For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காலையில் குடிக்கக்கூடாத பானங்கள்!

By Maha
|

தினமும் காலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறேன் என்று பழச்சாறுகளை பருகுபவரா? பழச்சாறுகள் உடல் எடையை அதிகரிக்காது என்று நினைப்பவரா? காலையில் காபி, டீக்கு பதிலாக, பழச்சாறுகளை பருகுபவர்கள் தான் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிலர் காலையில் புரோபயோடிக் பானங்களைப் பருகுவார்கள். ஆனால் இந்த புரோபயோடிக் பானங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துமே தவிர, உடல் எடையைக் குறைக்க உதவாது. மாறாக புரோபயோடிக் பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரை, பவுடர் பால், செயற்கை இனிப்பூட்டிகள் போன்றவை உடலில் கலோரிகள் அளவைத் தான் அதிகரிக்கும்.

எனவே நீங்கள் உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை காலையில் பருகுவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனிப்பு லஸ்ஸி

இனிப்பு லஸ்ஸி

வட மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் லஸ்ஸி மிகவும் பிரபலமான ஓர் பானம். இந்த பானமானது தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து செய்யப்படுவது. இந்த பானத்தில் கொழுப்புக்களும், சர்க்கரையும் உடல் எடையை மிகவும் வேகமாக அதிகரிக்கும் அளவில் நிறைந்துள்ளது. அதிலும் ஒரு டம்ளர் லஸ்ஸியில் 159 கலோரிகள் இருக்கும்.

சாக்லேட் அல்லது பாதாம் பால்

சாக்லேட் அல்லது பாதாம் பால்

தற்போது பாதாம் பால் அல்லது சாக்லேட் பாலைப் பருகுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஆனால் கடைகளில் விற்கப்படும் பாதாம் பவுடர் மற்றும் சாக்லேட் பவுடரை பாலில் சேர்த்து கலந்து பருகினால், அதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை சுவையூட்டிகளால் உடல் பருமனைத் தான் சந்திக்கக்கூடும். ஒரு டம்ளர் சாக்லேட் அல்லது பாதாம் பாலில் 158 கலோரிகள் இருக்கும்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

பழங்களை எப்போதும் அப்படியே சாப்பிட்டால் தான் அதன் முழுமையான பலனைப் பெற முடியும். அதனை ஜூஸ் வடிவில் தயாரித்துப் பருகும் போது, அதில் சுவைக்காக சர்க்கரையை சேர்க்க நேரிடும். இதனால் அந்த பழச்சாறு உடலுக்கு நன்மையைக் கொடுப்பதற்கு பதிலாக, தீமையைத் தான் விளைவிக்கும். அதிலும் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் 220-க்கும் அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே எப்போது பழங்களை சாறு வடிவில் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

எருமை பால்

எருமை பால்

சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரு டம்ளர் எருமை மாட்டுப் பாலில் 280 கலோரிகளும், 16.81 கிராம் கொழுப்புக்களும் உள்ளது. இதற்கு மேல் ஏதாவது சொல்ல வேண்டுமா என்ன?

வாழைப்பழ மில்க் ஷேக்

வாழைப்பழ மில்க் ஷேக்

நீங்கள் உடல் எடை அதிகரிக்க வேண்டாம் என நினைத்தால், வாழைப்பழத்தையும், பாலையும் ஒன்றாகப் பருகாதீர்கள். ஏனெனில் ஒரு வாழைப்பழத்தில் மட்டும் 108 கலோரிகள் உள்ளது. அப்படியெனில் ஒரு டம்ளர் வாழைப்பழ மில்க் ஷேக்கில் எவ்வளவு கலோரிகள் இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

ஸ்மூத்தி

ஸ்மூத்தி

பலரும் ஸ்மூத்தி மிகவும் ஆரோக்கியமான பானமாக கருதுவார்கள். ஆனால் அதில் தான் கலோரிகளும், கொழுப்புக்களும் அதிகமான அளவில் இருக்கும். ஒரு டம்ளர் ஸ்மூத்தியில் 145 கலோரிகள் இருக்கும்.

வேறு என்ன பருகுவது?

வேறு என்ன பருகுவது?

உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளவும் நினைத்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்களுக்கு பதிலாக, வேறு சில பானங்கள் உள்ளன. அவற்றைப் பருகுங்கள். நிச்சயம் உடல் எடை குறைவதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.

தேன்-பட்டை டீ

தேன்-பட்டை டீ

ஒரு டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் குடித்து வர வேண்டும். வேண்டுமானால், இத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலை சுத்தமாகவும், வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கவும் வேண்டுமானால், தினமும் காலையிலும், மாலையிலும் ஒரு டம்ளர் க்ரீன் டீயைப் பருகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Give Up These Morning Drinks To Avoid Gaining Weight!

If you are so keen to lose that stubborn fat and shed those extra kilos from your body, then avoiding drinking these drinks in morning:
Story first published: Thursday, May 19, 2016, 10:46 [IST]
Desktop Bottom Promotion