For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

7 நாட்களில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா? இந்த டயட் ஃபாலே பண்ணுங்க!

|

இவ்வுலகில் முடியாதது என எதுவுமில்லை. ஆனால், அதை நாம் செயற்கையாக செய்யாமல், இயற்கையாக செய்து முடிக்க வேண்டும். முக்கியமான ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில். உடல் எடையையும் வேகமாக குறைக்கலாம். ஆனால், அதற்கு ஏற்ற டயட் மற்றும் பயிற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.

How To Lose 8 Kgs Weight In 7 Days

இந்த பவுடர் தினமும் சாப்பிட்டால் ஸ்லிம்மாகலாம் என்பதெல்லாம் வெறும் வணிகம் சார்ந்தவை. அவற்றால் எந்த பயனும் அடைய முடியாது. இனி, 7 நாட்களில் 8 கிலோ வரை உடல் எடை குறைக்க பயனளிக்கும் டயட் பற்றிப் பார்க்கலாம்...

நாள் 1:

முதல் நாள் பழங்கள் டயட். உங்களுக்கு பிடித்தமான எந்த பழமாக இருந்தாலும் நீங்கள் சாப்பிடலாம். ஆனால், இந்த முதல் நாளில் வாழைப்பழம் சாப்பிடுவதை மட்டும் தவிர்த்துவிடுங்கள். மேலும், 8 - 12 கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும். இந்த முதல் நாளில் வேறு எந்த உணவையும் தொடக்கூடாது, வேக வைத்த காய்கறிகளும் கூட.

நாள் 2:

இரண்டாம் நாள் காய்கறி டயட். உங்களுக்கு பிடித்த காய்கறிகளை பச்சையாக அல்லது வேகவைத்து உண்ணுங்கள். உருளைக்கிழங்கு கூட நீங்கள் உட்கொள்ளலாம், இதில் கலோரி குறைவு தான். பீன்ஸ், கேரட், ப்ரோக்கோலி, வெள்ளரி, வேகவைத்த புடலங்காய் மற்றும் பூசணி, கீரை, வேகவைத்த முட்டைக்கோஸ் போன்றவை சிறந்த உணவுகள். நாள் முழுக்க 8 - 12 கிளாஸ் நீர் குடிக்க மறக்க வேண்டாம்.

நாள் 3:

மூன்றாம் நாள் பழங்கள் மற்றும் காய்கறிகள். பழங்கள், காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். வாழைப்பழம், உருளைக்கிழங்கை மூன்றாம் நாள் தவிர்த்துவிடுவது நல்லது. காலையில் காய்கறி, மதியம் பழங்கள், மாலை காய்கறி, இரவு பழங்கள் என மாறி, மாறி எடுத்துக் கொள்ளுங்கள்.

நாள் 4:

நான்காம் வாழைப்பழம் மற்றும் பால் டயட். நான்காவது நாள் முழுக்க வெறும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் நீங்கள் உட்கொள்ள வேண்டும். 8-10 வாழைப்பழம் மற்றும் மூன்று கிளாஸ் பால் போதுமானது. சற்று பசிப்பது போல உணர்வு வெளிப்படும்.

எனவே, சீரான நேர இடைவேளையில் வாழைப்பழம், பால் உட்கொண்டு வர வேண்டும். காலை, மதியம், மாலை, இரவு என வேளைக்கு இரண்டு வாழைப்பழம் மற்றும் இடையிடையே பால் குடித்து வாருங்கள்.

நாள் 5:

ஐந்தாம் நாள் தக்காளி டயட். ஒரு கப் சாதம், 6 - 7 தக்காளி தான் உங்கள் உணவு. தக்காளியில் இருந்து யூரிக் அமிலம் உற்பத்தியாகும் என்பதால், ஐந்தாம் நாள் டயட்டின் போது 12 -15 கிளாஸ் நீர் குடிக்க வேண்டியது அவசியம்.

நாள் 6:

மதியம் மட்டும் ஒரு கப் சாதம் எடுத்துக் கொள்ளுங்கள். மற்ற வேளைகளில் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மறக்காமல் எல்லா நாளும் 8-12 கிளாஸ் நீர் பருக வேண்டும். இதனால், உங்கள் உடலில் செரிமானம் சீராகும், உடற்சக்தி அதிகரிக்கும். உடல் உறுப்புக்கள் சீராக இயங்க துவங்கும்.

நாள் 7:

ஏழாவது மற்றும் கடைசி நாளில் மதியம் ஒரு கப் சாதமும். மற்ற வேளைகளில் உங்களுக்கு பிடித்தமான பழங்கள், காய்கறிகள் உட்கொள்ளலாம். ஜூஸாக கூட குடியுங்கள். நீங்கள் கடைபிடித்து வந்த இந்த ஏழு நாள் டயட்டில் இது தான் கொஞ்சம் வாய்க்கும், வயிற்றுக்கும் ருசியாக அமையலாம்.

குறிப்பு!

ஐந்தாம் நாள் தவிர மற்ற ஆறு நாட்களும் கட்டாயம் 8-12 கிளாஸ் நீர் குடிக்க வேண்டும். மற்றும், ஐந்தாம் நாள் தக்காளி டயட்டின் போது 12 -15 கிளாஸ் நீர் குடிக்க வேண்டும்.

கண்டிப்பாக இந்த ஏழு நாள் டயட்டின் கடைசியில் உங்கள் உடல் எடையில் 8 கிலோ வரை உடல் எடை குறைந்திருக்கும். தினமும், காலை / மாலை 30 - 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து வந்தால் கண்டிப்பாக நல்ல மாற்றம் காண முடியும்.

English summary

How To Lose 8 Kgs Weight In 7 Days

How To Lose 8 Kgs Weight In 7 Days, try this seven days diet plan.
Desktop Bottom Promotion