100 வயது ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? அப்ப இந்த பண்டையக் கால டயட்டை ஃபாலோ பண்ணுங்க!

சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில், மத்திய தரைக்கடல் உணவுமுறை (Mediterranean Diet ) பழக்க வழக்கம் நீண்ட ஆயுள் தரவல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ இது பண்டையக் காலத்தில் பின்பற்ற பட்டு வந்த உணவு பழக்க முறை தான்.

அரிசி உணவுகள், சோடா பானங்கள், வெள்ளை சர்க்கரை, அதிகளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை நாம் உட்கொள்ள ஆரம்பித்த காலத்தில் தான் புதுப்புது உடல்நலக் கோளாறுகள் வெகுவாக பெருக ஆரம்பித்தது.

பரம்பரை வியாதிகள் என குறிப்பிடப்பட்ட நீரிழிவு கூட இன்று அனைவரையும் பாதிக்கும் வண்ணம் மாறிவிட்டது. இதற்கு காரணம் நமது உணவுமுறை மாற்றங்கள் தான். நூறு வயது எல்லாம் அதிகம், 60 கடினம் என்பதெல்லாம் இந்த காரணத்தால் தான்.

இதையும் படிங்க: பக்கவிளைவுகள் அற்ற இந்தியாவின் பண்டைய மருத்துவ முறைகள்!

இன்றிலிருந்து நமது உணவுமுறையில் மாற்றம் கொண்டு வந்தால் கூட நாம் இழந்த ஆரோக்கியத்தை, ஆயுளை மீண்டும் பெற முடியும்...

 • தாவர உணவுகள்!

  தாவர உணவுகள்!

  தாவர உணவுகள்!

  உயர்ரக சத்துக்கள் கொண்டுள்ள, தாவர வகை முழு தானிய உணவுகளை அன்றாட உணவில் ஒரு பங்கு சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.

 • காய்கறிகள்!

  காய்கறிகள்!

  காய்கறிகள்!

  உங்கள் உணவில் அரிசி, கோதுமை உணவுகளைவிட, காய்கறி, பழங்களை அதிக பங்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

 • நார்ச்சத்து!

  நார்ச்சத்து!

  நார்ச்சத்து!

  செரிமான கோளாறுகள் உண்டாகாமல் இருந்தாலே உடல் நலம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். எனவே, செரிமானத்தை ஊக்குவிக்கும் நார்ச்சத்து மிகுதியாக உள்ள பட்டாணி, பயிறு உணவுகளை அன்றாட உணவில் ஒரு பங்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

 • முட்டை, பால்!

  முட்டை, பால்!

  முட்டை, பால்!

  முட்டை மற்றும் தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்ற பால் உணவுகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

 • சிவப்பு இறைச்சி!

  சிவப்பு இறைச்சி!

  சிவப்பு இறைச்சி!

  சிவப்பு இறைச்சி உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். புரத சத்திற்கு இதற்கு மாறாக மீன் உணவுகளும், அவ்வப்போது கோழியும் சேர்த்துக் கொள்ளலாம். இறைச்சியை விட, உடல் பாக உணவுகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

 • சர்க்கரை!

  சர்க்கரை!

  சர்க்கரை!

  சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.

Read In English

There's powerful evidence that the ancient Mediterranean diet can extend your life
Please Wait while comments are loading...