குடல்களை சுத்தப்படுத்தி உடலை இளைக்க வைக்கும் ஆயுர்வேத மூலிகை இவைதான் !!

இயற்கையாகவே நமது குடல் மற்றும் கல்லீரல் உடலில் வெளிப்படும் நச்சுக்களை வெளியேற்றும் குணத்தை கொண்டது. ஆனால் இன்று வரும் புதிதுபுதிதான் உணவுகளால் அவை வெளியேற்றப்படாமல் உடலிலேயே தங்கும் அபாயம் உள்ளது.

Subscribe to Boldsky

குடல்களின் வழியாகத்தான் உணவுகள் செல்லும். சத்துக்கள் உறிஞ்சி ரத்தத்திற்கு அனுப்பிய பின்னும் அதிகப்படியான கொழுப்புகள், மினரல் மற்றும் நச்சுக்களை நமது கல்லீரல் வெளுயேற்றும்.

ஆனாலும் அதிகப்படியான கழிவுகள் இருக்கும்போது அவை வெளியேறாமல் தங்கிவிடும்.

These  Colon cleansers  help to reduce weight

நச்சுக்கள் வெளியேறாமல் இருக்கும்போதும் உடல் பருமன் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த சமயத்தில் குடல்களில் இருக்கும் நச்சுக்களை நாம் சாப்பிடும் உணவு மூலமாக வெளியேற்ற முடியும்.

அதற்கு சில ஆயுர்வேத மருத்துவ குணங்கள் நிரம்பிய பொருட்கள் உதவுகிறது. அவை எவை யென பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

எப்படி சுத்தப்படுத்தும் ?

பொதுவாக குடலை சுத்தப்படுத்தும் கிளென்ஸரில் பாலிஎதிலின் க்ளைகால், சோடியம் மற்றும் சல்ஃபேட் ஆகியவை கொண்டுள்ளது. குடலிலுள்ள நச்சுக்களை மிருதுவாக்கி வெளியேற்றுவதை இலகுவாக்கிறது.

உடல் எடையை எப்படி இளைக்கச் செய்யும் ?

குடலிலுள்ள நச்சுக்கள் ஜீரணத்தை தாமதப்படுத்தும். கொழுப்பு செல்கள் வெளியேறாமல் குடலிலேயே படியும்போது உடல் எடை கூடும்.

அப்போது குடலை சுத்தப்படுத்தினால் ஜீரண மண்டலமும் என்சைமும் துரிதமாய் வேலை செய்யும். இதனால் வளர்சிதை மாற்றம் தூண்டப்பட்டு கலோரிகளை எரிக்க முடியும்.

 

1 திரிபலா :

திரிபலா பல அட்டகாசமான பண்புகளை கொண்டது. உடல் எடையை குறைக்கச் செய்யும். தினமும் காலையில் 1 ஸ்பூன் திரிபலாவை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து பாருங்கள். ஒரு சில வாரங்களில் மாற்றங்கள் தெரியும்.

ஆவாரம் இலைகள் :

ஆவாரம் பூவைப் போலவே ஆவரம் இலைகளும் மருத்துவ குணங்கள் கொண்டவை. இவை குடல்களை சுத்தப்படுத்தும் மலச்சிக்களை குணப்படுத்தும்.

ஆவரம் இலை பொடி நாட்டு மருந்துகளில் கிடைக்கும் . இல்லையெனில் 5 இலைகளை காய வைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.

ஆவாரம் இலைகள் :

செய்முறை :

சிறிது நீரை நன்றாக கொதிக்க வைத்து அடுப்பை அணையுங்கள். பின் அதில் இந்த பொடித்த ஆவாரம் இலையை 1 ஸ்பூன் அளவு போட்டு மூடி வையுங்கள். 10 நிமிடம் கழித்து இந்த நீரை வடிகட்டி குடிக்கவும்.

 

நார்சத்து நிறைந்த உணவுகள் :


பழங்கள் - பப்பாளி, ஆப்பிள், வாழைப்பழம், பெர்ரி பழங்கள்,
காய்கறிகள் - புரொக்கோலி, கேரட், ஆப்ரிகாட்,
பிரட் _ முழு தானிய பிரட்
நட்ஸ் - வால் நட், பாதாம், பூசணி விதைகள்,
முழு தானியம் - பிரவுன் அரிசி, கருப்பு அரிசி, ஓட்ஸ்

இவற்றை தவறாது தினமும் உணவில் சேர்த்துப் பாருங்கள். உடல் எடை நிச்சயம் குறையும். என்றைக்காவது ஒரு நாள் டயடை பின்தொடர்வதால் எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

தொடர்ந்து உபயோகித்தால்தான் எதுவும் முறையாய் பலனளிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

These Colon cleansers help to reduce weight

These ayurvedic ingredients act as colon cleansers which help to reduce body weight.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter