உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள மாடல்கள் பின்பற்றும் விக்டோரியா சீக்ரெட்!

Subscribe to Boldsky

முன்பெல்லாம் வட இந்திய பெண்கள் மட்டும் தான் மாடல் அழகிகள் போன்று தங்கள் உடலழகை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பி வந்தார்கள். ஆனால், இப்போது குமரி கடற்கரை வரை அனைவருக்கும் இந்த ஆசை வந்துவிட்டது.

தமிழ் நடிகர் நடிகைகளின் ஃபிட்னஸ் ரகசியம்!!!

ஆனால், மாடல் அழகிகளுக்கே விக்டோரியா சீக்ரெட் மாடல்கள் போன்று திகழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதென்ன விக்டோரியா சீக்ரெட் மாடல் என்று கேட்கிறீர்களா? நமது ஊர் கோவில் சிலை போல தான் ஏறத்தாழ.

பாடி பில்டர் போன்ற உடற்கட்டு பெற எப்படி உணவுப் பழக்கம் பின்பற்ற வேண்டும்!!!

ஆங்காங்கே நீங்கள் பெண்ணென்றால் 36-24-36 என்ற உடலமைப்பு இருக்க வேண்டும் என்று கேட்டிருப்பீர்கள். அதற்கான டயட் தான் இந்த விக்டோரியா சீக்ரெட் ப்ளான். இனி விக்டோரியா மாடல் அழகிகள் தங்கள் உணவு முறையை எப்படி பின்பற்றுகிறார்கள் என பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உணவு பழக்கங்கள்

பெரும்பாலான மாடல் அழகிகள் ஜி.ஐ எனப்படும் "Glycemic Index" டயட்டை, அதாவது பதப்படுத்தப்படாத இயற்கை உணவுகளை தான் 95% உட்கொள்கின்றனர்.

காலை உணவு

முட்டையின் வெள்ளை கரு, ஓட்ஸ், வேகவைத்த காய்கறிகள், பழங்கள், இயற்கை தயிர் போன்ற உணவுகளை தான் காலை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். பெரும்பாலும் கார்பஸ் உணவை தவிர்த்துவிடுகிறார்கள். இவற்றில் கொழுப்புச்சத்து குறைவு, கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தாது.

மதிய உணவு

தண்ணீர், கீரை வகைகள் சேர்த்து ஸ்மூத்தீஸ் (Smoothies), வெஜ் சாலட், அதிகமாக எண்ணெய் சேர்த்து சமைக்கப்படாத சிக்கன், மீன், இளைத்த இறைச்சி போன்றவற்றை உட்கொள்கிறார்கள்.

இரவு உணவு

சர்க்கரைவள்ளி கிழங்கு, வேகவைத்த காய்கறிகள்(காலிஃபிளவர், சீமை சுரைக்காய், ப்ராக்கோலி அஸ்பாரகஸ்) சிக்கன், மீன் போன்ற உணவுகளை உட்கொள்கிறார்கள்.

ஸ்நாக்ஸ்

பெர்ரி, செர்ரிகளில், பேரிக்காய், ஆப்பிள், கிவி போன்ற குறைந்த கிளைசெமிக் பழங்களை இடைவேளை உணவாக உட்கொள்கிறார்கள். மேலும் நட்ஸ் உணவான பாதாம், முந்திரி, வேர்கடலை போன்றவற்றையும் சமப்பங்கு சேர்த்துக் கொள்கின்றனர்.

உடற்பயிற்சிக்கு பிறகு

உடற்பயிற்சி செய்த பிறகு பச்சை இலை உணவுகளான கீரை ஜூஸ் பருக வேண்டும் என்பது விக்டோரியா சீக்ரெட் மாடல் அழகிகளுக்கு நிபந்தனையாக இருக்கிறது.

சர்கரைக்கு "நோ"

விக்டோரியா சீக்ரெட் மாடலாக இருக்க வேண்டும் எனில், சர்கரைக்கு "குட் பை" சொல்லிவிட வேண்டும். மேலும், உப்பை கூட மிகவும் அளவாக தான் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் விக்டோரியா மாடல்கள்.

ஃபாஸ்ட் புட்டை கண்டால் ஓடுங்கள்

ஆவியில் அல்லது தண்ணீரில் வேகவைத்த உணவுகள் தான் விக்டோரியாசீக்ரெட் மாடல்களின் தேர்வாக இருக்கின்றன. ஃபாஸ்ட் புட்டை கண்டால் இவர்கள் தெறித்து ஓடி விடுவார்கள்.

ஃபிட் அண்ட் ஷேப்

தங்கள் உடல் 36 - 24 - 36 என்ற அளவில் ஃபிட்டாகவும், நல்ல தோற்றமளிக்கும் வகையிலும் இருக்க இந்த விக்டோரியா சீக்ரெட் டயட்டை மாடல் அழகிகள் பின்பற்றுகின்றனர்.

விக்டோரியா சீக்ரெட் மாடல்

மாடல் உலகில் ஒரு அழகி விக்டோரியா சீக்ரெட் மாடல் போல இருக்க வேண்டும் எனில், 5''9 அங்குலம் உயரமும், இடுப்பு அளவு சரியாக 24 அங்குல சுற்றளவும் இருக்க வேண்டும் என மாடல் துறை நபர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Victoria's Secret Diet Tips

Do you wanna be fit and shape like Victoria models? Then take a look on Victoria's secret diet tips.
Story first published: Wednesday, February 3, 2016, 10:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter