For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெட்டபாலிசத்தை அதிகரித்து எடையை குறைக்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

|

ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது என்று அனைவருக்கும் தெரியும். ஒருவர் ஆரோக்கியமாக இருக்க, காலை உணவை தவிர்க்காமல் இருந்தால் போதும் என்றும் நினைக்கின்றனர். ஆனால், அதற்கு காலை வேளையில் சாப்பிடும் உணவில் குறிப்பிட்ட சத்துக்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக சரிவிகித உணவை காலையில் சாப்பிட்டால், நீண்ட நேரம் வயிறு நிறைந்திருப்பதோடு, உடலின் மெட்டபாலிசம் மேம்பட்டு, உடல் எடை வேகமாக குறைய உதவியாக இருக்கும்.

எனவே தமிழ் போல்ட்ஸ்கை மெட்டபாலிசத்தை அதிகரித்து எடையை வேகமாக குறைக்க காலையில் எம்மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என பட்டியலிட்டுள்ளது.

இதனை ஒருவர் மனதில் கொண்டு காலை வேளையில் பின்பற்றி வந்தால், உடனடியாக உடலில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் உணவுகள்

உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஓர் சத்து தான் புரோட்டீன். எப்போது வயிறு காலியாக உள்ளதோ, அப்போது க்ரெலின் வெளியிடப்பட்டு, அது மூளை செல்களுக்கு பசியுணர்வை அதிகரிக்குமாறு சமிக்ஞையை அனுப்பி, கேஸ்ட்ரிக் அமிலத்தின் உற்பத்தியை அதிகரித்து, பசியுணர்வை மேம்படுத்தி, கண்டதை சாப்பிடத் தூண்டும்.

ஆனால் புரோட்டீன் உணவை காலையில் சாப்பிட்டால், க்ரெலின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, நீண்ட நேரம் வயிறு நிறைந்திக்கும். எனவே புரோட்டீன் உணவுகளான இட்லி, நட்ஸ், தயிர், வேக வைத்த முட்டை, வேர்க்கடலை வெண்ணெய் போன்றவற்றை காலையில் சாப்பிடுங்கள்.

இனிப்புகளைத் தவிர்க்கவும்

இனிப்புகளைத் தவிர்க்கவும்

இனிப்பு நிறைந்த காலை உணவுகளான செரில்கள், லோஃப் பிரட் போன்றவற்றை காலையில் சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு உடனே அதிகரிக்கும். ஆகவே இந்த மாதிரியான உணவுகளை எக்காரணம் கொண்டும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள். இதனால் தீவிர விளைவைத் தான் அனுபவிக்கக்கூடும்.

கொழுப்புக்களை சேர்க்கவும்

கொழுப்புக்களை சேர்க்கவும்

நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்க வேண்டுமானால், காலை உணவில் சிறிது நல்ல கொழுப்புக்களை சேர்க்க வேண்டியது அவசியம். மேலும் நல்ல கொழுப்புக்களை காலையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படலாம்.

அதற்கு நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளான அவகேடோ, தேங்காய் எண்ணெய், பாதாம் வெண்ணெய், ஆளி விதை எண்ணெய், விதைகள் மற்றும் நட்ஸ் போன்றவற்றில் எதையேனும் சாப்பிடலாம்.

பழம் மற்றும் காய்கறிகளை சேர்க்கவும்

பழம் மற்றும் காய்கறிகளை சேர்க்கவும்

பழங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை குடலியக்கத்தை சீராக்கும். எனவே காலையில் சிறிது பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு சாலட் செய்து ஒரு பௌல் சாப்பிடுங்கள்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

தற்போது ஓட்ஸ் அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது. இத்தகைய ஓட்ஸ் உடல் எடையைக் குறைக்க உதவுவதாக நிறைய ஆய்வுகள் கூறுகின்றன.

ஏனெனில் ஓட்ஸ் மெதுவாக கார்போஹைட்ரேட்டுகளை வெளியிடும் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, இன்சுவின் அளவை சீராகப் பராமரிக்கும். உடலில் இன்சுலின் அளவு சீராக இல்லாவிட்டால், அது கொழுப்புக்களின் தேக்கத்திற்கு வழிவகுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods You Need To Put In Your Breakfast To Speed Up Metabolism and Help You Burn Belly Fat

A healthy breakfast offers numerous health benefits, as it can help you lose weight, keep you full longer, provide the energy needed for the entire day. Just try these 5 suggestions and you will instantly feel the improvements.
Desktop Bottom Promotion