For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐம்பதிலும் ஃபிட்டாக இருப்பதற்கு சல்மான்கான் பின்பற்றும் டயட் இதுதானாம்!

|

ஹீரோ என்றால் இப்படிப்பட்ட உடற்கட்டில் தான் இருக்க வேண்டும் என முதன் முதலில் பாலிவுட் சினிமாவில் சட்டையை கழற்றி காண்பித்தவர் சல்மான் கான். நிறைய இந்திய ஹீரோக்கள் ஊசி ஏற்றி சிக்ஸ் பேக் வைத்த போது, உண்மையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்தவரும் சல்மான் கான் தான்.

மிருகத்தனமாக உடலை ஏற்ற நடிகர் ஆர்யா மேற்கொண்ட டயட் இது தானாம்!

இவருக்கு ஐம்பது வயது ஆகிவிட்டது என்றால் யாராலும் நம்ப முடியாது. காதல் முறிவில் சங்கடமாக இருக்கும் கத்ரீன கைப் இப்போது மீண்டும் சல்மானின் தோள்களில் தான் சாய்ந்துள்ளார் என சில கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. அப்படி என்ன டயட் மற்றும் ஃபிட்னஸ் பின்பற்றி சல்மான் கான் இப்படி உடற்கட்டை மெயின்டெயின் செய்கிறார்?

அதைப்பற்றி தான் நாம் இனி காணவிருக்கிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 இரண்டு மணிநேரம்

இரண்டு மணிநேரம்

தினமும் இரண்டு மணிநேரம் உடற்பயிற்சி செய்வதை விடாமல் பின்பற்றி வருகிறார் சல்மான்கான். ஒருமணிநேரம் கார்டியோ பயிற்சியும். ஒருமணிநேரம் புஷ் அப்ஸ் அல்லது ஷிட் அப்ஸ் பயிற்சியும் மேற்கொள்கிறார். குறைந்தது ஆயிரம் புஷ் அப்ஸ் / 2000 ஷிட் அப்ஸ் எடுப்பாராம் சல்மான் கான்.

 பைசப்ஸ், ட்ரைசப்ஸ்

பைசப்ஸ், ட்ரைசப்ஸ்

பைசப்ஸ், ட்ரைசப்ஸ், கால்கள், தோள், முதுகு, போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி செய்கிறார் சல்மான் கான். மேலும், ஃபிட்னஸ் பயிற்சியாளர் கூறுவதை ஒருபோதும் மீறுவதில்லை சல்மான்கான்.

 சைக்கிளிங்

சைக்கிளிங்

மேலும் நேரம் கிடைக்கும் அல்லது தான் விரும்பும் போது, பாந்த்ரா - பன்வெல் சைக்கிளிங் செய்து செல்வாராம் சல்மான்கான். 50 கி.மீ தூரம் சைக்கிளிங் செய்வது உடல் தசைகளை மிக உறுதியாக்கும். சில நேரங்களில் தான் குடியிருக்கும் சாலைகளிலும் கூட சைக்கிளிங் செய்கிறார் சல்மான்கான்.

முன்மாதிரி

முன்மாதிரி

ஏறத்தாழ 25 வருடங்களாக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து பேணிக்காத்து வருகிறார். மேலும், பல இளம் நடிகர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார் சல்மான்கான்.

புரதம்

புரதம்

தினமும் இரண்டு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய நிறைய உடற்சக்தி தேவைப்படும். இதற்காக புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறார் சல்மான்கான். புரதச்சத்து தசைகளின் வலிமையை அதிகரிக்க உதவும்.

 சிக்கன், முட்டை

சிக்கன், முட்டை

சிக்கன், முட்டை, பிரியாணி என்றால் சல்மான் கானுக்கு உயிர். இந்த உணவுகளை அதிகமாக உண்கிறார் சால்மான். மேலும், ரிலாக்ஸாக இருக்க தினமும் கிரீன் டீ பருகுகிறார் சல்மான்கான்.

 துரித உணவுகள்

துரித உணவுகள்

திரித உணவுகள், சர்க்கரை உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிடுகிறார் சல்மான்கான். மேலும், உடல்நலத்தின் காரணத்திற்காக ஆரம்பத்தில் இருந்த புகை மற்றும் மதுவையும் குறைத்துக் கொண்டாராம் சல்மான்.

புகை

புகை

சில சமயம் புகைக்க வேண்டும் என்ற பேராவல் வந்தாலும் கூட, வெறும் சிகரட்டை பற்றவைக்காமல் வாயில் வைத்து கொள்வாராம். இதனால், புகைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுபடுத்த முடிகிறது என சல்மான் கருதிகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Salman Khans Fitness Secret

Do you want to know about Salman Khan's Fitness Secret? read here in tamil.
Story first published: Thursday, May 19, 2016, 10:09 [IST]
Desktop Bottom Promotion