For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சியை செய்கிறீர்கள் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

By Maha
|

ஒருவர் நன்கு ஃபிட்டாக இருக்க உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. மேலும் எந்த ஒரு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட கட்டுரையைப் படித்தாலும், அதில் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆகவே பலரும் ஜிம்மில் சேர்ந்து தினமும் உடற்பயிற்சியை செய்து வருவார்கள்.

ஆனால் ஜிம்மில் சென்று உடற்பயிற்சியை மேற்கொள்ளும் முன், போதிய அளவில் நீரைப் பருக வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, ஆற்றல் கிடைக்கும். மேலும் உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். இதையெல்லாம் பின்பற்றி, தினமும் சரியான அளவு உடற்பயிற்சியை மேற்கொண்டால் தான் நல்ல பலனைப் பெற முடியும்.

நீங்கள் தினமும் போதிய அளவில் உடற்பயிற்சியை மேற்கொள்கிறீர்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்வீர்கள்? இங்கு அதற்கான சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் தெரிந்தால், நீங்கள் சரியான அளவில் உடற்பயிற்சியை மேற்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படுத்ததும் தூங்கிவிடுவது

படுத்ததும் தூங்கிவிடுவது

சிலருக்கு உடற்பயிற்சியை செய்த பின் சரியான தூக்கம் கிடைக்காது. இந்நிலை அவர்கள் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்கள் என்பதற்கான அறிகுறி. ஆனால் ஒருவர் படுத்ததும் தூங்கிவிட்டால், அவர் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சியை மேற்கொள்கிறார் என்று அர்த்தம். ஏனெனில் போதிய அளவில் உடற்பயிற்சியை செய்யும் போது நிம்மதியான தூக்கத்திற்கு காரணமான ஹார்மோன்கள் மற்றும் சைட்டோகீன்கள் சரியான அளவில் வெளியிடப்படுகின்றன.

வியர்வை வெளியேற்றம்

வியர்வை வெளியேற்றம்

உடற்பயிற்சியின் போது வியர்வை வெளியேற வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் சரியாக உடற்பயிற்சியை செய்வதில்லை என்று அர்த்தம். மேலும் உடற்பயிற்சிக்கு முன் நிறைய தண்ணீர் குடித்தால் தான், உடற்பயிற்சி செய்வதற்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, உடற்பயிற்சியை சரியாக செய்ய முடியும்.

அதிகமான ஆற்றல்

அதிகமான ஆற்றல்

முன்பு இருந்ததை விட, சமீப காலமாக உங்கள் உடலின் ஆற்றல் அதிகரித்துள்ளதா? அப்படியெனில் நீங்கள் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சியை செய்து வருகிறீர்கள் என்று அர்த்தம்.

அதிகமான பசி

அதிகமான பசி

நீங்கள் மிகவும் எடை குறைவானவராக இருந்து, உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் நன்கு பசி எடுக்கிறது என்றால் அது நல்ல அறிகுறியே. ஒருவேளை நீங்கள் எடையைக் குறைக்க நினைப்பவராயின், கலோரிகள் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, பசியின் போது நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எடை குறைவது

எடை குறைவது

நீங்கள் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, ஜிம்மில் சேர்ந்திருந்து, உங்கள் எடையில் மாற்றம் தெரிந்தால், அதுவும் நீங்கள் சரியாக உடற்பயிற்சியை செய்கிறீர்கள் என்று அர்த்தம். இந்நேரத்தில் எடையைக் குறைக்க மேற்கொண்ட டயட்டையும், செய்து வரும் உடற்பயிற்சியையும் தவறாமல் தினமும் பின்பற்றுங்கள்.

தசைகள் பெரிதாகியிருப்பது

தசைகள் பெரிதாகியிருப்பது

உடற்பயிற்சி செய்து முடித்த பின், அதிகப்படியான இரத்த அழுத்தத்தினால் ஊட்டச்சத்துக்களும், ஆக்ஸிஜன்களும் தசைகளுக்கு கிடைத்து சற்று பெரிதாக காணப்படும். இப்படி உங்கள் தசை உடற்பயிற்சிக்குப் பின் வீங்கி பெரிதாக காணப்பட்டால், நீங்கள் சரியாக உடற்பயிற்சியை மேற்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs You Had A Good Workout

Here are some of the signs you had a good workout. Why dont you take a look at some of these things you should not ignore for better health.
Desktop Bottom Promotion