For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் குண்டானவர்களுக்கு திரும்ப திரும்ப சாப்பிட வேண்டுமென தோன்றுகிறது?

|

பசி இருக்கிறதோ இல்லையோ, உடல் பருமனாக இருப்பவர்கள் சாப்பிட்டுக் கொண்டேயிருப்பார்கள். இவர்களுக்கு வேகமாக ஜீரணமாகிறதா? அல்லது அதிக பசிதான்

காரணமா என்ற கோணத்தில் ஆய்வினை செய்யும்போது, மூளியிலுள்ள ஒரு தூண்டுதல்தான் இதற்கு காரணம் என்று டெக்ஸாசிலுள்ள சௌத்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்து கூறியுள்ளது.

Why obese women tend to eat more

உடல் பருமன் பற்றிய ஆய்வை இந்த பல்கலைக் கழகம் மேற்கொண்டபோது மூளையிலுள்ள மிக முக்கிய பகுதிகளிலுள்ள நடுமூளையில் தூண்டப்படுவதுதான் காரணம்.

பொதுவாக சாப்பிட்டவுடன் மூளையில் கார்டெக்ஸ் பகுதியில் ஒரு மாற்றம் நடக்கும். இதனால் மூளை மேற்கொண்டு சாப்பிடாமல் நிறுத்திக் கொள்ளும். இதனால்தான்

வயிறு நிறைந்தவுடன் எவ்வளவுதான் ருசியாக இருந்தாலும், நமக்கு சாப்பிட தோன்றாது. உணவைக் கண்டத்தும் மூளையின் தூண்டுதல் மிகவும் குறைந்துவிடுகிறது.

ஆனால் இந்த மாற்றம் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நடப்பதில்லை. இதனால் சாப்பிட்ட பின்பும், ஏதாவது கொறித்துக் கொண்டேயிருப்பார்கள்.இஅவர்களுக்கு

மூளையின் தூண்டுதல் அதிகரிக்கிறது. உணவு சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் உணவைக் கண்டதும் அவர்களுக்கு ஒரு வகையான ஈர்ப்பும் வருவதற்கு இதுதான் காரணம்

என்று சௌத்வெஸ்டர்ன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நான்ஸி கூறுகிறார்.

முகவும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருக்கிற 15 பெண்களும், ஒல்லியாக இருக்கும் 15 பெண்களும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களின் மூளையை எம். ஆர்.

ஐ ஸ்கேன் மூலம் ஆராயப்பட்டது. இது மூளையை ஆராய உதவும் கருவி.

முதலில் 9 மணி நேரத்திற்கு எதுவும் தரப்படாமல் வெறும் வயிற்றில் வைத்திருக்கப்பட்டனர்.அப்போது அவர்களின் மூளையை எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்தபோது,

பசியுடம் மூளை இருப்பது கொடிட்டது. சாப்பிட்டதும் அவர்களிடம் அவர்களுக்கு உண்டான திருப்தியை பற்றியும், பசியின் அளவைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது.

பின்னர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்தபோது, பசியை ஏற்படுத்தும் தூண்டுதல் ஒல்லியான பெண்களுக்கு ண்டைபெறவில்லை. அதே சமயம் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு

இந்த தூண்டுதல் நடைபெற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

English summary

Why obese women tend to eat more

Why obese women tend to eat more,
Desktop Bottom Promotion