For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திடீர்னு எல்லாம் மாறலயாம், விராட்-ன் டர்னிங் பாயின்ட் இரகசியம்!

அப்படி இருந்த விராட், இப்படி மாற யார் காரணம்? விராட் கூறும் ஃபிட்னஸ் ரகசியம்!

|

விராட் ஒரு ஆக்ரோஷமான வீரர். டெஸ்ட், ஒருநாள், டி - 20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நபர். இந்தியாவில் ஃபிட்டான கிரிக்கெட் வீரர் என்றால் முதல் ஆளாக ஞாபகதிற்கு வருபவர் விராட் தான்.

ஆனால், இந்திய அணியில் இடம் பிடித்த போது இருந்த விராட் இப்படி இல்லையே. சற்றே பூசியப்படியான உடல் வாகுடன் தான் இருந்தார். கொளுகொளுன்னு இருந்த விராட் சிக்ஸ் பேக் வைக்கும் அளவிற்கு ஃபிட்னசில் கவனம் செலுத்து எது காரணம்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டென்னிஸ் வீரர் போன்று!

டென்னிஸ் வீரர் போன்று!

உங்களிடம் திறமைகள் இருக்கலாம். ஆனால், நீங்கள் டென்னிஸ் வீரர் போன்று பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். எல்லா ஃபார்மேட் போட்டிகளிலும் டாப் இடத்தில் இருக்க வேண்டும் என்றால் ஃபிட்னஸ் என்பது அன்றாட பழக்கத்தில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.

நான் ஒரு சோம்பேறி!

நான் ஒரு சோம்பேறி!

நான் பயிற்சியில் ஈடுபடும் விதம் மோசமானது. நான் மோசமாக தான் சாப்பிடுவேன். ஒன்று அல்லது இரண்டு ட்ரிங்க் குடிப்பேன். இது ஒரு மோசமான மனப்போக்கு.

கண்ணாடி!

கண்ணாடி!

ஒரு சீசன் முடிந்து வீடு திரும்பிய நாள் அது. குளித்து விட்டு, கண்ணாடி முன் நின்றுக் கொண்டிருந்தேன். நான் இந்த லுக்கில் இருக்க கூடாது, இப்படி இருக்க கூடாது என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டும் , அதற்கு இந்த லுக் சரியானது அல்ல என எண்ணினேன்.

11 - 12 கிலோ!

11 - 12 கிலோ!

இப்போது இருக்கும் எடையை விட, 11 - 12 கிலோ தான் அதிகமாக இருந்ததாக விராட் கூறுகிறார். மறுதினம் இருந்தே ஜிம் செல்ல முடிவு செய்ததாகவும் விராட் மேலும், கூறி இருக்கிறார்.

பயிற்சியும், முயற்சியும்!

பயிற்சியும், முயற்சியும்!

தினமும் ஒன்றரை மணி நேரம் ஜிம், கடினமான உழைப்பு, குளிர் பானங்கள், ஐஸ்க்ரீம், மைதா உணவுகள், கோதுமை உணவுகள் போன்றவற்றை தவிர்த்துள்ளார்.

மிக கடினம்!

மிக கடினம்!

இது போன்ற டயட்டில் இருக்க முதல் இரண்டு மிகவும் சிரம பட்டதாகவும். சில நாட்களில் பெட்ஷீட்டை சாப்பிடும் அளவிற்கு கூட பசியுடன் இருந்ததாகவும் விராட் கூறியுள்ளார். சுவையான உணவுகளை நான் தொடவே இல்லை. ஆனால், ஆசையை கட்டுப்படுத்தினேன்.

முடிவுகள்!

முடிவுகள்!

ஆனால், இந்த கடினங்களுக்கு எல்லாம் நல்ல முடிவு கிடைத்தது. ஒரு நாள் இலங்கை டெஸ்ட் போட்டிக்கு எதிராக, பந்தை விரட்டி சென்று பிடித்த போது என் கால்களில் வலி இல்லை, வலிமை தான் இருந்தது. அப்போது தான் உணர்ந்தேன் நான் ஃபிட்டாக இருக்கிறன் என.

கடைசி ஒன்றரை வருடங்கள்!

கடைசி ஒன்றரை வருடங்கள்!

கடைசி ஒன்றரை வருடங்களாக நான் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதற்கு காரணம் என்பது ஃபிட்னஸ் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Incident That Changed Virat Kohli’s Attitude Towards Fitness

The Incident That Changed Virat Kohli’s Attitude Towards Fitness
Desktop Bottom Promotion