ளது. கலோரிகளை அதிகம் எடுத்தால், உடல் பருமன் தான் அதிகரிக்கும்.

சோடா

சோடா

சோடாவை பாடி பில்டராக நினைப்பவர்கள் நினைக்கவே கூடாது. இதனை சிறிது குடித்தாலும், அது பாடி பில்டர் போன்று உடலைப் பெற நினைக்கும் ஆசைக்கு முழுக்கு போட்டுவிடும்.

கலோரி குறைவான ஸ்நாக்ஸ்

கலோரி குறைவான ஸ்நாக்ஸ்

கலோரி குறைவான ஸ்நாக்ஸ்களில் சர்க்கரை ஆல்கஹால் அதிகம் இருக்கும். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே இந்த மாதிரியான உணவுப் பொருட்களையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கலோரிகள், ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் ஏராளமான அளவில் இருக்கும். ஆகவே பாடி பில்டர் போன்று உடலைப் பெற நினைக்கும் ஆண்கள் இந்த வகையான உணவுகளையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Body Builders, “Give Up On These 7 Foods”

Avoid these foods if you are a body builder. Read this article to know about the foods to avoid when bodybuilding.
Story first published: Saturday, March 4, 2017, 10:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter